மாமன்
மாமன் | |
---|---|
![]() திரைப்படப் பதாகை | |
இயக்கம் | பிரசாந்த் பாண்டியராஜ் |
தயாரிப்பு | கே. குமார் |
திரைக்கதை | பிரசாந்த் பாண்டியராஜ் |
இசை | ஏசாம் அப்துல் வகாப் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | தினேஷ் புருசோத்தமன் |
படத்தொகுப்பு | கனேசு சிவா |
கலையகம் | இலார்க் சுடுடியோசு |
விநியோகம் | சிறீ குமரன் பிலிம்சு |
வெளியீடு | 16 மே 2025 |
ஓட்டம் | 15 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாமன் என்பது 16 மே 2025-இல் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்திற்கு நடிகர் சூரி கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.[2]
கதைச் சுருக்கம்
[தொகு]இன்பா திருச்சியில் வசிக்கும் ஒரு மதிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது ஒரே அக்கா கிரிஜா, திருமணமாகி பத்து ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருக்கிறார். இதனால் அவரது கணவர் இரவி, இரவியின் தாய் மற்றும் உறவினர்கள் கிரிஜாவைக் கிண்டல் செய்கின்றனர். இன்பா தன் அக்காவின் மீது அதீத பாசம் கொண்டவராக இருந்து, அவருக்கு ஆதரவாக இருக்கிறார்.இந்நிலையில் கிரிஜா கருவுறுகிறார். குடும்பத்தினர் மகிழ்ச்சியடைகின்றனர். மருத்துவப் பரிசோதனைக்காக கிரிஜாவுடன் மருத்துவமனைக்குச் செல்லும் சூரி, அங்கு உதவி மருத்துவராகப் பணியாற்றும் இரேக்காவைச் சந்திக்கிறார். இன்பாவின் அக்கா மீதான அன்பையும் பாசத்தையும் கண்டு ஈர்க்கப்பட்ட இரேக்கா அவர் மீது காதல் கொள்கிறார்.
கிரிஜாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தாய்மாமனான இன்பா குழந்தையை அதிக அன்புடன் பராமரிக்கிறார். குழந்தை தன் தந்தையை விட இன்பாவுடனே அதிக நேரம் செலவிடுகிறது. அதே ஊரில் மதிப்புடன் வாழும் சிங்கராயர் மற்றும் பவுனு இணையருக்கு குழந்தைகள் இல்லாததால், இன்பாவும் கிரிஜாவும் அவர்களைக் கவனித்துக் கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து இன்பாவிற்கும் இரேக்காவிற்கும் திருமணம் செய்து வைக்கின்றனர்.
திருமணத்திற்குப் பிறகு இன்பா குழந்தையை விட்டுப் பிரிந்தாரா? அக்காவிற்கும் மனைவிக்கும் இடையிலான பிரச்சினை தீர்ந்தனவா என்பதே கதையின் மீதிப் பகுதியாகும்.
நடிகர்கள்
[தொகு]- சூரி - இன்பா
- ஐஸ்வர்யா இலட்சுமி - இரேக்கா
- ராஜ்கிரண் - சிங்கராயர்
- சுவாசிகா - கிரிஜா, இன்பாவின் அக்கா
- பாலா சரவணன்
- பாபா பாசுகர் - இரவி
- விஜி சந்திரசேகர் - பவுனு
- நிகிலா சங்கர்
- கீதா கைலாசம்
தயாரிப்பு
[தொகு]மாமன் படத்தின் படப்பிடிப்பு திருச்சியிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் நடைபெற்றது.[3] இது கருடன் திரைப்படத்திற்குப் பிறகு அதே தயாரிப்பாளருடன் சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும்.[4] "மாமன் படத்தின் கதையை நான் கொரோனா காலகட்டத்தில் எழுதினேன்... இந்தப் படத்தின் கதையை எனது சொந்த வாழ்க்கையில் இருந்து எடுத்துள்ளேன்" என்று ஒரு பேட்டியில் சூரி தெரிவித்தார்.[5] "இதில் யாரும் வில்லன்கள் கிடையாது. அவரவர் பக்கம் சென்று அவரவருக்கான நியாயத்தைச் சொல்லியிருக்கோம்" என்று படத்தைப் பற்றி இயக்குநர் பிரசாந்த் கூறினார்.[6]
வரவேற்பு
[தொகு]மாமன் படத்திற்கு விமர்சனம் எழுதிய சினியுலகம் வலைதளம், "படம் முழுக்க எமோஷனல் காட்சிகள் மட்டுமே நிறைந்திருந்தது சற்று தொய்வு ஏற்படுத்துகிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், எமோஷனல் காட்சிகள் தான் இப்படத்திற்கு பலம் என்றாலும், அதே சமயம் அதுவே தான் பலவீனமாகவும் தெரிகிறது" என்று எழுதினர்.[7] இந்து தமிழ் திசை நாளிதழ் விமர்சனத்தில் "தாய்மாமனுக்கும் மருமகனுக்குமான ஆத்மார்த்தமான அன்பை மையப்படுத்தியும் அதற்குள் குடும்ப சென்டிமென்டைத் தூக்கலாகவும் கலந்து எழுதிய கதையை இயல்பாகப் படமாக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்" என்று எழுதினர்.[8] தினமலர் நாளிதழ், "பேய் படங்கள், திரில்லர் படங்கள் ஆக்ஷன் படங்கள் என பார்த்து பார்த்து சலித்த ரசிகர்களுக்கு பாசமலரை திரையில் காட்டி இருப்பது ரசிக்கும் படியாக உள்ளது. படத்தில் நடிகர்களை விட, பாசமும் எமோஷனும் போட்டி போட்டு நடித்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maaman (15)". British Board of Film Classification (in ஆங்கிலம்). 2025-05-15. Retrieved 2025-05-16.
- ↑ "Maaman first look OUT: Soori's film to have a release window in summer 2025". OTTPlay (in ஆங்கிலம்). Jan 17, 2025. Retrieved 2025-01-17.
- ↑ மலர், மாலை (2025-01-17). "சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு - The first look of Soori's 'Maaman' released". www.maalaimalar.com. Retrieved 2025-05-04.
- ↑ Jothika (2025-01-17). "சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு". Kalakkal cinema (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-05-04.
- ↑ Thangavel, Mohanraj (2025-05-07). "என் சொந்த வாழ்க்கையில் இருந்து கதை எடுத்து இருக்கேன்.. மாமன் படம் குறித்து மனம் திறந்த சூரி!". tamil filmibeat. Retrieved 2025-05-10.
- ↑ "உறவுகளின் முக்கியத்துவத்தை விவரிக்கும் 'மாமன்' , திரைச்செய்தி செய்திகள் - தமிழ் முரசு Cinema News in Tamil, Tamil Murasu". Tamil Murasu. 2025-04-21. Retrieved 2025-05-10.
- ↑ "மாமன் திரைவிமர்சனம்". Cineulagam. Retrieved 2025-05-20.
- ↑ "மாமன்: திரை விமர்சனம்". Hindu Tamil Thisai. 2025-05-18. Retrieved 2025-05-20.
- ↑ "மாமன் - விமர்சனம் {3/5} : மாமன் - தாயுமானவன் - Maaman". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2025-05-20.