மான்சாதேவி கோயில் ஹரித்துவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிழை காட்டு: Invalid <ref> tag; invalid names, e.g. too many

மான்சாதேவி கோயில் ஹரித்துவார்[தொகு]

  இக்கோயில் உத்ராகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தெய்வம் மான்சாதேவி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் முக்கியமான பண்டிகை நவராத்திரி ஆகும். இக்கோயில் இமயமலைத் தொடரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சிவாலிக் குன்றுகளில் ஒன்றான பில்வா பர்வதத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
   ஹரித்துவார் ஐந்து முக்கிய புனித தலங்களில் (பஞ்ச் தீர்த்) ஒன்றாக இந்த கோயில் விளங்குகிறது.மேலும் இது பில்வா தீர்த் என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் உள்ளத்தில் உருவான சக்தியின் அம்சமாக மான்சாதேவி விளங்குவதாகவும், மேலும் மான்சாதேவி வாசுகி நாகத்தின் சகோதரி என்றும் கருதப்படுகிறது. 
   மான்சாதேவி என்பதன் பொருள் உண்மையாக நம்பிக்கை வைத்து பக்தி செலுத்துவோரின் வேண்டுதல்களை நிறைவேற்றுபவள் என்பதாகும். பக்தர்கள் மான்சாதேவியை வேண்டிக்கொண்டு ஒரு புனிதமான கயிற்றினை அக்கோயிலில் உள்ள மரத்தில் கட்டுவர்,பின் நினைத்த காரியம் முடிந்தவுடன் அக்கயிற்றை அவிழ்த்து விடுவர். மான்சாதேவியை சாந்தப்படுத்த தேங்காய், பழம், மாலை, பத்தி போன்றவற்றை காணிக்கையாக செலுத்துவர்.
   மான்சாதேவி கோயில் ஒரு சித்தர் பீடமாகும். இங்கு வழிபடுவோரின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இது ஹரித்துவாரில் உள்ள மூன்று சித்தர் பீடங்களில் முக்கியமானது ஆகும். மற்ற இரு பீடங்கள் 1.சண்டிதேவி கோயில், 2. மாயாதேவி கோயில் ஆகும். மான்சா தேவி கோயிலின் உள் பகுதியில் இரண்டு தெய்வ சிலைகள் உள்ளன, ஒன்று எட்டு கரங்களுடனும், மற்றொன்று மூன்று தலை, ஐந்து கரங்களுடனும் காட்சியளிக்கிறது.
   இக்கோயிலின் முக்கிய அம்சமாக பக்தர்கள் சென்று அம்மனை தரிசிக்க ரோப் கார் என்று சொல்லப்படும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலிலிருந்து கங்கை நதியின் அழகையும், ஹரித்துவாரின் அழகையும் கண்டுகளிக்க முடியும்.