மாநாட்டு அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மே 2006 இல் லாஸ் ஏஞ்சல்ஸின் பிளேயா விஸ்டாவில் ஒரு சிறிய மாநாட்டு அறை.
ஹெல்சின்கியில் உள்ள பின்லாந்தியா ஹாலின் ஒரு பெரிய மாநாட்டு அரங்கம்.
பெர்னில் உள்ள சுவிட்சர்லாந்தின் பெடரல் அரண்மனையில் ஒரு சந்திப்பு அறை.

மாநாட்டு மண்டபம், மாநாட்டு அரங்கம் (Conference hall) என்பது வணிக மாநாடுகள், கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படும் அறை ஆகும்.

அறை[தொகு]

இது பொதுவாக பெரிய விடுதிகள் மற்றும் மாநாட்டு மையங்களில் காணப்படுகிறது. பொதுவாக மருத்துவமனைகள் உட்பட பல இடங்களிலும் உள்ளன [1] . சில நேரங்களில் பெரிய அறைகள்கள், திருமண மண்டபங்கள் போன்றவை மாநாடு அரங்காக மாற்றியமைக்கப்படுகின்றன. மாநாட்டு அறைகள் அமைக்கபட்ட வானூர்திகளும் உள்ளன.[2] பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக மாநாட்டு அரங்குகள் சாளரங்கள் இல்லாமல் இருக்கக்கூடும். அத்தகைய ஒரு அரங்குக்கு எடுத்துக்காட்டாக டேங் எனப்படும் அரங்கம் பென்டகனில் உள்ளது.[சான்று தேவை]

பொதுவாக, மாநாட்டு அரங்குகளில் தளபாடங்கள், மேல்நிலை பிம்பம் காட்டும் கருவிகள், மேடை விளக்குகள், ஒலி பெருக்கி அமைப்புகளைக் கொண்டிருக்கும் . [3]

கட்டிடங்களின் மற்ற பகுதிகள் புகைபிடிப்பதை அனுமதிக்கும் போது கூட மாநாட்டு அரங்குகளில் புகைபிடிப்பது பொதுவாக தடைசெய்யப்படுகிறது. [4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாநாட்டு_அரங்கம்&oldid=3669279" இலிருந்து மீள்விக்கப்பட்டது