மாப்பிள்ளை மனசு பூப்போல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாப்பிள்ளை மனசு பூப்போல
இயக்கம்குருவிக்கரம்பை சண்முகம்
தயாரிப்புஎஸ். ஜெயலட்சுமி
கதைகுருவிக்கரம்பை சண்முகம்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுநித்யா
படத்தொகுப்புவி. ராஜகோபால்
கலையகம்குரு கலைக்கூடம்
வெளியீடுஏப்ரல் 12, 1996 (1996-04-12)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாப்பிள்ளை மனசு பூப்போல 1996 ஆம் ஆண்டு பாண்டியராஜன் மற்றும் யுவராணி நடிப்பில், குருவிக்கரம்பை சண்முகம் இயக்கத்தில், எஸ். ஜெயலட்சுமி தயாரிப்பில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4].

கதைச்சுருக்கம்[தொகு]

மாணிக்கம் (பாண்டியராஜன்) மற்றும் ராஜா (ரஜனீஷ் குமார்) இருவரும் நண்பர்கள். நாட்டுப்புறப் பாடகர்களான இருவரும் நாட்டுப்புறப்பாடல் என்ற தலைப்பில் முனைவர் படிப்பில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். ராஜா தன் பாட்டியுடன் (எஸ். என். லட்சுமி) வசிக்கிறான். மாணிக்கம் தன் பெற்றோர்களுடன் (திடீர் கண்ணையா மற்றும் ஸ்ரீமதி) வசிக்கிறான். ராஜாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு அவன் தொடர்ந்து மோசமாக நடந்துகொள்ளத் தொடங்கினான். அவனது பாட்டியும் மாணிக்கமும் ராஜாவை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு அவனது நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டதால் அவன் குணமடைந்துவிட்டதாகக் கருதிய மருத்துவர் அவனை வீட்டிற்கு அனுப்பினார்.

ராஜா முற்றிலும் குணமடையவில்லை. எனவே அடிக்கடி மனநிலை பாதிப்படைந்து முரட்டுத்தனமாக நடந்துகொண்டான். இந்நிலையில் ராஜாவால் அவனது முனைவர் படிப்பின் இறுதியில் நடைபெறும் முக்கியமான நேர்காணல் மற்றும் வாய்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற இயலாது என்பதையறிந்த மாணிக்கம், தன் நண்பனுக்காக சில மோசடிகள் செய்து அவனைத் தேர்ச்சிபெறச் செய்கிறான்.

மாணிக்கம் அவனது முறைப்பெண்ணான பொன்னியைத் (யுவராணி) திருமணம் செய்ய முடிவாகிறது. பணக்காரரான ஆண்டித் தேவர் (மலேசியா வாசுதேவன்) தன் மகள் வசந்தியை (பாக்கிய ஸ்ரீ) ராஜாவுக்குத் திருமணம் செய்ய விரும்புகிறார். தன் நண்பனின் திருமணத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்டவனாக நடிக்க முடிவுசெய்கிறான் மாணிக்கம். இறுதியில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்கிறார்கள்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம்[5].

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 ஆத்து வந்த கிருஷ்ணராஜ், மனோ 5:32
2 மதுரையிலே எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. பி. பல்லவி 4:40
3 வட நாட்டில் ராஜகோபால், பி. ௭ஸ். சசிரேகா 5:00
4 அந்தி நேர கிருஷ்ணராஜ், சிந்து 5:03
5 நான் புத்தனும் தேவா 4:28

மேற்கோள்கள்[தொகு]

  1. "மாப்பிள்ளை மனசு பூப்போல".
  2. "மாப்பிள்ளை மனசு பூப்போல". Archived from the original on 2021-01-19. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
  3. "மாப்பிள்ளை மனசு பூப்போல". Archived from the original on 2004-08-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "மாப்பிள்ளை மனசு பூப்போல". Archived from the original on 2010-02-04. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. "பாடல்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பிள்ளை_மனசு_பூப்போல&oldid=3660657" இலிருந்து மீள்விக்கப்பட்டது