மானோத்-1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மானோத் 1
புதைப்படிவ காலம்:பிந்திய பிளீசுட்டோசீன்,
0.049–0.060 Ma
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: உயர்விலங்கு
குடும்பம்: ஒமினிடே
சிற்றினம்: ஒமொனினி
பேரினம்: ஓமோ
இனம்: ஓமோ சப்பியன்சு
(பண்டைய)

மானோத்-1 என்பது, இசுரேலில் கண்டுபிடிக்கப்பட்டதும், பண்டை நவீன மனிதனுடைய மண்டையோட்டின் பகுதி என அடையாளம் காணப்பட்டதுமான ஒரு புதை படிவ மாதிரி ஆகும்.[1] இது தொடக்கப் பழையகற்காலத்தில், மேற்குக் கலிலீப் பகுதியில் உள்ள மானோத் குகையில் வாழ்ந்த ஒருவருடையது. இம்மக்கள் மானோத் குகையில் வாழ்ந்தமையால் இவர்களுக்கு மானோத் மக்கள் எனப் பெயரிட்டுள்ளனர். 2008ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இது குறித்த அறிவியல் விளக்கம் முதன் முதலில் நேச்சர் ஆய்விதழின் 2015 சனவரி 28ம் தேதிப் பதிப்பில் வெளியானது.[2] கதிரியக்கக் காலக்கணிப்பின்படி இது இற்றைக்கு 54,700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதன்படி, இந்த மாதிரியே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நவீன மனிதரின் மிகப்பழைய மாதிரி ஆகும். அத்துடன், இக்கண்டுபிடிப்பு ஆப்பிரிக்காவிலிருந்து பரவல் கோட்பாட்டுக்கு ஒரு நல்ல சான்றாகவும் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Choi, Charles Q (28 January 2015). "55,000-Year-Old Skull Fragment May Be Linked to 1st Europeans". Live Science. http://www.livescience.com/49615-skull-fragment-human-migration.html. பார்த்த நாள்: 4 February 2015. 
  2. Hershkovitz, Israel; Marder, Ofer; Ayalon, Avner; Bar-Matthews, Miryam; Yasur, Gal; Boaretto, Elisabetta; Caracuta, Valentina; Alex, Bridget et al. (2015). "Levantine cranium from Manot Cave (Israel) foreshadows the first European modern humans". Nature Epub ahead of print. doi:10.1038/nature14134. பப்மெட்:25629628. 
  3. "55,000-Year-Old Skull Fossil Sheds New Light on Human Migration out of Africa". Science News. பார்த்த நாள் 4 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானோத்-1&oldid=2107084" இருந்து மீள்விக்கப்பட்டது