உள்ளடக்கத்துக்குச் செல்

மாமிசக்கறிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறைச்சி
இறைச்சியிலுள்ள ஊட்டச்சத்து
உணவாற்றல்916 கிசூ (219 கலோரி)
0.00 g
12.56 g
நிறைவுற்றது3.500 g
ஒற்றைநிறைவுறாதது4.930 g
பல்நிறைவுறாதது2.740 g
24.68 g
டிரிப்டோபான்0.276 g
திரியோனின்1.020 g
ஐசோலியூசின்1.233 g
லியூசின்1.797 g
லைசின்2.011 g
மெத்தியோனின்0.657 g
சிஸ்டைன்0.329 g
பினைல்அலனின்0.959 g
டைரோசின்0.796 g
வாலின்1.199 g
ஆர்ஜினின்1.545 g
ஹிஸ்டிடின்0.726 g
அலனைன்1.436 g
அஸ்பார்டிக் அமிலம்2.200 g
குளூட்டாமிக் காடி3.610 g
கிளைசின்1.583 g
புரோலின்1.190 g
செரைன்0.870 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(6%)
44 மைகி
(13%)
0.667 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
இரும்பு
(9%)
1.16 மிகி
சோடியம்
(4%)
67 மிகி
நீர்63.93 g

35 வீதமான எலும்புகளை விட்டு.
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

இறைச்சி (Meat) என்பது பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படும் விலங்குத் தசைகளைக் குறிக்கும்.[1] விலங்குகளின் தசைகள், மற்றும் அவற்றின் உறுப்புகளான நுரையீரல், கல்லீரல் போன்றவையும் இதில் அடங்கும். இறைச்சியை மட்டுமே உண்ணும் விலங்குகள் ஊனுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. மனிதர்கள் அனைத்துண்ணி என்பதால் இதனை உணவாக உட்கொள்கின்றனர்.[2][3][4]

இறைச்சி என்பது நீர், புரதம், கொழுமியம் மூலக்கூறுகளால் ஆனது. முன்பு இது பச்சையாக உண்ணக்கூடியதாக இருந்தாலும் பொதுவாக பல்வேறு வழிமுறைகளில் சமைத்த பின்னரோ அல்லது பதப்படுத்தியோ உண்ணப்படுகிறது. சமைக்கப்படாத இறைச்சியானது சில மணி நேரத்தில் கெட்டு அல்லது அழுகி விடும். சில நாட்களாயின் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை இறைச்சியில் பெருகி அதை அழித்துவிடும்.

வரலாறு

[தொகு]

முந்தைய மனிதர்களின் உணவில் கணிசமான விகிதத்தை இறைச்சி கொண்டிருந்ததாக தொல்லுயிரியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.[1]:2 பண்டைய வேட்டையாடிகள் மற்றும் இறைச்சி சேகரிப்பாளர்கள் அமைப்பு ரீதியான வேட்டையாடும் முறைகளைக் கொண்டு பெரிய விலங்குகளான காட்டெருது மற்றும் மான் போன்றவற்றை இறைச்சிக்காக நம்பியிருந்தனர்.[1]:2

பனி யுகத்தின் கடைசிக்கட்டங்களில் (கிமு 10,000) விலங்குகளை மனித இனம் பழக்கப்படுத்துதல் செயல் நிகழ்ந்ததற்கான தடயங்கள் நமக்கு கிடைக்கின்றன. திட்டமிடப்பட்ட அமைப்பியல் ரீதியான இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக விலங்குகளை வளர்த்தல் மற்றும் அவற்றைப் பெருக்குதல் போன்ற செயல்முறைகள் கடைபிடிக்கப்பட்டன. ஆரம்பகால நாகரிகங்களின் வளர்ச்சியுடன் தொடர்புடைய இந்த முறைகளே தற்பொழுதும் மனித இனம் இறைச்சிக்காக நம்பி இருக்கும் மூல ஆதாரமாகும்.

ஆட்டுக் கறியின் தொடை பகுதி
  • மேற்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செம்மறியாடு, கிமு 8 ஆவது ஆயிரமாவது ஆண்டின் முற்பகுதியிலிருந்தே, குடியேறிய விவசாயத்தை நிறுவுவதற்கு முன்னர் நாய்களின் உதவியுடன் வளர்க்கப்பட்டிருந்தது.[1]:3 கிமு 3500 –3000 ஆண்டு வாக்கில் பழங்கால மெசொப்பொத்தேமியா மற்றும் எகிப்தில் பல்வேறு செம்மறி ஆட்டினங்கள் தோன்றின.[1]:3 உலகில் தற்போது, 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆட்டினங்கள் உள்ளன.
  • கிமு 5000 ஆண்டு வாக்கில் மெசொப்பொத்தேமியாவில் குடியேற்ற விவசாயம் தொடங்கியதற்குப் பின் கால்நடை வளர்ப்பு துவங்கியது.[1]:5 கிமு 2500 ஆண்டில் பல்வேறு கால்நடை இனங்கள் தோன்றின.[1]:6 தற்போதைய கால்நடை இனங்கள் எல்லாம் அழிந்து விட்ட காட்டெருமை இனங்களில் இருந்து வந்த ஐரோப்பிய கால்நடையான மாடினங்களின் (Bos taurus (Cattle)), ஒரு திமில் இல்லா இனம் மற்றும் இந்திய நாட்டு மாட்டினங்களின் (Bos taurus indicus (Zebu)) தான் அந்த இனத்தின் வழி வந்தவைகளாகும்.[1]:5 மாட்டிறைச்சி கால்நடைகளின் இனப்பெருக்கம், கால்நடை உற்பத்திக்காக கால்நடை வளர்ப்புக்கு ஏற்றதாக மாடுகள் உற்பத்தி அல்லது விலங்குகளின் பயன்பாட்டிற்காக கால்நடைகளை உற்பத்தி செய்வது, பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கியது.
  • காட்டுப்பன்றிகளில் இருந்து பன்றிகள் தோன்றியதற்கான ஆதாரங்களை, நவீன கால அங்கேரியில்யிலும், உரோமிலும், கிமு 2500 ஆண்டில் இருந்த எரிக்கோவிலும், எகிப்திலும் இருந்து வந்த மண் பாண்டங்களில் காட்டுப்பன்றிகளின் சப்பிடபட்ட கரிகளில் இருந்து வந்த எலும்புகள் வெளிப்படுத்துகின்றன.[1] கிரேக்கோ - உரோமன் காலங்களில் பன்றி இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சிகள் ஆகியவை வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருந்தன.[1]:8 குறிப்பிட்ட இறைச்சி உற்பத்திக்காக மிகவும் பொருத்தமான இறைச்சியை உற்பத்தி செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், பன்றிகள் தீவிரமாக வளர்க்கப்படுகின்றன.[1]:9[5]
  • அந்தீசு மலைத்தொடரில் கினியா பன்றிகள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டன.[6]

யப்பான், அலாஸ்கா, சைபீரியா, கனடா, பரோயே தீவுகள், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள், இந்தோனேசியாவில் உள்ள இரண்டு சிறிய சமூகங்கள் ஆகியவற்றில், திமிங்கிலலங்கள் மற்றும் ஓங்கில்கள் இரண்டையும் பிடித்து, அவற்றின் ஒரு மொத்த பகுதி உடலும் சதைகளுக்காக வேட்டையாடுகின்றன மற்றும் உண்ணப்படுகின்றன.[7]

நுகர்வு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 Lawrie, R. A. (2006). Lawrie’s meat science (7th ed.). Cambridge: Woodhead Publishing Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84569-159-2. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. Robert E. C. Wildman, Denis M. Medeiros (2000). Advanced Human Nutrition. CRC Press. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8566-0. பார்க்கப்பட்ட நாள் October 6, 2013.
  3. Robert Mari Womack (2010). The Anthropology of Health and Healing. Rowman & Littlefield. p. 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7591-1044-1. பார்க்கப்பட்ட நாள் October 6, 2013.
  4. McArdle, John. "Humans are Omnivores". Vegetarian Resource Group. பார்க்கப்பட்ட நாள் October 6, 2013.
  5. Jerry Hopkins (23 December 2014). Strange Foods. Tuttle Publishing. pp. 8–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4629-1676-4.
  6. "A Guinea Pig for All Times and Seasons". The Economist. July 15, 2004. http://www.economist.com/node/2926169. பார்த்த நாள்: December 1, 2011. 
  7. "WHALING IN LAMALERA-FLORES" (PDF). பார்க்கப்பட்ட நாள் April 10, 2013.