மானூர் (பழனி வட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மானூர்
—  வருவாய் கிராமம்  —
மானூர்
இருப்பிடம்: மானூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°30′34″N 77°28′59″E / 10.509375°N 77.482967°E / 10.509375; 77.482967ஆள்கூறுகள்: 10°30′34″N 77°28′59″E / 10.509375°N 77.482967°E / 10.509375; 77.482967
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி, இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மானூர் (MANOOR) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்). [4][5] பழனி வருவாய் வட்டத்தின் பதினொன்றாவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:11) ஆகும். [6]

அமைவிடம்[தொகு]

பழனியிலிருந்து தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சுமார் 13 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 532 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மானூர் கிராமத்தில் 1457வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 5573 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.75 %. இதில் 2768 பேர் ஆண்கள்; 2524 பேர் பெண்கள். இக்கிராத்தில் ஆரம்பப் பள்ளிகள் 2 ம், நடுநிலைப்பள்ளி 1ம், உயர்நிலைப்பள்ளி 1ம் உள்ளது.[8]

முக்கிய பயிர்[தொகு]

அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது. சண்முகா நதிஆற்றுப் படுகைப் பகுதியில் தென்னை பயிரிடப்படுகிறது.

ஜீவசாமதி[தொகு]

இங்கு ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி ஜீவசாமதி சண்முகா நதி ஆற்றின் மேற்கு கரையில் ஊரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

நிருவாக அமைப்பு[தொகு]

கிராமத்தின் தகவல்கள்[தொகு]

  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 1099 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு : 1353.55.0 ஹெக்டேர்- (3344.69 ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை :


அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=13&centcode=0006&tlkname=palani#MAP
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Thoppampatti&dcodenew=22&drdblknew=10
  6. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண். 8. (ப.வெ. 509/ 2015/பி2, நாள்; 17.04.2015).
  7. http://wikimapia.org/#lang=ta&lat=10.520050 &lon=77.437735 &z=16&m=w
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானூர்_(பழனி_வட்டம்)&oldid=1884080" இருந்து மீள்விக்கப்பட்டது