மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே
| பாடல்: மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே படிமம்:மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே.mp3 |
"மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே" என்ற பாடலானது ஜெயசிக்குறு வெற்றிச்சமரின் போது வெளிவந்த போரிலக்கியப் பாடலாகும். புதுவை இரத்தினதுரை எழுதிய இப்பாடலை தமிழீழ இசைக்குழுவின் இசையில் பிறின்சி ரஞ்சித்குமார் மற்றும் தனுராஜ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலானது "ஜெயசிக்குறு பாடல்கள்" என்னும் பாடல் தொகுப்பில் இடம்பெற்றது. அக்காலகட்டத்தில் இப்பாடல் புலிகளின்குரல் வானொலியில் அடிக்கடி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முழுப் பாடல்
[தொகு]பல்லவி
மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப்
பூங்குயிலே ராகங்கள் பாடு - எங்கள்
மாங்குளத்தின் மேலே போகின்றபோது
மேகங்களே தாளங்கள் போடு
- நட்சத்திரங்களை எட்டித் தொடு - இது
- நாச்சியார் பூமியடி - ஜெய
- சிக்குறுக்கு மேலிடி போட்டவளே - நீ
- கொற்றவைத் தேவியடி
அனுபல்லவி
பாலை வெளியினில் காலை மலரெனப்
பூத்தவளே - தமிழ்
ஈழ நிலத்தினில் வீர உணர்வினைக்
கேட்டவளே
சரணம்
காலவடிவிற்கு ஆடைகட்டி - எங்கள்
கண்ணுக்குள் ஆடிடும் கோடைமழை
நீளவிழிகளில் தீயெழ தீயெழ
நின்று பகைவெல்லும் வீரத்திரை
- சிங்கப்படை பொடியானது - ஜெய
- சிக்குறு சிக்குண்டு போனது
மூளும் நெருப்பென நீயெழுந்து - பகை
முன்னெழுந்தாடியே நின்றவளே
காலின் விலங்குகள் தூள்படத் தூள்பட
கண்டியின் வீதியில் வென்றவளே
- சிங்கப்படை பொடியானது - ஜெய
- சிக்குறு சிக்குண்டு போனது