மான்சர் ஏரி

ஆள்கூறுகள்: 32°41′46″N 75°08′49″E / 32.696076°N 75.146806°E / 32.696076; 75.146806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான்சர் ஏரி
Mansar Lake
மான்சர் ஏரி
அமைவிடம்சம்மு காசுமீர்
ஆள்கூறுகள்32°41′46″N 75°08′49″E / 32.696076°N 75.146806°E / 32.696076; 75.146806
வடிநில நாடுகள்இந்தியா


மான்சர் ஏரி (Mansar Lake) சம்முவிலிருந்து 62 கிலோமீட்டர் (39 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மான்சர் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு ஏரியே மான்சர் ஏரியாகும். ஒரு மைல் நீளமும் அரை மைல் அகலமும் கொண்டதாக இந்த ஏரியின் பரப்பு விரிந்துள்ளது. ஈர நிலங்கள் தொடர்பான 2005 ஆம் ஆண்டு ராம்சர் சாசனத்தில் சுரின்சார்-மான்சர் ஏரிகள் ஏரிகளாக நியமிக்கப்பட்டன[1].

மான்சர் ஏரி சம்முவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும் . இது புனித தலமாகவும், மானசரோவர் ஏரியின் புராணத்தையும் புனிதத்தையும் எடுத்துரைக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது .இந்த ஏரியின் கிழக்குக் கரையில் சேஷ்நாக் என்ற ஆறு தலைகள் கொண்ட ஒரு பாம்பு உள்ளது. இந்த சன்னதியில் ஒரு பெரிய பாறாங்கல் உள்ளது., அதில் உள்ள சங்கிலிகள் சிறிய சர்ப்பங்களை குறிக்கும். உமாபதி மஹாதேவ் மற்றும் நரசிம்மாவின் இரண்டு பழமையான கோயில்களும் மன்சார் ஏரியின் அருகே அமைந்துள்ளது. பண்டிகைக் காலங்களில் ஏரியின் நீரில் மக்கள் புனித நீராடுவார்கள்.

இந்துக்களில் சிலர் தங்கள் ஆண் குழைந்தைகளின் முடியை காணிக்கை செலுத்துகின்றனர் .ஏரியின் கரையில் பல பழமையான கோயில்கள் உள்ளன .இங்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.சுற்றுலா வருபவர்களுக்கு ஒரு சிறந்த படகு சவாரி செய்யும் ஏரியாக உள்ளது .இந்த ஏரியில் உள்ள பலவிதமான தாவர மற்றும் விலங்கு உயிரிகள் அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கவருகின்றன .ஏரியை சுற்றிலும் சிமெண்ட்டிலான பாதை உள்ளது.ஏரியில் உள்ள பலவிதமான பறவைகள் ஆமைகள்,மீன்களை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.ஏரியின் அருகில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.ஏரியை சுற்றியுள்ள இடங்களில் அங்குள்ள பழங்குடி இன மக்களான குஜ்ஜார் மற்றும் பேக்கர் வால்ஸ் போன்றவர்களை காணலாம் . இந்த ஏரியிலிருந்து செல்லும் சாலை நேரடியாக பதன்கோட் -உதம்பூர் சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. "Surinsar-Mansar Lakes". Ramsar Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்சர்_ஏரி&oldid=2630705" இலிருந்து மீள்விக்கப்பட்டது