மானசா, பஞ்சாப்

ஆள்கூறுகள்: 29°59′N 75°23′E / 29.98°N 75.38°E / 29.98; 75.38
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேருந்து நிலையம் , மானசா  
மானசா 
நகரம் 
மானசா  is located in பஞ்சாப்
மானசா 
மானசா 
பஞ்சாபில் மானசா நகரத்தின் அமைவிடம்
மானசா  is located in இந்தியா
மானசா 
மானசா 
மானசா  (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°59′N 75°23′E / 29.98°N 75.38°E / 29.98; 75.38
நாடு இந்தியா 
மாநிலம் பஞ்சாப்
மாவட்டம் மானசா
ஏற்றம்212 m (696 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்82,956
மொழிகள் 
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்151505
தொலைபேசி கோடு 01652
வாகனப் பதிவுPB-31

மனசா இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது மனசா மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக உள்ளது. இந்நகரம் பட்டிண்டா-ஜின்ட்-டெல்லி தொடருந்து பாதையில் அமைந்துள்ளது. மேலும் பர்னாலா-சர்துல்கர்-சிர்சா மாநில நெடுஞ்சாலை இந்நகரின் ஊடே செல்கின்றது .

பஞ்சாபி மொழி பேசும் மக்களே இந்நகரில் அதிகமாக உள்ளனர்.

மானசா நகரம் பருத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்களை முதன்மையாக கொண்டுள்ளது. உண்மையில், விவசாயம் இம்மாவட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பஞ்சாபின் இந்த பகுதிக்கு விஜயம் செய்வது, குளிர்கால பருத்தி தோட்டங்களை கண்டு ரசிப்பது ஆகியவை மிகவும் சிறப்பானதாகும். மான்சா நகரத்தின் தென்கிழக்கில் பாபா பாயி குருதாஸ் ஜி கோவில் உள்ளது. பாபா பாயி குருதஸ் ஜி கோவிலில் , ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-ஏப்ரல் பருவத்தில் திருவிழா நடைபெற்றது.

நிலவியல் அமைப்பு [தொகு]

மானசா நகரம்   29.98 ° N 75.38 ° ஈ இல் அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து  சராசரியாக 212 மீட்டர் (695 அடி) உயரத்தில் உள்ளது.

பண்டைய காலம்[தொகு]

மானசா மாவட்டத்தின் பழங்கால வரலாறு சிந்து சமவெளி நாகரிகத்தோடு ஒன்றி காணப்படுகிறது. மன்சா மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள தொல்பொருள் கண்டுபிடிப்புகள் ஹரப்பா மற்றும் மோகன்ஜோதாரோவில் கண்டெடுக்க பட்டது போலவே இருக்கின்றன. இந்நகரின் மூன்று பகுதிகள் முந்தைய ஹாரப்பா, ஹரப்பா மற்றும் லேட் ஹரப்பா என பிரிக்கப்பட்டுள்ளது. திரு.பாபா பாயி குருதஸ் தனது கடைசி காலத்தில் இங்கு வாழ்ந்து வந்தார் என்று நம்பப்படுகிறது.

வரலாறு[தொகு]

மானசா முன்பு புல்கிய சீக்கிய வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தது (1722-1948), பின்னர் கைத்தாள் சீக்கிய ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது (1762-1857). மானசா 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி, பஞ்சாபின் பதிந்தா மாவட்டத்திலிருந்து மாவட்டம் ஆனது.

புகழ் பெற்ற பை குர்தாஸ் என்பவரால் இந்த நகரம் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் இந்த இடத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. ஒருமுறை அவர் தனது மனைவியை அவருடன் அழைத்துச் செல்ல அவரது மாமியார் வீட்டிற்கு வந்தார், ஆனால் பெண்வீட்டார் அவரது மனைவியை அனுப்ப மறுத்துவிட்டார்கள். இதனால் பாய் குர்தா தனது மனைவியின் வீட்டிற்கு முன்பாக தியானத்தில் ஈடுபட தொடங்கினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது மனைவியின் பெற்றோர் தங்களது மகளை பாய் குர்தாவுடன் அனுப்ப ஒப்புக்கொண்டனர். ஆனால், பாய் குர்தா அவருடன் சேர்ந்து அவரது மனைவியை அழைத்து செல்ல மறுத்துவிட்டார், மேலும் அதே நாளில் அவர் உலக வாழ்க்கையை விட்டுவிட்டு துறவு மேற்கொள்ள போவதாக கூறிவிட்டார். அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் திருவிழா கொண்டாட படுகின்றது, அந்நாட்களில் பெரும்பாலான மக்கள் மானசா மாவட்டத்தில் கூடி திருவிழாவை சிறப்பிக்கின்றனர் . 1952 ஆம் ஆண்டு முதல் இந்நகரம் முதல் வகுப்பு நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 

விளையாட்டுகள் [தொகு]

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் ஒரு கிரிக்கெட் அகாடமி உள்ளது. ஜக்மோகன் சிங் தலிவால் அகாடமியின் பயிற்சியாளராக உள்ளார்.

சர்வதேச கபடி பொடிகளை நடத்தும் திடலும் இந்நகரில் அமைந்துள்ளது.

கல்வி [தொகு]

மாநிலத்தின் குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட நகரமாக மானசா உள்ளது, எனினும் இந்த நகரம் மாணவர்கள் மாநில தேசிய தகுதி தேர்வுகளில் சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளனர் . இந்த நகரத்தில் இரண்டு கல்லூரிகள் உள்ளன. அரசு நேரு மெமோரியல் போஸ்ட் கிராஜுவேட் கல்லூரி மற்றும் எஸ்.டி. கன்யா மகாவித்யாலா கல்லூரி ( எஸ்.எஸ். கல்வியியல் கல்லூரி, சுனாம் ரோடு பீகி மானசா மாவட்டம்). மானசா மாவட்டத்தில் மூன்று மூத்த உயர்நிலை பள்ளிகளும் , தொண்ணூறு உயர்நிலைப் பள்ளிகளும் , ஒரு நடுநிலைப்பள்ளியும் மற்றும் ஒரு முதன்மை பள்ளியும் அமைந்துள்ளது . இங்கு ஒரு சிவில் மருத்துவமனையையும், மூன்று மருந்தகங்களும் , ஒரு ஆயுர்வேத மற்றும் ஒரு ஹோமியோபதி மருந்தகங்களும் கொண்டுள்ளது. எஸ்.சி. சிட்டி மற்றும் பி.எஸ். சதர் மற்றும் இரயில்வே நிறுத்தம் ஆகிய இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. நகரத்தின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் கவனம் போதுமானதாக இல்லை . இந்நகரின் சாலைகள் நல்ல பராமரிப்பு நிலையில் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக புதிய பள்ளிகளையும் பி.டெக் கல்லூரிகளையும் திறக்க சில புதிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர் . ஆனால் இன்னும் நிறைய செய்யப்பட மாற்றங்கள் வேண்டியிருக்கிறது.  

போக்குவரத்து[தொகு]

மானசா மற்ற நகரங்களுக்கும், குறிப்பாக தேசிய தலைநகரான புது தில்லிக்கும், சிறந்த இரயில் மற்றும் போக்குவரத்து அமைப்பு மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள விமான நிலையங்களாக புது தில்லி மற்றும் சண்டிகரில் 248 கிமீ மற்றும் 180 கி.மீ தூரத்தில் சாலை வழியாக அமைந்துள்ளது. அருகிலுள்ள புதிய விமான நிலையங்கள் மொஹலியி, பட்டிண்டாவில் உள்ள லூதியானா, சர்வதேச விமான நிலையங்கள் கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன . இந்நகரம் தொடருந்து மூலமாக மற்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே தில்லி - பதிந்தா கிளை தொடருந்து பாதையில் அமைந்துள்ளது. புதுடில்லி-பதிந்தா இன்டீசிட்டி எக்ஸ்பிரஸ், பெரோஸ்புர் மும்பை ஜந்தா எக்ஸ்பிரஸ், பிகானர் குவாஹ்தி எக்ஸ்பிரஸ், பஞ்சாப்-மெயின் மான்சா நிலையம் போன்ற பல ரயில்கள் இந்நகரின் ஊடே பயணிக்கின்றன . தவிர, புது தில்லி மற்றும் மானசாவுக்கும் தினமும் தொடர்ச்சியான இடைவெளியில் பல பயணிகள் ரயில்கள் இயங்குகின்றன. பஞ்சாபின் எல்லா நகரங்களுக்கும் பேருந்து வழித்தடங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை [தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மன்க்ள் மானசா மக்கள்தொகை  82,956 ஆகும். மனசா  மக்களின் சராசரி கல்வியறிவு 58.08% ஆகும்: ஆண்களின் கல்வியறிவு 63.70%, பெண்களின் கல்வியறிவு 51.74% ஆகும். மான்சாவில் , மக்கள் தொகையில் 11.02% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sub-District Details". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானசா,_பஞ்சாப்&oldid=2474562" இலிருந்து மீள்விக்கப்பட்டது