மாத்தேயு ரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்தியு ரிக்கா
माथ्यु रिका
சுய தரவுகள்
பிறப்பு15 February 1946 (1946-02-15) (வயது 78)
எய்க்ஸ் லே பேன், சாவ்வா, பிரான்சு
சமயம்பௌத்தம்
தேசியம்பிரெஞ்சு
பாடசாலைவஜ்ரயாணா
Educationபாஸ்சர் இன்ஸ்டிடியூட்
(மூலக்கூறு மரபியலில் முனைவர் பட்டம்)
Occupation
பதவிகள்
Teacherகாங்க்யூர் ரின்போச்
தில்கோ கியென்ட்ஸே ரின்போச்
இணையத்தளம்MatthieuRicard.org

மாத்தியு ரிக்கா (ஆங்கிலம்: Matthieu Ricard; பிறப்பு: 15 பிப்ரவரி 1946) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், புகைப்படக் கலைஞரும், மொழிபெயர்ப்பாளரும், புத்தத் துறவியுமாவார். இவர் நேபாளத்தில் உள்ள செச்சென் டென்னி டார்ஜிலிங் மடத்தில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தலாய் லாமாவுடன் ரிக்கா, 2000ஆம் ஆண்டில்

பிரெஞ்சு நாட்டு அறிஞர்கள் மற்றும் ஆளுமைகளின் வட்டத்தில் வளர்ந்த மாத்தியு ரிக்கா,[1] 1972-இல் பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டில் மூலக்கூறு மரபியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் திபெத்திய புத்த மதத்தை பின்பற்ற முடிவு செய்து தனது அறிவியல் வாழ்க்கையைத் துறந்து இமயமலை உள்ளிட்ட இடங்களில் வாழத் துவங்கினார்.[2]

டேவோஸ் காங்கிரஸ் சென்டர், சுவிட்சர்லாந்து, 30 January 2009 – உலகப் பொருளாதார கலந்தாய்வின் ஆண்டுக் கூட்டத்தில் ரிக்கா.

ரிக்கா மைண்ட் அண்ட் லைஃப் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்தின் வாரிய உறுப்பினர் ஆவார். கருணா-ஷேசன் என்ற தனது அமைப்பின் மூலம் கிழக்கு நாடுகளில் அவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக பிரெஞ்சு தேசிய சிறப்புப் பதக்கத்தை பெற்றார். 1989 முதல் 14வது தலாய் லாமாவுக்குப் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு வருகிறார்.[1] 2010 முதல் பல நாடுகளுக்குப் பயணித்து தொடர் உரையாற்றியும் கியாப்ஜே தில்கோ கியென்ட்ஸே ரின்போசேயின் அவதாரமாகக் கருதப்படும் தில்கோ கியென்ட்ஸே ரின்போச்சின் போதனைகளைக் கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

ரிக்கா தனது நூல்களில் விலங்குகளின் உரிமையினை ஆதரித்து எழுதியுள்ளார். இவர் நனிசைவ வாழ்க்கை முறையினைப் பரிந்துரை செய்கிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Buddhist monk is the world's happiest man, Daily News America, 29 October 2012, archived from the original on 2 November 2012, பார்க்கப்பட்ட நாள் 2 November 2012
  2. Chalmers, Robert. "Matthieu Ricard: Meet Mr Happy". The Independent. https://www.independent.co.uk/news/people/profiles/matthieu-ricard-meet-mr-happy-436652.html. 
  3. Bekoff, Marc (26 September 2016). "Matthieu Ricard's 'A Plea for the Animals' Is A Must Read: A Wonderful Celebration Of World Animal Day 2016".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தேயு_ரிக்கா&oldid=3394502" இலிருந்து மீள்விக்கப்பட்டது