மானுவேல் பாலெசுட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானுவேல் பாலெசுட்டர் பாயிக்சு (Manuel Ballester Boix) என்பவர் ஓர் எசுப்பானிய வேதியியலாளர் ஆவார். இவர் 1919 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று பார்சிலோனாவில் பிறந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

1944 ஆம் ஆண்டு பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பட்டப் படிப்பை மானுவேல் முடித்தார். முனைவர் பட்டத்தை மத்ரித் நகரத்தில் முடித்த இவர் எசுப்பானிய தேசிய ஆய்வுக் கழகத்தில் ஒரு குழுவை உருவாக்கினார். இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும் கரிம வேதியியல் மற்றும் வேதி இயக்கவியல் பிரிவுகளில் அமைந்திருந்தன[1]. 1951 ஆம் ஆண்டு ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பயிற்சியையும் இவர் முடித்தார்[2]. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் தேதியன்று இறந்தார்.

விருது[தொகு]

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்காக எசுப்பானியாவில் வழங்கப்படும் ஆதூரிய இளவரசன் விருது 1982 ஆம் ஆண்டு மானுவேலுக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bio at the Prince of Asturias Foundation பரணிடப்பட்டது 2012-07-09 at Archive.today
  2. "Manuel Ballester Boix - Fundación Príncipe de Asturias". 2009-10-09. Archived from the original on 2009-10-09. பார்க்கப்பட்ட நாள் 2017-08-07.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானுவேல்_பாலெசுட்டர்&oldid=3792934" இலிருந்து மீள்விக்கப்பட்டது