மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு அல்லது பாண்டியன்குளம் பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 15 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அம்பாள்புரம், கரும்புள்ளியன், கொல்லவிளாங்குளம், மூன்றுமுறிப்பு, நட்டாங்கண்டல், ஒட்டறுத்தகுளம், பாலிநகர், பாண்டியன்குளம், பொன்னகர், பூவரசங்குளம், செல்வபுரம், சிரட்டிகுளம், சிவபுரம், வன்னிவிளாங்குளம், விநாயகபுரம் ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கில் மன்னார் மாவட்டமும், தெற்கில் மன்னார், வவுனியா மாவட்டங்களும், கிழக்கில் வவுனியா மாவட்டமும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 490 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

வெளியிணைப்புக்கள்[தொகு]