மானசி பிரதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானசி பிரதான்
Manasi Pradhan.jpg
பிறப்பு4 அக்டோபர் 1962 (1962-10-04) (அகவை 60)
பனாப்பூர், கோர்த்தா மாவட்டம், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியாn
கல்விஒடிய இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம், சட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்உத்கல் பல்கலைக்கழகம்,ஜி. எம். சட்டக்கல்லூரி, புரி
பணிபெண்கள் உரிமை செயல்பாட்டாளர், எழுத்தாளர், கவிஞர்
அமைப்பு(கள்)நிர்பயா வாகினி, OYSSபெண்கள், நிர்பயா சமாரோ.
குறிப்பிடத்தக்க படைப்புகள்உர்மி- ஓ- உச்வாஸ், ஆகாஷ் தீப, சுவாகதிகா.
அரசியல் இயக்கம்பெண்களின் மரியாதைக்கான தேசியப் பிரச்சாரம்
விருதுகள்2013, ஸ்த்ரீ சக்தி புரஸ்கார், 2011-இன் சிறந்த பெண்மணி


மானசி பிரதான் (பிறப்பு: அக்டோபர் 4, 1962) ஒரு இந்திய மகளிர் உரிமை ஆர்வலரும் எழுத்தாளரும் . இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நாடு தழுவிய இயக்கமான பெண்களின் மரியாதைக்கான தேசியப் பிரசாரத்தின் நிறுவனரும் ஆவார். [1] [2] [3] [4] [5] 2014 ஆம் ஆண்டில், மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் உலகளாவிய தலைவரான மேரி பிரேமா பியரிக்குடன், ராணி லாஷ்மிபாய் ஸ்த்ரீ சக்தி புரஸ்கர் விருதினை இவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் வழங்கினார். இவர் 2011 இல் 'சிறந்த பெண்கள் விருதை' வென்றவர் ஆவார். [6] [7] [8]

பண்னாட்டு செய்தி வெளியீடுகள் மற்றும் அமைப்புகளில் மானசி பிரதான் அடிக்கடி இடம்பெறுகிறார். 2016 ஆம் ஆண்டில், நியூயார்க்கை தளமாகக் கொண்ட பஸ்டில் (இதழ்) அவரை மிகவும் ஊக்கமளிக்கும் 20 பெண்ணிய ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களில் ஒருவராக பட்டியலிட்டது. [9] 2017 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த வெல்கர் மீடியா ஐ.என்.சி.பெண்ணிய மாற்றத்தை உருவாக்கும் சக்திவாய்ந்த பன்னிரண்டு பெண்களுள் ஒருவராக அவரைப் பட்ட்டியலிட்டது. [10] 2018 ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆக்ஸ்போர்டு ஒன்றியத் தொழிற்சங்கம் இவரை உரையாற்ற அழைத்தது. [11] [12] [13] [14]

அவர் நிர்பயா வாகினி, நிர்பயா சாமரோ மற்றும் OYSS பெண்கள் ஆகியவற்றின் நிறுவனர் ஆவார். இந்திய திரைப்படத் தணிக்கை வாரியம் ,[15] தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றின் விசாரணைக் குழுவில் பணியாற்றியுள்ளார்.

ஒடிசாவின் தொலைதூர கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர், பெண்கள் கல்வி கற்பதற்கு எதிராகப் பரவலாகப் பரவியுள்ள சமூகத் தடைகளை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடினார். மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் சதுப்பு நிலத்தின் மத்தியில் தனது பகுதியில் இருந்த ஒரே உயர்நிலைப்பள்ளிக்கு தினமும் 15 கி.மீ.நடந்தார், தனது கிராமத்தின் முதல் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்குச் சென்ற பெண் ஆனார். பின்னர் தனது பிராந்தியத்தின் முதல் பெண் சட்டப் பட்டதாரியாகவும் ஆனார். மானசி பிரதானின் எழுச்சியூட்டும் வாழ்க்கைக் கதை அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் ஆவணப்படங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. [16]

இளமை வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தில் பனாபூர் தொகுதியில் உள்ள அயதாபூர் என்ற தொலைதூர கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் மானசி பிரதான் பிறந்தார்.[6] இவரது பெற்றோர், ஹேமலதா பிரதான் மற்றும் கோதாபரிஷ் பிரதான் ஆகியோராவர். இவர்களுக்கு பிறந்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் மக்களில் மானசியே மூத்தவர் ஆவார். அவரது தந்தை ஒரு விவசாயி, தாய் ஒரு இல்லத்தரசியாவார்.[17]

பனாபூரின் பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் பெண் கல்வி ஒரு பெரிய தடை என்று கருதப்பட்டது.  பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர அரிதாகவே அனுமதிக்கப்பட்டனர். கிராமத்தில் தனது நடுநிலைப் பள்ளியை முடித்த பிறகு, அவளுடைய கல்வியை முடிக்க பலமான அழுத்தம் தரப்பட்டது. மேலும், அருகிலுள்ள பகுதிகளில் உயர்நிலைப்பள்ளி இல்லை. [18]

தினசரி மலைப்பாங்கான நிலப்பரப்பிலும், சதுப்பு நிலங்களுக்கு இடையிலும் மானசி 15 கி. மீ நடந்து, முழு பிராந்தியத்திற்கும் உள்ள ஒரே உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றார். தனது கிராமத்தில் உயர்நிலைப் பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண்மணியாக உருவெடுத்தார்.[6] [19]

கம்பரிமுண்டாவிலுள்ள பட்டிதபாபன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்ததும், குடும்பம் தனது கல்லூரிக் கல்விக்காக பூரிக்கு மாறியது. கிராம விவசாய நிலத்திலிருந்து குறைந்த அளவே சம்பாதித்ததால், அதைத் தக்கவைத்துக்கொள்வது கடினமாகி, முழு குடும்பத்தினது சுமையும் மானசியின் தோளில் விழுந்தது. இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற உடனேயே, அவர் தனது குடும்பத்தையும், படிப்பையும் ஆதரிக்க வேலை செய்ய வேண்டியிருந்தது. பூரி அரசு மகளிர் கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ மற்றும் உத்கல் பல்கலைக்கழகத்தில் ஒடியா இலக்கியத்தில் எம்.ஏ. பூரியின் ஜி.எம். சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டம் ஆகியவற்றை மானசி பெற்றார். [20] [21] [22]

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2013 மார்ச் 8 அன்று புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் மானசி பிரதானுக்கு 2013 ராணி லட்சுமிபாய் ஸ்ட்ரீ சக்தி புராஸ்கரை வழங்கினார். [23]

தொழில்[தொகு]

மானசி ஒடிசா அரசின் நிதித்துறையிலும், ஆந்திர வங்கியிலும் குறுகிய காலத்திற்குப் பணியாற்றினார். ஆனால் தனது சொந்த ஆர்வத்தைத் தொடர இரண்டு பணிகளையும் விட்டுவிட்டார். அக்டோபர் 1983 இல், தனது 21 வயதில், அவர் தனது சொந்த அச்சிடும் தொழிலையும் ஒரு இலக்கிய இதழையும் தொடங்கினார். சில ஆண்டுகளில், வர்த்தகம் அதிவேகமாக வளர்ந்து, அவரது காலத்தின் சில வெற்றிகரமான பெண் தொழில்முனைவோரின் குழுவில் இவர் இடம்பெற்றார். . [20] [24] [25]

செயற்பாடுகள்[தொகு]

1987 ஆம் ஆண்டில், அவர் OYSS பெண்கள் அமைப்பை நிறுவினார். தொடக்கத்தில் இதன் நோக்கம் மாணவிகள் உயர் கல்வியை அடைய உதவுவதோடு அவர்களை சமூகத்தில் எதிர்கால தலைவர்களாக வளர உதவுவதும் ஆகும். OYSS பெண்கள் அமைப்பு தலைமைத்துவப் பட்டறைகள், கல்வி மற்றும் தொழிற்பயிற்சி முகாம்கள், சட்ட விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு முகாம்களை ஏற்பாடு செய்து, ஆயிரக்கணக்கான இளம் பெண்களை அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் வருங்கால தலைவர்களாக வளர்த்து வருகின்றனர்.

மேற்கூறியவற்றைத் தவிர, இந்த அமைப்பு ஏராளமான நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை மேற்கொள்கிறது.மேலும், பெண்களை மேம்படுத்துவதில் முன்னோடி பங்களிப்பு செய்ததாக பெருமளவில் அறியப்படுகிறது. இந்த அமைப்பு பெண்களின் மரியாதைக்கான தேசியப் பிரசாரத்திற்கும் தலைமை தாங்குகிறது. [26]

பெண்களின் மரியாதைக்கான தேசிய பிரச்சாரம்[தொகு]

நவம்பர் 2009 இல், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நாடு தழுவிய இயக்கமானபெண்களின் மரியாதைக்கான தேசிய பிரச்சாரம் என்ற அமைப்பைத் தொடங்கினார். பெண்கள் மீதான வன்முறை அட்டூழியங்களுக்கு எதிராக தேசத்தை ஊக்குவிப்பதில் இந்த இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.[27] [28]

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட இந்த இயக்கம் பன்முக உத்திகளைப் பயன்படுத்துகிறது.

பெண்கள் மீதான அட்டூழியங்களை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட மற்றும் நிறுவன ஏற்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெண்களின் உரிமைகள் கடை, மகளிர் உரிமைகள் திருவிழா, பெண்கள் உரிமைகள் சந்திப்பு, பெண்கள் உரிமைகள் இலக்கியம், ஒலி-ஒளிக் காட்சிகள், தெரு நாடகங்கள் போன்ற ஏராளமான வாகனங்களைப் பயன்படுத்துகிறது. [29]

மறுபுறம், இது பொதுமக்களின் கருத்தை அணிதிரட்டுவதன் மூலமும், நிறுவன மாற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான திருத்த நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்வதன் மூலமும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது. [30]

2013 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதிலும் இருந்து தொடர்ச்சியான தேசிய கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கிய நான்கு ஆண்டு கால சர்ச்சைக்குப் பிறகு, இந்த இயக்கம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அதன் போராட்டத்தை பட்டியலிடும் விரிவான வரைவுடன் வந்தது.

2014 ஆம் ஆண்டில், இந்த இயக்கம் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் நான்கு புள்ளிகள் கொண்ட சாசனத்தை வெளியிட்டது. அதே ஆண்டில், இது நிர்பயா வாகினியை அறிமுகப்படுத்தியது, இது இந்தியா முழுவதும் பரவியுள்ள 10,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை உள்ளடக்கியது, பொதுக் கருத்துக்களைத் திரட்டுவதற்கும், அதன் நான்கு அம்ச கோரிக்கை சாசனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொடர்ச்சியான பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

நான்கு புள்ளி சாசனம்[தொகு]

2014 ஆம் ஆண்டில், மனசி பிரதான் தலைமையிலான மகளிர் தேசிய பிரச்சாரமானது இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் நான்கு அம்ச கோரிக்கைகளை வெளியிட்டது. இந்த சாசனம் இயக்கத்தின் ஒரு மைல்கல்லாக அமைகிறது. மேலும் பல மாநில அரசாங்கங்கள் பொருத்தமான பெண்களுக்கான சட்டங்களில் திருத்தங்களை செய்ய வழிவகுத்தது.

  1. மதுபான வர்த்தகத்தில் முழுமையான கட்டுப்பாடு
  2. பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி
  3. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு பாதுகாப்பு படை
  4. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விரைவான நீதிமன்றம் மற்றும் சிறப்பு விசாரணை மற்றும் வழக்கு விசாரணை பிரிவு. [30] [31]

இலக்கியப் படைப்புகள்[தொகு]

மானசி பிரதான் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். அவரது நான்காவது புத்தகம் உர்மி-ஓ-உச்ச்வாஸ் ( ISBN 81-87833-00-9 ) எட்டு முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [15] [32] [33]

குறிப்புகள்[தொகு]

  1. "President Confers Stree Shakti Puruskar on International Women's Day". Press Information Bureau, Government of India. 8 March 2014. 12 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Manasi among World's top feminists". The Pioneer. 24 November 2016. 12 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "These women's rights activists inspire us to fight for equality". One.org, Washington, DC. 2017-02-09. 3 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Manasi Pradhan wins Rani Laxmibai Puraskar". 4 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Delhi gangrape victim continues to embolden Indian women - Matters India". 13 March 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  6. 6.0 6.1 6.2 "Rani Laxmibai Stree Shakti Puraskar for Manasi Pradhan". Statesman. 7 March 2014. 21 செப்டம்பர் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2017-02-02 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2020-01-10 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Women Reformers : Breaching Bastions". Sulabh International. 5 March 2017. 3 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  9. Miller, E. Ce (14 November 2016). "20 Feminist Authors And Activists Who Will Inspire You To Get Out There And Fight". Bustle magazine, BDG Media Inc., New York City. 30 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  10. Ivashchenko, Ekaterina (6 July 2017). "Women's Power : 12 Feminists Any Changemaker Should Know". Welker Media Inc., Los Angeles. 19 ஜூலை 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Manasi Pradhan to be a Guest Speaker at Oxford Union". SheThePeople.TV. 11 April 2018. 2 October 2018 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Activist at Oxford Union". The Telegraph. 10 April 2018. 6 October 2018 அன்று பார்க்கப்பட்டது.
  13. "Manasi Pradhan". The Oxford Union, Oxford, United Kingdom. 6 June 2018. 2 October 2018 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  14. "Manasi Pradhan invited to speak at the Oxford Union". The Pioneer. 9 April 2018. 5 October 2018 அன்று பார்க்கப்பட்டது.
  15. 15.0 15.1 "I & B Ministry appoints Manasi Pradhan as Censor Board advisory member - Trade News". BollywoodTrade.com. 2010-08-20. 2014-03-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-15 அன்று பார்க்கப்பட்டது.
  16. Tyagi, Dev (2017-11-20). "Manasi Pradhan : Meet One of India's Finest Unsung Women Heroes". Rapidleaks. 12 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
  17. "महिला हिंसा के खिलाफ आवाज़ उठाती मानसी प्रधान". Lok Bharat Media Network. 4 ஜனவரி 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 Jan 2018 அன்று பார்க்கப்பட்டது.
  18. "Story of Manasi Pradhan". First Stone Foundation. 18 ஆகஸ்ட் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  19. "Manasi Pradhan – The Social Reformer". JanManch TV. 16 ஜூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  20. 20.0 20.1 "Manasi Pradhan wins Rani Laxmibai Puraskar". Orissa Post. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-01-10 அன்று பார்க்கப்பட்டது.
  21. "An interview with Manasi Pradhan". The YP Foundation. 24 மே 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  22. "Manasi Pradhan biography". www.notedlife.com. 4 ஜனவரி 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  23. "laws alone cant come to women's rescue". The Hindu. 8 March 2013. http://www.thehindu.com/news/national/laws-alone-cant-come-to-womens-rescue-pranab/article5764977.ece. பார்த்த நாள்: 15 March 2014. 
  24. "5 Most Inspiring Women Social Workers around the World". Women’s Day. 22 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  25. "Women Entrepreneur contribution to Indian Economy" (PDF). DVS International Journal of Multi-Disciplinary Research, ISSN No.2454-7522, Issue: 08 Vol:02, No.4 April–June 2017. 22 மார்ச் 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 15 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
  26. "Roadmap drawn for rural women empowerment". http://www.dailypioneer.com/state-editions/bhubaneswar/roadmap-drawn-for-rural-women-empowerment.html. 
  27. "Three strategies to cut violence against women". The Pioneer. 13 April 2015. 28 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
  28. "Manasi Pradhan". The Hindu. 9 ஜனவரி 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
  29. "Rural women vow to fight against violence". The Pioneer. 26 April 2013. http://www.dailypioneer.com/state-editions/bhubaneswar/at-chilika-meet-rural-women-vow-to-fight-against-violence.html. பார்த்த நாள்: 2015-03-14. 
  30. 30.0 30.1 "Three-pronged Strategy to Curb Crime Against Women". The Indian Express.
  31. "The Most Courageous Act done to bring Change in India". The Open Page. 5 March 2018. http://www.theopenpage.co.in/Few%20Examples%20of%20the%20most%20courageous%20act%20done%20to%20bring%20the%20change%20in%20India.aspx. பார்த்த நாள்: 2018-03-22. 
  32. "Manasi Pradhan is advisory panel member of Censor Board". IndianTelevision.com. 20 August 2010.
  33. "Manasi Pradhan: Odisha's daughter". 15 September 2016. 1 ஆகஸ்ட் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 ஜனவரி 2020 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானசி_பிரதான்&oldid=3591007" இருந்து மீள்விக்கப்பட்டது