மான்கள் மறுவாழ்வு மையம், கொல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மான்கள் மறுவாழ்வு மையம் (Deer Rehabilitation Center) என்பது கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மான்கள் மறுவாழ்வு மையமாகும்.

இந்த மான்கள் மறுவாழ்வு மையமானது காட்டை ஒட்டி உள்ளது. இங்கு கேளையாடுகள், புள்ளிமான்கள் போன்ற மானினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இங்கு இந்த மான்களுக்கு தேவையான தீவனம், மருத்துவ பராமரிப்பு போன்றவற்றை அளித்து, இவை இயறைகையான அமைப்பில் உலவ ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. மேலும் மர உச்சிகளில் அமைக்கபட்ட வீடுகளில் இருந்தும் மான்களையும், காட்டின் அழகையும் காண்டு இரசிக்க இயலும். இந்த இடமானது ஃபெலிசிடேசன் செண்டரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இமைந்துள்ளது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. கேரளா ஒரு சுற்றுலா பார்வை, நூல், கலைமாமணி வி. கே. டி. பாலன், மதுரா வெளியீடு, சென்னை, பக். 156