உள்ளடக்கத்துக்குச் செல்

மாயா சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயா சபையின் காட்சி

மாயா சபா (Mayasabha) என்பது இந்திரப்பிரஸ்தம் நகரத்தை நிறுவுவதற்காக காண்டவ வனத்தை அருச்சுனன் மற்றும் கிருஷ்ணர் சேர்ந்து எரித்துக் கொண்டிருந்தனர். காண்டவ வனத் தீயிலிருந்து தன் உயிரைக் காக்க வேண்டி, தானவர்[1] குலத்தைச் சேர்ந்த மயன் எனும் கட்டிடக்கலைஞர், கிருஷ்ணார்ஜுனர்களிடம் முறையிடுகிறார்.[2] கிருஷ்ணார்ஜுனர்களிடம் அடைக்கலம் பெற்ற மயன், கிருஷ்ணரின் வேண்டுகளின்படி, இந்திரப்பிரஸ்தத்தில் மாயா ஜாலங்கள் நிறைந்த ஒரு அரண்மனையை கட்டித் தருகிறான்[3]. இது தொடர்பான செய்திகள் மகாபாரதம் இதிகாசத்தின் சபா பருவத்தின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

கட்டுமானம்

[தொகு]

5,000 முழம் கொண்ட அழகிய, மாயா ஜாலங்கள் நிறைந்த மாயா சபையைக் கட்ட மயன் கயிலை மலை மற்றும் விருசப மலைகளிலிருந்து கொண்டு வந்த தங்கம் மற்றும் இதர கட்டுமானப் பொருட்களைக் கொண்டு மாயா சபையை 14 மாதங்க்ளில் நிறுவினார். இம்மாயா சபையின் தூண்கள் தங்கத்தால் செய்யப்பட்டு, சுவர்கள் நவரத்தினங்களால் இழைக்கப்பட்டது. தரை முழுவதும் பல வண்ன பளிங்குக்கற்களால் விரிக்கப்பட்டது. தரை முகம் பார்க்கும் கண்னாடி போன்று இருந்தன. ஆங்காங்கே இரத்தினக் குளங்களில் தங்கத் தாமரைகளும், நீர்வாழ் கோழிகளும் கொண்டிருந்தது.

மகாபாரதத்தில் மாயா சபையின் பங்கு

[தொகு]

மாயா சபை பாண்டவர்களின் செல்வச் செழிப்பை வெளிப்படுத்தியது. பாண்டவர்களின் மூத்தவனாகிய தருமனின் செல்வாக்கு கூடியது. இந்த மாயா சபை கொண்ட அரண்மனையில் பாண்டவர்கள் இராசசூய வேள்வியை நடத்தி காட்டியதால், பாண்டவர்களின் புகழ் பரத கண்டம் எங்கும் பரவியது. மேலும் இந்த மாயா சபையில் கிருஷ்ணருக்கு முதல் மரியாதை கிருஷ்ணருக்கு வழங்கக் கூடாது என்றதுடன் நிற்காது, கிருஷ்ணரை நூற்றுக்கும் மேல் தீட்டிப் பேசியதால், சிசுபாலனை கிருஷ்ணர் தனது சக்கராயுதத்தால் கொன்றார்.

மாயா சபையை பார்வையிட வந்த கௌரவர்களின் மூத்தோன் துரியோதனன் மிகவும் வியந்து போனான். பிரதிபலிக்கும் படிகத் தளங்களை நீர் என்று தவறாக நினைத்து விழுந்தான். இதனை அவமானமாக கருதிய துரியோதனன் பாண்டவர்கள் மீது பொறாமை கொண்டான். இச்சம்பவமே சூதாட்டத்திற்கும், பாண்டவர்கள் வன வாசம் சென்றதற்கும், இறுதியில் குருச்சேத்திரப் போர் நிகழ்வுகளுக்கு காரணமானது.[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vettam Mani (1975). "Story of Maya - Puranic Encyclopaedia" (in ஆங்கிலம்). Motilal Banarsidass – via Wisdom Library.
  2. "The construction and inauguration of Maya Sabha in Indraprastha – Vyasa Mahabharata". Vyasa Online (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 14 January 2025.
  3. The Mahabharata (in ஆங்கிலம்). Pitambar Publishing. 1997. p. 28. ISBN 978-81-209-0732-4. Retrieved 18 January 2025.
  4. Krishnaraj, Maithreyi, ed. (2012). Motherhood in India: Glorification without Empowerment? (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 118. ISBN 978-1-136-51779-2. Retrieved 18 January 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_சபை&oldid=4258957" இலிருந்து மீள்விக்கப்பட்டது