மாயாவி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாயாவி என்ற புனைபெயரில் எழுதிய எஸ். கே. இராமன் தமிழ்ச் சிறுகதை, புதின ஆசிரியர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் செய்தி ஒலிபரப்புப் துறையின் பம்பாய் கிளையில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இளமையும் படைப்புகளும்[தொகு]

இவர் செங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த சாம்பூர் வடகரை எனும் ஊரில் 1917 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஏறத்தாழ 150 சிறுகதைகளும் 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவரது முதல் சிறுகதை, ஜாதி வழக்கம் என்பது. இக்கதைப் பலராலும் பாராட்டப்பட்டது. சாமுண்டியின் சாபம் எனும் தலைப்பில் உள்ள சிறுகதைகள்,அன்பின் உருவம் எனும் தலைப்பில் உள்ள நாவல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நாவல்கள்[தொகு]

  • அகதி
  • மக்கள் செல்வம்
  • சலனம்
  • ஒன்றே வாழ்வு

உசாத்துணைகள்[தொகு]

  • ஏ. சி. செட்டியார் (தொகுப்பு) "சிறுகதைக் களஞ்சியம்-தொகுதி1" சாகித்திய அக்காதமி-2000.
  • முனைவர் தேவிரா," தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்" ஸ்ரீநந்தினி பதிப்பகம்-2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாவி_(எழுத்தாளர்)&oldid=2637970" இருந்து மீள்விக்கப்பட்டது