மானோத் குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2011ல் அகழ்வாய்வு செய்யப்படும் நிலையில் மானோத் குகை

மானோத் குகை (எபிரேயம்: מערת מנותMe'ara Manot) என்பது, இசுரேலின் மேற்கு கலிலீயில் 2008 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உள்ள ஒரு குகை.[1] 54,700 ஆண்டுகள் பழமையானது எனக் கணிக்கப்பட்டுள்ள நவீன மனிதனின் மண்டையோடொன்று இங்கே கண்டுபிடிக்கப்பட்டதால் இது பெயர்பெற்றது. 2008ல் இடம்பெற்ற அகழ்வாய்வின் தொடக்கத்திலேயே மண்டையோட்டின் பகுதி கண்டெடுக்கப்பட்டது. விரிவானஅறிவியல் ஆய்வுக்குப் பின்னர் இம்மண்டையோட்டின் முக்கியத்துவம் உணரப்பட்டு, 28 சனவரி 2005 நேச்சர் ஆய்விதழின் இணையப் பதிப்பில் வெளியிடப்பட்டது..[2][3] ஆப்பிரிக்காவுக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட மிகப் பழைய மனிதனின் மாதிரி இதுவே என்பதுடன், நியண்டர்தால்களும், நவீன மனிதர்களும் அருகருகே வாழ்ந்ததற்கான சான்றாகவும் இது உள்ளது.[4] இந்தக் குகையில் இருந்து கல், எலும்பு ஆகியவற்றாலான தொல்பொருட்களும் பல கிடைத்துள்ளன. நிலவியல் அடிப்படையில் இது ஒரு சுண்ணக்கல் விழுதுக் குகை ஆகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manot Cave". The Israel Antiquities Authority (31 December 2012). பார்த்த நாள் 2 February 2015.
  2. Hershkovitz, Israel; Marder, Ofer; Ayalon, Avner; Bar-Matthews, Miryam; Yasur, Gal; Boaretto, Elisabetta; Caracuta, Valentina; Alex, Bridget et al. (2015). "Levantine cranium from Manot Cave (Israel) foreshadows the first European modern humans". Nature Epub ahead of print. doi:10.1038/nature14134. பப்மெட்:25629628. 
  3. "55,000-Year-Old Skull Fossil Sheds New Light on Human Migration out of Africa". Science News. பார்த்த நாள் 2 February 2015.
  4. Connor, Steve (28 January 2015). "Human skull discovery in Israel proves humans lived side-by-side with Neanderthals". The Independent. பார்த்த நாள் 3 February 2015.
  5. "Manot Cave, Israel". Find a Dig. பார்த்த நாள் 3 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானோத்_குகை&oldid=2747719" இருந்து மீள்விக்கப்பட்டது