மானா மக்கீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மானா மக்கீன்
Mm makeen.jpg
பிறப்புமே 29, 1937
கொழும்பு
பெற்றோர்முத்து முஹம்மத், நூருல் ஹஃபீலா

எம்.எம். மக்கீன் (மானா மக்கீன், பிறப்பு: மே 29, 1937) 1950களில் இருந்து எழுதிவரும் ஓர் ஈழத்து எழுத்தாளரும் ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கொழும்பு ஜம்பட்டா வீதியில் முத்து முஹம்மத், நூருல் ஹஃபீலா தம்பதியினரின் புதல்வராக பிறந்த இவர், கொழும்பு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார். இவரின் பாரியார்: நூர் மினசா, மகள்: பாத்திமா அஞ்ஜானா, மகன்: அசீம் அகமது.

இலக்கிய ஆர்வம்[தொகு]

சிறு வயது முதலே இவர் இலக்கிய ஆர்வமிக்கவராக காணப்பட்டார். முதலாக்கம் 1950களின் ஆரம்பத்தில் வீரகேசரி ‘பாலர் வட்டாரத்’தில் ‘பால்காரன்’ என்ற குட்டிக் கதையாக பிரசுரமானது. அதைத் தொடர்ந்து ‘தினகரன் பாலர்’ கழகத்தில் பல கதைகள் எழுதியுள்ளார். ‘சுதந்திரனி’ல் சில ஆய்வுக் கட்டுரைகளையும்;. இலங்கை வானொலியில் வானொலி மாமாவினால் சாவகச்சேரி எஸ். சரவணமுத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பல ஆக்கங்களையும் எழுதி நேரடியாகப் பங்குபற்றியும் உள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட கதைகளையும், 1000க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் இலங்கை இந்திய தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார்.

பத்தி எழுத்தாளர்[தொகு]

  • தினகரனில் “கண்டதுண்டா கேட்டதுண்டா||.
  • தினகரனில் ‘லைட் ரீடிங்’

எழுதியநூல்கள்[தொகு]

மானாமக்கீன் 1980ஆம் ஆண்டு முதல் 30 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

  • ஆடு தன் ராணி – முதலாம் பதிப்பு: 1980 ஏப்ரல், வெளியீடு: அஸ்டலட்சுமி வெளியீட்டகம்,
  • ஆடும் ராஜா – முதலாம் பதிப்பு: 1981 மே, வெளியீடு: அஸ்டலட்சுமி வெளியீட்டகம்,
  • கமல் - அகில இந்திய சிறந்த நடிகர் – முதலாம் பதிப்பு: 1983 அக்டோபர், வெளியீடு: அஸ்டலட்சுமி வெளியீட்டகம்,
  • இலண்டன் ரயில் கொள்ளை – முதலாம் பதிப்பு: 1990 ஜூன், வெளியீடு: அஸ்டலட்சுமி வெளியீட்டகம்,
  • லைட்ரீடிங் - முதலாம் பதிப்பு: 1994 ஏப்ரல், வெளியீடு: புரவலர் ஹாசிம் உமர்
  • லைட்ரீடிங் (2ம் பாகம்) – முதலாம் பதிப்பு: 1995 பெப்ரவரி, வெளியீடு: நவமணிப் பதிப்பகம்
  • பேனாமுனையில் அரை நூற்றாண்டு – முதலாம் பதிப்பு: 1995 ஒக்டோபர், வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • இளைய தலைமுறையினருக்கு இனிக்கும் இஸ்லாமிய கதைகள் – முக்தார் -ஏ. முஹம்மத் (தொகுப்பாசிரியர்: மானா. மக்கீன்) - முதலாம் பதிப்பு: 1996 மே, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • முஸ்லிம் டைஜஸ்ட் – முதலாம் பதிப்பு: 1996 மார்ச், வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • என்னைக் கேளுங்கோ – முதலாம் பதிப்பு: 1996 ஏப்ரல், வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார் – முதலாம் பதிப்பு: 1997, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • 'ஜெயில்'லலிதா சிப்ஸ் – முதலாம் பதிப்பு: 1997, வெளியீடு: அஸ்டலட்சுமி வெளியீட்டகம்
  • மானா மக்கீன் கதை மலர்கள் – முதலாம் பதிப்பு: 1997. வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • என் நினைவில் ஒரு கவிஞர் – முதலாம் பதிப்பு: 1997, வெளியீடு: அய்யூப் இல்லம்
  • இரு சமூகங்கள் இரு கண்கள் – முதலாம் பதிப்பு: 1997, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • இலங்கை கீழக்கரை இனிய தொடர்புகள் – முதலாம் பதிப்பு: 1998, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • இந்திய இலங்கை எழுத்தாளர்களின் ஈகைப்பெருநாள் கதைகள் - முதலாம் பதிப்பு: 1998

வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்

  • இந்திய இலங்கை எழுத்தாளர்களின் தியாகத் திருநாள் கதைகள் – முதலாம் பதிப்பு: 1998

வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்

  • நீடூர்- நெய்வாசல் நெஞ்சங்கள் – முதலாம் பதிப்பு: 1999, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • கீழக்கரைப் பண்பாட்டுக் கோலங்கள் – முதலாம் பதிப்பு: 2000 டிசம்பர், வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • வரலாற்றில் இலங்கையும் காயல்பட்டினமும் – முதலாம் பதிப்பு: 2001, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • இலங்கை – முதலாம் பதிப்பு: 2000, வெளியீடு: குட்புக்ஸ் பப்ளிகேசன்ஸ்
  • சிறுவர் பாலியல் கொடுமைகள் – முதலாம் பதிப்பு: 2002 , வெளியீடு: அஸ்டலட்சுமி பதிப்பகம்
  • இலங்கை கண்டகுமரி – முதலாம் பதிப்பு: 2003, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • வாழும்பொழுதே வாழ்த்துவோம் – முதலாம் பதிப்பு: 2003 ஜுன்
  • வள்ளல் ஹபீபு முகம்மது அரசர் – முதலாம் பதிப்பு: 2004, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம் – முதலாம் பதிப்பு: 2005, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • நீடூர் காமராஜர் ஜுபைர் பாய் – முதலாம் பதிப்பு: 2006, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
  • தமிழுக்கு முதல் புதினம் கிழக்கரையிலிருந்து – முதலாம் பதிப்பு: 2007 மே, வெளியீடு: ஹாஜி ஏ.ஜீ.ஏ.ரிஃபாய் கீழக்கரை
  • முத்தான முத்துப்பேட்டை – முதலாம் பதிப்பு: 2007 டிசம்பர், வெளியீடு: றஹ்மத் அறக்கட்டளை, சென்னை 4

கலைக் கழக இஸ்லாமிய நுண்கலைக்குழு[தொகு]

கலை - இலக்கியத்துறை சம்பந்தமான அரசு நியமனங்களில் 1969இல் இலங்கைக் கலைக் கழக இஸ்லாமிய நுண்கலைக்குழு உறுப்பினராகவும், பின்பு 1977இல் அதேகுழுவின் செயலாளராகவும் நியமனம் பெற்றார். 1978ல் கலைக் கழக நாடகக்குழு அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார்;. 1992ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் திரைப்பட, நாடகத் தணிக்கைசபை அங்கத்தவராகப் பணியாற்றியுள்ளார்.

நாடகங்கள்[தொகு]

புகழ்பூத்த ஆங்கில நாடகங்களான ‘டயல் எம் போர் மர்டர்’, ‘விட்னஸ் போ த பிரசிகியூசன்’, ‘நொட் இன் த புக்’ நாடக தமிழாக்கம் செய்து தனது புதுமை அரங்கின் மூலம் (Modern Stage) அரங்கேற்றியுள்ளார்.

பெற்ற விருதுகள்[தொகு]

  • ‘தாஜுல் உலூம்' - 1991 இலங்கை முஸ்லிம் கலாசார அமைச்சு
  • ‘தமிழ் மணி' - 1992 இலங்கை இந்துசமயää கலாசார அமைச்சு
  • ‘எழுத்து வேந்தன்' - 1994 தமிழ்நாடு முஸ்லிம் பத்திரிகையாளர் சங்கம்.
  • ‘தமிழ்மாமணி' - 1994 தமிழ்நாடு, இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகம்.
  • ‘தமிழ்க் குமரன்'- 1994 அனைத்திலங்கை எம்.ஜி.ஆர் மன்றம்.
  • ‘முத்தமிழ் வித்தகர்'- 1990 உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
  • ‘தமிழ்காவலன்' - 1996 தாய்லாந்து தமிழ்ப்பண்பாட்டுக் கழகம்.
  • ‘ஆய்வு இலக்கியச்சுடர்'- 1999 சென்னை ராத்திபு ஜலாலிய்யா மையம்.
  • ‘இலக்கிய சிரோமணி' - 1999 மலேசியா, கவிஞர் மன்றம்.
  • ‘தீன்வழிச் செம்மல்’- 2003 குளச்சல் இஸ்லாமிய இளைஞர் சங்கம்.
  • ‘கலாபூசணம்' - 2004 இலங்கை அரசு தேசிய விருது.
  • ‘தேசத்தின் கண்'- 2005 இலங்கைப்பிரதமர் சாகித்திய விருது.
  • ‘ஆய்வுத்தமிழ் ஆற்றுனர் - 2007 உலகத் தமிழுறவு பண்பாட்டு மன்றம். சென்னை.
  • ‘இலக்கிய நிறைமதி' - 2007 ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி.

பொற்கிழிகள்[தொகு]

  • தமிழ் நாடு, அய்யம்பேட்டை, 14வது அல்-குர்ஆன் மாநாடு - 1993
  • தமிழ்நாடு, சென்னை வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை- 1993

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானா_மக்கீன்&oldid=2106888" இருந்து மீள்விக்கப்பட்டது