உள்ளடக்கத்துக்குச் செல்

உடுவில் தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மானிப்பாய் தேர்தல் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உடுவில் அல்லது மானிப்பாய் தேர்தல் தொகுதி (Uduvil / Manipay Electorate) என்பது மார்ச் 1960 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதி வி. தர்மலிங்கம் 1960 முதல் 1977 வரையான அனைத்துத் தேர்தல்களிலும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1985, செப்டம்பர் 2 இல் படுகொலை செய்யப்பட்டார்[1]

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[2]. 1989 தேர்தலில் உடுவில் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1960 (மார்ச்) தேர்தல்கள்

[தொகு]

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 வி. தர்மலிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]வீடு9,03344.07%
 பொன்னம்பலம் நாகலிங்கம்லங்கா சமசமாஜக் கட்சிதிறப்பு3,81118.59%
 வி. பொன்னம்பலம்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிநட்சத்திரம்3,54117.27%
ஜே. டி. ஆசீர்வாதம்சுயேட்சைபுத்தகம்1,5527.57%
எஸ். ஹண்டி பேரின்பநாயகம்சுயேட்சைகண்ணாடி1,2416.05%
என். சிவநேசன்சுயேட்சைசூரியன்1,0084.92%
வி. வீரசிங்கம்சுயேட்சைசேவல்3121.52%
தகுதியான வாக்குகள்20,498100.00%
நிராகரிக்கப்பட்டவை212
மொத்த வாக்குகள்20,710
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்27,278
வீதம்75.92%

1960 (சூலை) தேர்தல்கள்

[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 வி. தர்மலிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]House11,47563.12%
 பொன்னம்பலம் நாகலிங்கம்லங்கா சமசமாஜக் கட்சிதிறப்பு6,70436.88%
தகுதியான வாக்குகள்18,179100.00%
நிராகரிக்கப்பட்டவை195
மொத்த வாக்குகள்18,374
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்27,278
வீதம்67.36%

1965 தேர்தல்கள்

[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 வி. தர்மலிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]House11,63848.61%
 பொன்னம்பலம் நாகலிங்கம்லங்கா சமசமாஜக் கட்சிதிறப்பு6,72628.09%
 என். சிவநேசன்அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்சைக்கிள்5,57723.29%
தகுதியான வாக்குகள்23,941100.00%
நிராகரிக்கப்பட்டவை287
மொத்த வாக்குகள்24,228
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்33,280
வீதம்72.80%

1970 தேர்தல்கள்

[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 வி. தர்மலிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]House14,12049.27%
 என். சிவநேசன்அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்சைக்கிள்11,65640.68%
குமாரசாமி வினோதன்சுயேட்சைதராசு1,3624.75%
 வி. காராளசிங்கம்லங்கா சமசமாஜக் கட்சிதிறப்பு1,2644.41%
பி. வி. எம். கே. எம். சின்னத்துரைசுயேட்சைகுடை2540.89%
தகுதியான வாக்குகள்28,656100.00%
நிராகரிக்கப்பட்டவை119
மொத்த வாக்குகள்28,775
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்36,690
வீதம்78.43%

1977 தேர்தல்கள்

[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 வி. தர்மலிங்கம்தமிழர் விடுதலைக் கூட்டணிசூரியன்27,55083.99%
 ஆர். எஸ். அலோசியசுஐக்கிய தேசியக் கட்சியானை3,30010.06%
சி. பி. வி. எம். கே. முதலியார்சுயேட்சைகுடை1,0653.25%
கே. என். இரத்தினவேல்சுயேட்சைஏணி8872.70%
தகுதியான வாக்குகள்32,802100.00%
நிராகரிக்கப்பட்டவை199
மொத்த வாக்குகள்33,001
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்41,373
வீதம்79.76%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் வி. தர்மலிங்கம் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்[9].

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. ↑ KT Rajasingham. "Chapter 33: India shows its hand". SRI LANKA: THE UNTOLD STORY. ஏசியா டைம்ஸ். Archived from the original on 2010-05-19. Retrieved 23 மார்ச் 2010. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. ↑ "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  3. ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-12. Retrieved 2012-01-07.
  4. 1 2 3 4 சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது
  5. ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-01-07.
  6. ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13. Retrieved 2012-01-07.
  7. ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2012-01-07. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-07-17. Retrieved 2012-01-07.
  9. ↑ Wickramasinghe, Wimal (18 January 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுவில்_தேர்தல்_தொகுதி&oldid=3544948" இலிருந்து மீள்விக்கப்பட்டது