உள்ளடக்கத்துக்குச் செல்

மானா பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானா பட்டேல்
Maana Patel
2021 ஆம் ஆண்டு அகமதாபாது நகரில் ஒரு பயிற்சியில் மானா பட்டேல்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு18 மார்ச்சு 2000 (2000-03-18) (அகவை 24)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுநீச்சல்
நிகழ்வு(கள்)பின்புற நீச்சல்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)
  • 50 மீ பின்புற நீச்சல்: 29.30 (2015, புதிய சாதனை)
  • 100 மீ பின்புற நீச்சல்: 1:03.77 (2021, புதிய சாதனை)
  • 200 மீ பின்புற நீச்சல்: 2:19.30 (2015, புதிய சாதனை)
பதக்கத் தகவல்கள்
பெண்கள் நீச்சற் போட்டி
நாடு  இந்தியா
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 காத்மாண்டு 50 மீ பின்புற நீச்சல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 காத்மாண்டு 100 மீ பின்புற நீச்சல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 குவகாத்தி]] 4 x 100 மீ தொடர் நீச்சல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 குவகாத்தி 4 x 100 மீ நான்கு வகை தொடர் நீச்சல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 காத்மாண்டு 4 x 100 மீ கட்டற்ற தொடர் நீச்சல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 காத்மாண்டு 4 x 100 மீ நான்கு வகை தொடர் நீச்சல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 குவகாத்தி 50 மீ பின்புற நீச்சல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 குவகாத்தி 100 மீ பின்புற நீச்சல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 குவகாத்தி 200 மீ பின்புற நீச்சல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 காத்மாண்டு 200 மீ பின்புற நீச்சல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 குவகாத்தி 50 மீ கட்டற்ற நீச்சல்

மானா பட்டேல் (Maana Patel) இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு நீச்சல் வீராங்கனையாவார். 2000 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] பின்புற நீச்சல் வகை போட்டிகளில் இவர் இந்தியாவின் சார்பாக போட்டியிட்டு வருகிறார்.

நீச்சல் தொழில்

[தொகு]

மானா பட்டேல் ஏழு வயதில் நீந்தத் தொடங்கினார்.[2]

டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் நீச்சல் வீரர் மானா பட்டேல் ஆவார். டோக்கியோவில் பெண்கள் 100 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் இவர் போட்டியிடுகிறார். [3] 21 வயதான இவருக்கு 2019 ஆம் ஆண்டில் கணுக்கால் காயம் அடைந்தார், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே மீண்டு வந்தார். [4]

அவர் 13 வயதாக இருந்தபோது, ஐதராபாத்தில் நடந்த 40 வது இளையோர் தேசிய நீச்சல் வெற்றியாளர் போட்டியில் 200 மீட்டர் பின்புற நீச்சலில் 2: 23.41 வினாடிகளில் நீந்தி முடித்தார். 2009 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் டோக்கியோவில் நடந்த ஆசிய வயது வாரி குழு வெற்றியாளர் போட்டியில் சிகா டாண்டன் வைத்திருந்த 2: 26.41 வினாடிகள் என்ற தேசிய சாதனையை முறியடித்தார் [2] தேசிய விளையாட்டுகளில் மானா 50 மீ பின்புற நீச்சல் மற்றும் 200 மீட்டர் பின்புற நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 60 ஆவது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் (2015) 100 மீட்டர் பின்புற நீச்சல் போட்டியில் மானா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். மானா பட்டேல், ராசி பட்டேல், கீதாஞ்சலி பாண்டே மற்றும் தில்பிரீத் கவுர் ஆகியோர் 60 வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டியில் 4X100 மீட்டர் கட்டற்ற பாணி தொடர் நீச்சலில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். [5]

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ல் கோல்டு கோசுட்டு ஒலிம்பிக் போட்டிக்கு மானா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போட்டியில் 50 மீட்டர், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பின்புற நீச்சல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்; 50 மீட்டர் கட்டற்ற பாணியில் வெண்கலம்; 4 × 100 மீட்டர் கட்டற்ற பாணி தொடர் நீச்சலில் தங்கம்; 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் (2016) 4 × 100 மீட்டர் நான்கு வகை தொடர் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கங்களை மானே வென்றுள்ளார். [1]

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 72 ஆவது மூத்த தேசிய நீச்சல் வெற்றியாளர் போட்டியில் மானா 3 தங்கப் பதக்கங்களை வென்றார். [6]

பெங்களூரில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 ஆவது ஆசிய வயதுக் குழு வெற்றியாளர் போட்டியில் மானா ஆறு பதக்கங்களை (1 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம்) வென்றார். [7] [8]

2016 ஆம் ஆண்டு ஆகத்து மாத நிலவரப்படி மானா 11 பன்னாடு, 61 தேசிய மற்றும் 75 மாநில அளவிலான பதக்கங்களை வென்றுள்ளார். [9]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அகமதாபாத்தில் உள்ள குழந்தைகளுக்கான உத்காம் பள்ளியில் மானா வணிகம் பயின்றார். குசராத்து வித்யாபீத் நீச்சல் மையத்தில் கமலேசு நானாவதியிடம் பயிற்சி பெற்றார்.[10][11] அவர் தற்போது மும்பையில் உள்ள கிளென்மார்க் நீச்சல் பயிற்சிப்பள்ளியில் பயிற்சியாளர் பீட்டர் கார்சுவெல்லின் கீழ் பயிற்சி பெறுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "MAANA PATEL – Swimming Federation of India". swimming.org.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-05-14. பார்க்கப்பட்ட நாள் 2018-05-13."MAANA PATEL – Swimming Federation of India" பரணிடப்பட்டது 2018-05-14 at the வந்தவழி இயந்திரம். swimming.org.in. Retrieved 2018-05-13.
  2. 2.0 2.1 "Maana Patel, the 15-year-old girl who is making waves" (in en-US). dna. 2015-07-21. http://www.dnaindia.com/sports/report-maana-patel-the-15-year-old-girl-who-is-making-waves-2106517. "Maana Patel, the 15-year-old girl who is making waves". dna. 2015-07-21. Retrieved 2018-05-12.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. "Swimmer Manna Patel clinches gold setting new record at 60th National School Games" (in en-US). The Indian Express. 2015-02-17. http://indianexpress.com/article/sports/sport-others/swimmer-manna-patel-clinches-gold-setting-new-record-at-60th-national-school-games/. 
  6. "Maana's comeback from injury" (in en-US). epaper.timesgroup.com. 2018-08-10. https://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/shared/ShowArticle.aspx?doc=TOIA%2F2018%2F10%2F08&entity=Ar02102&sk=16BA6AC1&mode=text#. 
  7. "After six medals Maana feels she is back" (in en-US). mumbaimirror.indiatimes.com. 2019-09-30. https://mumbaimirror.indiatimes.com/sport/others/after-six-medals-in-asian-age-group-cship-maana-feels-shes-back/articleshow/71365104.cms. 
  8. "Maana makes comeback" (in en-US). sportstar.thehindu.com. 2019-09-26. https://sportstar.thehindu.com/swimming/maana-patel-asian-age-group-swimming-championship-gold-medal-50m-backstroke/article29522444.ece. 
  9. "A new generation of Gujarati athletes - Maana Patel" (in en). SBS Your Language. https://www.sbs.com.au/yourlanguage/gujarati/en/audiotrack/new-generation-gujarati-athletes-maana-patel. 
  10. "Maana Patel, 15-year-old national swimming champion targets 2016 Rio Olympics" (in en). Zee News. 2015-07-22 இம் மூலத்தில் இருந்து 2018-09-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180919171742/http://zeenews.india.com/sports/others/maana-patel-15-year-old-national-swimming-champion-targets-2016-rio-olympics_1634384.html. 
  11. SiliconIndia. "Maana Patel, The Girl With A Swing!". siliconindia. https://www.siliconindia.com/news/general/Maana-Patel-The-Girl-With-A-Swing-nid-185169-cid-1.html. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானா_பட்டேல்&oldid=3567526" இலிருந்து மீள்விக்கப்பட்டது