உள்ளடக்கத்துக்குச் செல்

மானேக்நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானேக் புர்ஜ்

பாபா மானேக்நாத் (Maneknath) என்பவர் 15-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்து துறவி ஆவார். இவர் இந்தியாவின் குசராத்தில் உள்ள தற்போதைய அகமதாபாது நகரத்திற்கு அருகில் சபர்மதி ஆற்றின் கரையில் வாழ்ந்தார்.

புராணக்கதை

[தொகு]

1411-ஆம் ஆண்டு பத்ரா கோட்டையைக் கட்ட முதலாம் அகமது சாவுக்கு உதவுவதற்காக, துறவி மானேக்நாத் உதவினார். கோட்டைச் சுவர்கள் கட்டப்படும்போது பகலில் ஒரு பாயை நெய்த இவர், இரவில் அந்தப் பாயை அவிழ்த்து, சுவர்களை இடியச் செய்தார். இது கண்டுபிடிக்கப்பட்டபோது, அகமது சாவிடம் தனது சக்திகளை நிரூபிக்க அழைக்கப்பட்டார். இவர் அவ்வாறு செய்தபோது, அகமது சா கெண்டியின் திறப்புகளை மூடினார். ஆனால் கோட்டை கட்டுமானம் தொடங்கிய இடத்தைக் கண்டுபிடிக்க இவர் மன்னருக்கு உதவினார். இவரது ஆலோசனையின் பேரில் நகரச் சுவர்களைக் கட்டிய கட்டிடக் கலைஞர் அகமது நகரத்தின் அமைப்பை மாற்றினார். சபர்மதி ஆறு நகரம் வழியாக பெர்னாண்டசு பாலத்தின் கீழ் கடந்து சென்றபோது, இவர் உயிருடன் புதைக்கப்பட்டார் அல்லது ஆற்றுத் தீவில் சமாதி அடைந்தார் என்று நம்பப்படுகிறது. நகரத்தின் முதல் பகுதியான மானெக் சௌக், இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. மேலும் இவரது நினைவாகக் கோவில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. இவரது பெயரிடப்பட்ட கோட்டையின் முதல் கொத்தளம் மானேக் புர்ஜ், எல்லிசு பாலத்தின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது.[1][2][3][4][5][6]

வடக்கு, மத்திய குசராத்தில் இந்தத் துறவி போற்றப்படுகிறார். கேதா மாவட்டத்தில் தசுராவுக்கு அருகிலுள்ள பாரதரியிலும் இவரது நினைவுச்சின்னம் உள்ளது. இங்கு இவர் தனது குதிரையில் அமர்ந்திருப்பது போலவும், கிராமத்தின் புரவலர் துறவியாகக் கருதப்படுகிறார். பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தான்டாவிற்கு அருகிலுள்ள லடோலில் ஒரு கோயில் உள்ளது. இது துறவி தியானம் செய்ததாக நம்பப்படும் மலையடிவாரத்தில் உள்ள குகைக்கு அருகில் அமைந்துள்ளது.[7]

சந்ததியினர்

[தொகு]

துறவியின் 12ஆவது தலைமுறை வம்சாவளியைச் சேர்ந்த மகந்த் கன்சியாம்நாத், ஒவ்வொரு ஆண்டும் நகரத்தின் அடித்தள நாளிலும் விஜயதசமியிலும் மானெக் புர்ஜில் பூஜை செய்து கொடியை ஏற்றுகிறார்.[3][4][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gazetteer of the Bombay Presidency: Ahmedabad. Government Central Press. 1879. p. 276.
  2. Desai, Anjali H., ed. (2007). India Guide Gujarat. India Guide Publications. pp. 93–94. ISBN 9780978951702.
  3. 3.0 3.1 More, Anuj (18 October 2010). "Baba Maneknath's kin keep alive 600-yr old tradition". The Indian Express. http://www.indianexpress.com/news/baba-maneknath-s-kin-keep-alive-600yr-old-tradition/698967. 
  4. 4.0 4.1 "Flags changed at city's foundation by Manek Nath baba's descendants". The Times of India. TNN. 7 October 2011 இம் மூலத்தில் இருந்து 11 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411040432/http://articles.timesofindia.indiatimes.com/2011-10-07/ahmedabad/30257006_1_flag-foundation-stone-puja. 
  5. Ruturaj Jadav and Mehul Jani (26 February 2010). "Multi-layered expansion". Ahmedabad Mirror. AM இம் மூலத்தில் இருந்து 7 December 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091207235844/http://www.ahmedabadmirror.com/index.aspx?page=article. 
  6. 6.0 6.1 "Descendants to pay homage to Manek Baba today". The Times of India. 26 February 2011. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Descendants-to-pay-homage-to-Manek-Baba-today/articleshow/7578458.cms. 
  7. Shastri, Parth (27 February 2011). "Ahmedabad says abracadabra" இம் மூலத்தில் இருந்து 8 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150108000533/http://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=2&edlabel=TOIA&mydateHid=27-02-2011&pubname=&edname=&articleid=Ar00202&format=&publabel=TOI. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானேக்நாத்&oldid=4226510" இலிருந்து மீள்விக்கப்பட்டது