மாயக் கண்ணாடி
| மாயக்கண்ணாடி | |
|---|---|
| இயக்கம் | சேரன் |
| தயாரிப்பு | சுப்பு அருணாச்சலம் |
| கதை | சேரன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சேரன் நவ்யா நாயர் ஆர்யா |
| விநியோகம் | செல்லமணி |
| வெளியீடு | 14 ஏப்ரல் 2007 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாயக்கண்ணாடி 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை சேரன் இயக்கி நடித்தார். அவருடன் நவ்யா நாயர், ஆர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- சேரன்- குமார்
- நவ்யா நாயர்- மகேஸ்வரி
- சரத்குமார்-சரத்குமாராக
- ஆரியா- ஆரியாவாக
- ரஞ்சிதா- ரஞ்சிதாவாக
- மாளவிகா- மாளவிகாவாக
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "‘உழைப்பின் விதை போடாமல் வெற்றியை அறுவடை செய்ய நினைப்பது தவறு’ என்று இளைஞர்களுக்கு மெஸேஜ் சொல்ல நினைத்திருக்கிறார் சேரன். ஆனால், அதற்கு மாறாக கனவுகளோடு போராடும் இளைஞன் தனக்கு வாய்த்த தொழிலிலேயே வாழ்க்கையை ஓட்டுவதுதான் சரி என நெகடிவ் மெஸேஜ் அல்லவா சொல்லி விட்டார்.... கதை சொல்லும் பாணியில் ரூட்டை மாற்றுவது துணிச்சலுக்கு அடையாளம் தான். ஆனால், அந்தப் புது ரூட்டிலும் தன் முத்திரையைப் பதித்திருந்தால் தாராளமாகப் பாராட்டியிருக்கலாம். மாயக்கண்ணாடியே மறுபடியும் எங்கள் சேரனைக் காட்டு!" என்று எழுதி 39100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமா விமர்சனம்: மாயக் கண்ணாடி". விகடன். 2007-04-25. Retrieved 2025-05-24.