உள்ளடக்கத்துக்குச் செல்

மான் கீ அவாசு பிரதிக்யா 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மான் கீ அவாசு பிரதிக்யா 2 (Mann Kee Awaaz Pratigya 2) என்பது ஒரு இந்திய நாடகத் தொலைக்காட்சித் தொடராகும், இது மார்ச் 15 முதல் ஸ்டார் பாரத்தில் ஒளிபரப்பப்பட்டது. [1] இது ஸ்டார் பிளஸில் ஒளிபரப்பப்பட்ட 2009 தொடரின் மான் கீ அவாசு பிரதிக்யாவின் தொடர்ச்சியாகும். [2] டைரக்டர் குட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் ராஜன் ஷாஹி தயாரித்த இதில் பூஜா கோர் மற்றும் அர்கான் பெல் ஆகியோர் நடித்திருந்தனர் . [3] [4]

கதை

[தொகு]

ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகுபிரதிக்யா, இப்போது பிரயாக்ராஜின் அரசு வழக்குரைஞராக உள்ளார். தாக்கூர் குடும்பம் இப்போது அனைத்து குற்றச் செயல்களையும் கைவிட்டு மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான வாழ்க்கையை நடத்துகிறது. சக்தியின் மகன்களான சமர் மற்றும் கிரீஷ் ஆகியோர் கர்வ் மீது கடும் பொறாமை கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் அவரை காரில் வைத்து பல்வந்த் தியாகியின் இளைய மகனைத் தாக்குகிறார்கள். கர்வ் இதனைப் பற்றி கிருஷ்ணனிடம் சொல்கிறார், ஆனால் இருவரும் அதை பிரதிக்யாவிடம் இருந்து மறைக்கிறார்கள். அவரது மகனின் மறைவால் மிகவும் வருத்தமடைந்த பல்வந்த், தனது மகனைக் கொன்றவர்களை பழிவாங்க முயல்கிறார். பல்வந்த் தனது மகனின் மரணத்திற்காக சட்ட ரீதியாக போராடுவதற்காக பிரதிக்யாவை ஒரு வழக்குரைஞராக நியமிக்கிறார். கிருஷ்ணன் குடும்பத்திலிருந்து உண்மையை மறைத்து, கர்வுக்கு எதிராக இருக்கும் அனைத்து ஆதாரங்களையும் அழிக்க முயற்சிக்கிறார்.

பிரதிக்யா ஆதாரங்களைச் சேகரிக்கத் தவறியபோது பல்வந்த் நிதானமற்றவராக உணர்கிறார் மற்றும் பிரதிக்யாவின் ஹோலி கொண்டாட்டத்தைக் கெடுக்கிறார். சஜ்ஜன் சிங், பல்வந்தை எதிர்கொண்டு அவனுடைய வரம்பிற்குள் இருக்கும்படி கேட்கிறார். மறுபுறம், கிருஷ்ணனின் நண்பர் ஆதர்ஷ் எனும் கதாப்பத்திரம் கோமலை விரும்புகிறார். கிருஷ்ணா தனது கூட்டாளிகளில் ஒருவரின் மீது முழுப் பழியினையும் சுமத்துகிறார், ஆனால் இந்த திட்டம் தோல்வியில் முடிகிறது.

மேலும், பல்வந்த் தனது மகனின் கொலைக்கு சக்தியை காரணமாகக் கூறுகிறார். விரைவில், பிரதிக்யா கார்வினுடைய விபத்தைப் பற்றி அறிந்து, அது ஒரு விபத்து என்றும் அது ஒரு கொலை அல்ல என்பதால் அதை மறைத்து தவறு செய்துவிட்டதாக குடும்பத்தினரிடம் கூறுகிறார். கிருவிற்கு எதுவும் நடக்காது என்று சத்தியம் செய்தபின் கிருஷ்ணன் பிரதிக்யாவை நம்புகிறான். பின்னர், பிரதிக்யா, கிருஷ்ணா மற்றும் கர்வ் ஆகியோர் நீதிமன்றத்திற்குச் சென்று கர்வைப் பற்றி கூறுகிறார்கள். நீதிபதி பிரதிக்யாவிடம், அவருக்கு ஏழு வயதாக இருந்ததால் இது ஒரு விபத்து என்று ஏற்றுக் கொள்ளப்படுவதாக கூறினார்.

ஆயினும்கூட, கிருஷ்ணன் ஆதாரங்களை மோசடி செய்ததற்காக சிறிது காலம் கைது செய்யப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டு பிரதிக்யா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விடைபெறும் போது, கோமல் பிரதிக்யாவை அறைந்து தனது கணவர் கைது செய்யப்பட்டதற்கு காரணம் நீ தான் எனக் குற்றம் சாட்டுகிறார். கிருஷ்ணா மருத்துவமனையில் இருப்பதாக சஜ்ஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள், கிருஷ்ணா காப்பாற்றப்படுகிறார்.

சில நாட்களுக்குப் பிறகு, கிருஷ்ணா மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டார், மேலும் கிருஷ்ணா விரைவாக குணமடைய பண்ணை வீட்டுக்குச் செல்ல முடிவு செய்கிறார். சிங் மாளிகையிலிருந்து பிரதிக்யாவை வெளியேற்ற கோமலுடன் ஒரு திட்டத்தை தயார் செய்கிறார் தக்குரைன். அவள் பிரதிக்யாவின் பழச் சாற்றில் நஞ்சினைக் கலக்கிறாள்.

மேலும், பிரதிக்யாவும் ஆதரும் திருமணம் செய்து கொள்கிறார்கள், மேலும் ப்ரதிக்யா கிருஷ்ணரை படிக்காத குண்டராக குறிப்பிடுகிறார். கிருஷ்ணர் வெறுப்பதாக கூறி வரது உடமைகளை எரித்துவிட்டு, பிரதிக்யாவை பொறாமைப்பட வைப்பதற்காக மீராவை திருமணம் செய்கிறார். பிரதிக்யாவுக்கு புற்றுநோய் இல்லை என்றும் ,தக்குரைன் அவருக்கு நஞ்சு கொடுத்ததினை அறிந்த கிருஷ்ணர் , தக்குரைனுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டு, பிரதிக்யாவுடன் வெளியேறுகிறார். சாலையில், அவர்கள் ஒரு ஆபத்தான விபத்தை எதிர்கொள்கிறார்கள். ப்ரதிக்யா அனைவராலும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

1.5 வருடங்களுக்குப் பிறகு

[தொகு]

கிருஷ்ணன் நினைவாற்றலை இழந்துவிட்டான், அவன் சிங்குடன் வசிக்கிறார். சுமித்ராவும் சஜ்ஜனும் விபத்தில் இருந்து கிருஷ்ணனை மட்டும் மீட்டு, பிரதிக்யாவை விட்டு இடுகின்றனர் மேலும் மீரைவை அவரது மனைவி என்றும் நம்ப வைக்கின்றனர். பிரதிக்யா ஒரு அனாதை இல்லத்தால் காப்பாற்றப்பட்டார், அவள் கோமாவில் இருந்தாள். இருப்பினும், அவள் உண்மையைத் தெரிந்து கொள்கிறார். பிரதிக்யா தனது கணவரி விட்டுப் பிரியுமாறு மீராவிடம் கேட்கிறார். ஆனால், அவர் மறுக்கிறார். மீரா, கிருஷ்ணனால் கருத்தரிக்கிறார். ஆனால், எதிர்பாரா விதமாக கருச்சிதைவு ஏற்படுகிறது. சக்தி, கிருஷ்ணாவை பழிவாங்க சக்தியினை கடத்திச் செல்கிறார். பின்னர் கேசர் அவரைக் காப்பாற்றுகிறார்.சமரும் சுமித்ராவும் பிரதிக்யா மற்றும் கேசரைப் பழிவாங்க முடிவு செய்கிறார்கள், அவர்கள் கர்வ் மற்றும் கிருதிக்கு எதிராக தீய திட்டங்களைத் தொடங்குகிறார்கள். விரைவில் சமர் தனது தவறுகளை உணர்ந்து சுமித்ராவுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தி ஒரு நேர்மறையான கதாபாத்திரமாக மாறுகிறார். சுமித்ரா கைது செய்யப்பட்டார். அனைவரும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினர்.

சான்றுகள்

[தொகு]
  1. "Star Bharat confirms launch details for 'Mann Ki Awaaz Pratigya 2'". Biz Asia (in ஆங்கிலம்). 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 4 March 2021.
  2. "Star Plus to bring back 'Mann Ki Awaz Pratigya' for new series?". Biz Asia. 19 February 2021. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
  3. "Pratigya 2 actor Pooja Gor: TV is not regressive, it offers what audience wants to watch". Indian Express. 16 March 2021. பார்க்கப்பட்ட நாள் 18 March 2021.
  4. "Arhaan Behll says he always had a strong feeling that Pratigya would have another season". India Today. 17 March 2021. பார்க்கப்பட்ட நாள் 18 March 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்_கீ_அவாசு_பிரதிக்யா_2&oldid=3277976" இலிருந்து மீள்விக்கப்பட்டது