மானாமதுரை-விருதுநகர் இருப்புப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மானாமதுரை-விருதுநுகர் இருப்புப்பாதை
பொதுத் தகவல்
வகைவிரைவு தொடருந்து
பயணிகள் தொடருந்து
நிலைசெயற்பாட்டில்
வட்டாரம்தமிழ்நாடு
முடிவிடங்கள்மதுரை சந்திப்பு (MNM)
விருதுநகர் சந்திப்பு (VPT)
நிலையங்கள்5
சேவைகள்1
இணையதளம்www.sr.indianrailways.gov.in
இயக்கம்
திறக்கப்பட்டது2 மே 1964 (1964-05-02) (55 ஆண்டுகளுக்கு முன்னர்)
உரிமையாளர்இந்திய இரயில்வே
இயக்குவோர்தென்னக இரயில்வே
Depot(s)Golden Rock
தொழில்நுட்பத் தகவல்
பாதை நீளம்67 km (42 mi)
தண்டவாள அகலம்1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்80 km/h (50 mph)
வழி வரைபடம்

மானாமதுரை-விருதுநகர் (Manamadurai–Virudhunagar line) இருப்புப் பாதை தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மற்றும் மானாமதுரை ஆகிய நகரங்களை இணைக்கிறது.

வரலாறு[தொகு]

மானாமதுரை சந்திப்பிலிருந்து-விருதுநகர் சந்திப்பிற்கு புதிய இரயில்வே பாதை மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் முன்மொழியப்பட்டது. இது ஏற்கனவே அமைந்துள்ள மானாமதுரை - மதுரை சந்திப்பு மற்றும் மதுரை - விருதுநகர் சந்திப்பு ஆகிய வழித் தடங்களுக்கிடையேயான நெரிசலைக் குறைக்கும் என கருதப்பட்டது.

1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் நாள், 22.66கி.மீ (14.08மைல்) தூரமுடைய விருதுநகர் சந்திப்பு - அருப்புக்கோட்டை பிரிவானது திறக்கப்பட்டு, அதே ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கே.காமராசரால் அருப்புக்கோட்டை இரயில் நிலையமும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் மே 2, 1964 ல், 43.89 கிலோமீட்டர் (27.27 மைல்) தூரமுள்ள அருப்புக்கோட்டை-மானாமதுரை சந்திப்பு இருப்புப்பாதையானது போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.

67கி.மீ (42மைல்) தூரமுடைய மீட்டர் பாதை வகை இருப்புப்பாதைப் பிரிவான இதில் அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய மூன்று இரயில் நிலையங்களும் அமைந்து பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு மிகவும் உதவியது. 2008ஆம் ஆண்டு, மீட்டர் கேஜிலிருந்து அகல இரயில் பாதையாக மாற்றியமைத்தல் பொருட்டு இந்த இருப்புப் பாதைப்பிரிவு மூடப்பட்டது.

22 இடங்களில் ஆளில்லா கடக்கும் சாலைகளைக் கொண்ட இந்த இருப்புப் பாதைப் பிரிவானது ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் போக்குவரவுக்கானப் பாதுகாப்பு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. இறுதியாக 231.58 கோடி
(US$32.66 மில்லியன்)
செலவழிக்கப்பட்டு, ஐந்து பெரிய பாலங்கள், 145 சிறு பாலங்கள் மற்றும் ஐந்து இரயில் நிலையங்களுடன் கூடிய, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு இடையிலான இந்த அகலப் பாதைப் பிரிவானது சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.சி.வேணுகோபாலால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. R. P. Saxena. "Indian Railway History Time line". Irse.bravehost.com. மூல முகவரியிலிருந்து 14 July 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 February 2014.

வெளியிணைப்புகள்[தொகு]