உள்ளடக்கத்துக்குச் செல்

மானுடமையவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானுடமையவாதம் (Anthropocentrism) (// (கேட்க)[1] பண்டைய கிரேக்க மொழியில் ἄνθρωπος (ஆந்த்ரோபோஸ்) "மனிதன்" மற்றும் κέντρον (கென்ட்ரான்) "மையம்" என்பதிலிருந்து வந்தது) என்பது மனிதர்கள் தான் இந்த கிரகத்தின் மையமான, மிக முக்கியமான உயிரினம் என்ற நம்பிக்கை ஆகும்.[2] இந்தச் சொல் மனிதமையவாதம் (humanocentrism) என்ற சொல்லுடன் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட வல்லது. மேலும் சில அறிஞர்கள் இந்தக் கருத்தை மனித மேலாதிக்கம் அல்லது மனித தனிச்சிறப்புத்தன்மை என்றும் குறிப்பிடுகின்றனர். மானுடமையவாதக் கண்ணோட்டத்தில், மனிதகுலம் இயற்கையிலிருந்து வேறுபடுத்தப்பட்டு இயற்கையினும் உயர்ந்ததாகவும் கருதப்படுகிறது. மேலும் மற்றவையனைத்தும் (விலங்குகள், தாவரங்கள், கனிம வளங்கள் போன்றவை) மனிதர்களின் பயன்பாட்டிற்காகவே தோற்றுவிக்கப்பட்ட வளங்களாகக் கருதப்படுகின்றன.[2]

மானுடமையவாதத்தை குறைந்தது மூன்று வகையான பகுப்புகளில் வேறுபடுத்தி அறிய இயலும்: புலனுணர்வு மனிதமையவாதம் (இது "மனித புலன் உறுப்புகளிலிருந்து வரும் புலன் தரவுகளால் அறியப்படும் முன்மாதிரிகளை வகைப்படுத்துகிறது"); விளக்கவியல் மானுடமையவாதம் (இது "அறிவியல் மொழியில் 'ஹோமோ சேபியன்ஸ்' என்று அறியப்படும் மனிதனை அடிப்படையாகக் கொண்ட, அதை மையமாகக் கொண்ட அல்லது அதைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட முன்மாதிரிகளை வகைப்படுத்துகிறது"); மற்றும் நெறிமுறை மானுடமையவாதம் (இது "ஹோமோ சேபியன்ஸ் இன மனித வகையின் மேன்மை, அதன் திறன்கள், அதன் மதிப்புகளின் முதன்மை, [அல்லது] பேரண்டத்தில் அதன் நிலை ஆகியவற்றைப் பற்றிய அனுமானங்கள் அல்லது கூற்றுகளை முன்வைக்கும் முன்மாதிரிகளை வகைப்படுத்துகிறது").[3]

மானுடமையவாதம் உலகை மனித மதிப்புகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் விளக்க முயல்கிறது.[4] இது பல நவீன மனித கலாச்சாரங்களிலும் நனவான மனிதச் செயல்களிலும் ஆழமாகப் பதிந்துள்ளதாகக் கருதப்படுகிறது. சுற்றுச்சூழல் நெறிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் மெய்யியல் ஆகிய துறைகளில் ஒரு முக்கிய கருத்தாக மானுடமையவாதம் அமைகிறது. இத்துறைகளில் மானுடச் செயற்பாடுகள் சூழலியல் மண்டலத்திற்குள் உருவாகும் பிரச்சனைகளின் மூல காரணமாக பெரும்பாலும் கருதப்படுகிறது.[5] இருப்பினும், மனிதமையவாதத்தின் பல ஆதரவாளர்கள் இதை மறுக்கின்றனர். மாறாக, தொலைநோக்கில் உலகளாவிய சூழல் மனிதர்களுக்குத் தொடர்ந்து ஏதுவானதாக தொடரப்பட வேண்டும் என்றும், உண்மையான பிரச்சினை மானுடமையவாதம் மேலோட்டமாக இருப்பது தான் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.[6][7]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. Jones, Daniel (2003) [1917], Peter Roach; James Hartmann; Jane Setter (eds.), English Pronouncing Dictionary, Cambridge: Cambridge University Press, ISBN 978-3-12-539683-8
  2. 2.0 2.1 "Anthropocentrism". Encyclopedia Britannica. (2013). 
  3. Mylius, Ben (2018-10-15). "Three Types of Anthropocentrism" (in en). Environmental Philosophy 15 (2): 159–194. doi:10.5840/envirophil20184564. https://www.pdcnet.org/pdc/bvdb.nsf/purchase?openform&fp=envirophil&id=envirophil_2018_0015_0002_0159_0194. 
  4. "Anthropocentrism". Merriam-Webster Dictionary.
  5. Beck, Martha C. "Systems Thinking and Universal Dialogue: The Creation of a Noosphere in Today's Era of Globalization." Dialogue and Universalism 3 (2013): 123-136.
  6. "Environmental Ethics, See: 1. Introduction: The Challenge of Environmental Ethics". Stanford Encyclopedia of Philosophy. 
  7. "Environmental Ethics, See: 1a. Human Beings". Internet Encyclopedia of Philosophy. 

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானுடமையவாதம்&oldid=4451348" இலிருந்து மீள்விக்கப்பட்டது