மாயர் எண் முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயர் எண்குறிகள்

மாயர் எண்குறி முறைமை (Maya numeral system) என்பது முற்கொலம்பிய மாயர் நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட இருபதின்ம எண்குறி முறைமை ஆகும்.

இந்த எண்குறிகள் மூன்று குறியீடுகளால் ஆனவை; சுழி எண் (கூடு வடிவம், மிஅக மேற்பகுதியில் அமைந்த கூட்டு முகடு . என் ஒன்று புள்ளி ஆகும். எண் ஐந்து ஒரு கிடைக்கோடு ஆகும். எடுத்துகாட்டாக, பதின்மூன்று கிடை வரிசையில் மூன்று புள்ளிகளும் மேலே ஒன்றின் மேலொன்றாக அடுக்கப்பட்ட இரண்டு கிடைக்கோடுகளாலும் குரிக்கப்படுகிறது.

19 ஐவிட பெரிய எண்கள்[தொகு]

400கள்

1

12

20கள்

1

1

16

1கள்

13

9

5

33 429 5125


19 க்குப் பின் வரும் எண்க:ள் 20 இன் அடுக்கால் குத்துநிலையில் எழுதப்படும். எடுத்துகாட்டாக, முப்பத்து மூன்று மூன்று புள்ளிகளுக்கு மேலுள்ள ஒரு புள்ளியாலும் மேலும் இவை அனைத்தும் இருகோடுகளுக்கு மேலாகவும் இருக்கும். இவற்றில் முதல் புள்ளி இருபதை அல்லது "1×20" ஐக் குறிக்கும் இது மூன்று புள்ளிகளோடும் இரு கோடுகளோடும் அல்லது பதின்மூன்றுடன் கூட்டப்படும். எனவே, (1×20) + 13 = 33. 202 அல்லது 400 அடைந்ததும், (203 அல்லது 8000 எனும் மற்றொரு வரிசை தொடங்கும். பின்னர் 204 அல்லது 160,000 வ்ர, இப்படியே தொடரும்). எனவே 429 என்ற எண் ஒரு புள்ளியாலும் அதற்கு ஒரு புள்ளியும் அதற்கு மேல் நான்கு புள்லிகளும் ஒருகோடும் அமையும். எனவே (1×202) + (1×201) + 9 = 429. இந்த எண்குறி முறைமையின் இருபதின்ம அடுக்கு அரபு எண்குறி முறைமையைச் சார்ந்த பதின்ம அடுக்கைப் போன்றதே.[1]

கோடு, புள்ளி மட்டுமன்றி, மாயர் எண்குறிகளில் முக வடிவக் கீறலோ படமோ பயன்படுவதுண்டு.முக வடிவக் கீறல் அந்த எண்ணுக்குரிய தெய்வத்தைக் குறிக்கும். முக வடிவக் கீறல் வகை எண் அருகலாகவே பயன்படுகிறது. இது மிக விரிவான நினைவுச் சின்னப் பொறிப்புகளில் மட்டுமே அமையும்.

கூட்டலும் கழித்தலும்: 20 ஐவிடச் சிறிய எண்களைக் கூட்டுவதும் கழிப்பதும் மாயர் எண்குறிகளில் செய்வது மிக எளியதாகும். கூட்டல் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ல எண்குறிகளைக் கூட்டி செய்யப்படுகிறது:

கூட்டும்போது ஐந்துக்கும் மேற்பட்ட புள்ளிகள் அமைந்தால், ஐந்து புள்ளிகளை நீக்கிவிட்டு மேலே ஒரு கோடு பதிலியாகப் போடப்படும். ஐந்துக்கும் மேற்பட்ட கோடுகள் அமைந்தால் ஐந்து கொடுகளை நீக்கிவிட்டு பதிலியாக மேலே அடுத்த வரிசையில் ஒரு புள்ளி இடப்படும்.

இப்படியே கழித்தலில்,கழிபடு எண் குறியீடுகளில் இருந்து கழிப்பெண் குறியீட்டுக் கூறுகளை நீக்கவேண்டும்:

கழிபடு எண்ணில் போதுமான புள்ளிகள் இல்லாவிட்டால், அதன் மேல் வரிசையின் ஒருகோடு ஐந்து புள்ளிகளால் பதிலிடப்படும். போதுமான கோடுகள் இல்லாவிட்டால் அதன் மேல் வரிசையின் ஒரு புள்ளி நீக்கப்பட்டு ஐந்து கோடுகளால் பதிலிடப்படும்.

சுழி[தொகு]

கால அட்டவணையில்[தொகு]

மொயாரா சுதேலா 1 இல் உள்ள கீறலின் மூன்று நிரைகளின் விவரிப்பு. இடது நிரை மாயர் எண்குறிகளைப் பயன்படுத்துகிறது. இது பொ. மு 156 அல்லது 8.5.16.9.7 எனும் நெடுங்கால திகதியைக் குறிக்கிறது.

குறிப்புகள்[தொகு]

  1. Saxakali (1997). "Maya Numerals". Archived from the original on 2006-07-14. பார்க்கப்பட்ட நாள் 2006-07-29.

500

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Maya numerals
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயர்_எண்_முறைமை&oldid=3812465" இலிருந்து மீள்விக்கப்பட்டது