மாயா அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாயா அலி ( Maya Ali) என்று திரைப் பெயரால் அறியப்படும் மரியம் தன்வீர் (Maryam Tanveer), ஒரு பாகிஸ்தான் நடிகை, வடிவழகி மற்றும் ஊடக ஆளுமை ஆவார். இவர், பெரும்பாலும் பாகிஸ்தான் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படத் துறையில் தனது கதாபாத்திரங்களுக்காக அறியப்பட்டவர். அலி ஜாஃபர் ஜோடியாக 2018 ஆம் ஆண்டு வெளியான அதிரடி நாடகத் திரைப்படமான டீஃபா இன் ட்ரபிள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தனது இரண்டாவது திரைப்படத்தில் ஷெர்யார் முனாவர் [1] உடன் பரே ஹட் லவ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைபப்டம் 2019 ஆம் ஆஅண்டில் தியாகத் திருநாள் அன்று வெளியிடப்பட்டது மற்றும் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மாயா அலி 1987 ஜூலை 27 அன்று பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார். [2] இவரின் இயற்பெயர் மரியம் தன்வீர் அலி [3] ஆகும். [4]

மாயா அலி லாகூரின் குயின் மேரி கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷனில் முதுகலை [5] பட்டம் முடித்தார். [6] அலி பின்னர் வி.ஜே.வாக பணி செய்யத் தொடங்கினார். மாயா அலி விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். மற்றும் தனது பள்ளி அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கூடைப்பந்து, துடுப்பாட்டம், ஹாக்கி, டென்னிஸ் மற்றும் பூப்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியுள்ளார். [7]

தொழில்[தொகு]

மாயா அலி சமா டிவி, வக்ட் நியூஸ் மற்றும் துன்யா நியூஸ் ஆகியவற்றில் வீடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [8] தொலைக்காட்சி நாடகத் தொடரான துர்-இ-ஷாஹ்வார் (2012) மூலம் அலி திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் ஐக் நயீ சிண்ட்ரெல்லா மற்றும் அவுன் ஜாரா ஆகிய தொடர்களில் ஒஸ்மான் காலித் பட் உடன் நடித்தார். [9] [10] [11] [12]

2012 ஆம் ஆண்டில், ஹம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட துர்-இ-ஷெஹ்வார் நாடகத்தில் துணைக் கதாபாத்திரத்தில் இவர் நடித்தார்.[13] இந்த நாடகத்தில் மாயா அலியின் பெயர் மஹ்னூர் ஆகும். இதில் சிறிய கதாப்பாத்திரத்தில் தோன்றினார். இவர் துர்-இ-ஷாஹ்வரின் ( சனம் பலூச் ) தங்கையாக ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்தார். இவர் எப்போதும் தனது மூத்த சகோதரியை மதித்து நடக்கும் ஓர் பெண்ணாக அதில் நடித்திருப்பார். இந்த நாடகத்தை ஹைசம் உசேன் இயக்கியுள்ளார.உமேரா அகமது எழுதியுள்ளார்.

ஜியோ தொலைக்காட்சியில், துர்-இ-ஷெஹ்வார் ஒளிபரப்பப்பட்ட பிறகு ஐக் நயீ சிண்ட்ரெல்லா இவரது நடிப்பில் வெளிவந்த அடுத்த நாடகம் ஆகும். மேலும் இந்த நாடகத்தில் ஒஸ்மான் காலித் பட் மற்றும் பைசன் கவாஜா ஆகியோருக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த நாடகத்தில் மாயாவின் பங்கு மீஷா (சிண்ட்ரெல்லா). இந்த நாடகத்தை ஹைசாம் உசேன் இயக்கியுள்ளார் மற்றும் பைசா இப்திகார் எழுதியுள்ளார்.

2013 ஆம் ஆண்டில் ஐக் நயீ சிண்ட்ரெல்லாவுக்குப் பிறகு, ஹெய்சம் உசேன் இயக்கத்தில் மாயா மீண்டும் அவுன் ஜாராவின் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இந்த நாடகத்தை பைசா இப்திகார் எழுதியுள்ளார். இதில், அவுன் கதாபாத்திரத்தில் நடித்த ஒஸ்மானுக்கு ஜோடியாக மாயா அலி, ஜரா வேடத்தை ஏற்று நடித்தார். [14] .

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவருக்கு, அஃப்னன் என்ற ஒரே சகோதரர் மட்டுமே உள்ளார். [15] இவர் 2016 இல் தனது தந்தையை இழந்தார். [16] . இவர் தனது தாயை மிகவும் நேசிக்கிறார். மேலும் தனது தாயின் நிழல்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்.[17]

பிற வேலை மற்றும் ஊடகப் பணிகள்[தொகு]

மாயா அலி, ஷௌகத் கானும் நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் விளம்பர தூதராக உள்ளார் [18]இளம் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாயா அலி வெவ்வேறு நிறுவனங்களுக்கு வருகை தருகிறார். இவர் மூன்று நாட்கள் பிரச்சாரத்தில் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுள்ளார். மாணவர்களுடன் பேசிய மாயா அலி, ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் இறக்கின்றனர், இருப்பினும் இது ஆரம்ப கட்டத்திலேயே எளிதில் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொண்டால், புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்கிறார். அடிமட்டத்தில் உள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இவர் வலியுறுத்தினார் [19] . இவர் பிப்ரவரி 7, 2017 இல் மிலன் என்ற ஈத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் [20]

லக்ஸ், க்யூமொபைல், திவா பாடி ஸ்ப்ரே, ராயல் ஃபேன் போன்ற பல நிறுவனங்களின் தூதராக பணியாற்றுகிறார்.

குறிப்புகள்[தொகு]

 1. NewsBytes. "Maya Ali to star opposite Sheheryar Munawar in Paray Hut Love" (en).
 2. “Maya Ali – Pakistani Actress, Model – Biography, Dramas, Work”, on July 13, 2018
 3. “Biography of Gorgeous & Talented Actress Maya Ali”, “fashion360”, December 12, 2015
 4. “Date of Birth of Top Pakistani Actresses to say them Happy Birthday”,
 5. “Maya Ali Height, Weight, Age, Boyfriend, Husband, Family, Wiki & Biography”, “Much Feed”,
 6. “Maya Ali – Biography, Age, Family, Sister, Husband, Dramas”, “Review.it”, July 1, 2017
 7. SAMA “MAYA ALI BIOGRAPHY – EARLY LIFE, EDUCATION, CAREER AND MUCH MORE”, “Folder.pk”, May 28, 2018
 8. "THIS Pakistani beauty will debut in Akshay Kumar's next remake of superstar Vijay's Kaththi!" (27 June 2016).
 9. ""People in Pakistan are praising Kapoor & Sons; I think we can make better dramas than this"". 3 April 2016. http://tns.thenews.com.pk/people-pakistan-praising-kapoor-think-can-make-better-dramas/. 
 10. "In conversation with Pakistan's new jori #1: Diyar-e-Dil's Osman Khalid Butt & Maya Ali". 28 October 2015. http://images.dawn.com/news/1174116. 
 11. "Aun Zara: The perfect family show for Ramazan!". 11 July 2013. http://blogs.tribune.com.pk/story/18104/a. 
 12. "Working with Maya Ali is both easy and challenging: Osman Khalid Butt". 24 May 2016. https://tribune.com.pk/story/1109351/w. 
 13. Durr-e-Shehwar Hum Tv Drama, Cast, Timings, And Schedule (in ஆங்கிலம்), 2019-11-18 அன்று பார்க்கப்பட்டது
 14. admin (2014-01-28). "Maya Ali! A Career Review" (en-US).
 15. Sofia. “Maya Ali Family Pictures”, “Style.pk”,
 16. Tanweer, Maryam. “Maya Ali”, Pakistan Encyclopedia”, January 18, 2017
 17. “Date of Birth of Top Pakistani Actresses to say them Happy Birthday”,
 18. Nimra (2016-10-22). "Maya Ali at Shuakat Khanum Breast Cancer Awareness Campaign" (en-US).
 19. "Maya Khan on breast cancer awareness campaign" (en) (2019-10-31).
 20. Milan 7 February 2017 | Maya Ali - Aplus (in ஆங்கிலம்), 2019-11-21 அன்று பார்க்கப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_அலி&oldid=2879115" இருந்து மீள்விக்கப்பட்டது