மாபூ பிரபஞ்சன்
மாபூ பிரபஞ்சன் Mpu Prapanca Empu Prapañca | |
|---|---|
| தேசியம் | |
| மற்ற பெயர்கள் | ஆசார்ய நடேந்திரா; வினாதா |
| பணி | 1.புத்த மதத்துறவி 2.தரும சத்யச ரிங் கசோகதன் உறுப்பினர் பழைய ஜாவானிய மொழி எழுத்தாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | நகரகீர்த்தாகம கையெழுத்துப் பிரதி |
| தந்தை | டாங் ஆசார்ய கனகமுனி |
மாபூ பிரபஞ்சன் அல்லது ஆசார்ய நடேந்திரா (ஆங்கிலம்: Mpu Prapanca; Dang Acarya Nadendra; பாலி மொழி: 'ꦩ꧀ꦥꦸꦥꦿꦥꦚ꧀ꦕ'; இந்தோனேசியம்: Empu Prapañca) என்பவர் நகரகீர்த்தாகமம் எனும் எழுத்துச்சுவடியை எழுதியவர் ஆவார். இந்தச் சுவடி பழைய ஜாவானிய மொழியில் எழுதப்பட்டது.[1]
இந்த நூல் மஜபாகித் பேரரசு மற்றும் பிற பண்டைய இந்து-ஜாவானிய இராச்சியங்களின் வரலாற்றைக் கூறுகிறது.
புத்த மதத்துறவியான மாபூ பிரபஞ்சன், இந்த வரலாற்றுச் சுவடியை 1365-ஆம் ஆண்டில் (அல்லது 1287 சக ஆண்டு) ஆயாம் உரூக் (Hayam Wuruk) என்பவருக்கு புகழுரை வழங்கும் வகையில் எழுதினார்.
பொது
[தொகு]மாபூ பிரபஞ்சன், அவருடைய காலத்தின் போது அவர் மிகவும் பிரபலமான கவிஞராக அறியப்பட்டார். அவருடைய பெயர் தற்போதைய நவீன இந்தோனேசியாவில் புகழ்பெற்ற நகரகீர்த்தாகமம் நூலின் ஆசிரியராகவும் அறியப்படுகிறது.
மாபூ (Mpu) என்பது 14-ஆம் நூற்றாண்டில், இந்தோனேசியாவின் இந்திய மயப் பேரரசுகளில், கலைஞர்கள், கைவினைஞர்கள் மற்றும் அறிஞர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மரியாதைக்குரிய சொல் ஆகும்.[2]
நகரகீர்த்தாகமம்
[தொகு]இந்தச் சுவடி பாலி தீவில் தேசவர்ணனா அல்லது தேசவர்ணம் (Desawarnana; நாட்டின் விளக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.[3] இந்தக் கவிதைச் சுவடி, கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பல சடங்குகளை விவரிப்பதன் மூலம் மஜபாகித் பேரரசில் இந்து-பௌத்தத்தின் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது.
நகரகீர்த்தாகமம் கையெழுத்துப் பிரதி பனை ஓலைகளில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கையெழுத்துப் பிரதி மஜபாகித்தின் தலைநகரைப் பற்றியும் விவரிக்கிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Malkiel-Jirmounsky, Myron (1939). "The Study of The Artistic Antiquities of Dutch India". Harvard Journal of Asiatic Studies (Harvard-Yenching Institute) 4 (1): 59–68. doi:10.2307/2717905.
- ↑ "An honorific title applied to artists (especially craftsmen, as famous krismaker Empu Gandring) and scholars (or poets as Empu Tantular, Empu Sedah, Empu Panuluh) in ancient Javanese history". Wiktionary, the free dictionary (in ஆங்கிலம்). 2 January 2025. Retrieved 22 February 2025.
- ↑ "C. C. Berg, "Maya's hemelvaart in het Javaanse Buddhisme," Verhandelingen der Koninklijke Nederlandse Akademie van Wetenschappen, Afd, Letterkunde, NR, LXXIV, Nos. 1-2 (1969), p. 679". ecommons.cornell.edu. Retrieved 23 February 2025.
சான்றுகள்
[தொகு]- Cœdès, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press.