மாதையன் அங்கமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதையன் அங்கமுத்து
Dr Madhaiyaan Angamuthu
பிறப்புஅசாம்
தேசியம்இந்தியர்
பணிஅரசு ஊழியர்

மாதையன் அங்கமுத்து (Madhaiyaan Angamuthu) 2002 ஆம் ஆண்டு தொகுதியில் அசாம்-மேகாலயா பணிநிலைப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார்.[1][2][3]

இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் ஓர் அமைப்பான வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும்[4][5][6] அசாம் அரசின் சுற்றுலாத் துறையின் மாநில ஆணையர் மற்றும் செயலராகவும் உள்ளார்.[7][8]

தொழில்[தொகு]

அங்கமுத்து அசாம் இயோர்காட்டு மாவட்டத்தில் உதவி ஆட்சியராக தனது பணியை தொடங்கினார். ஐந்து வெவ்வேறு அசாம் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் பல்வேறு மாற்றங்களைத் ஏற்படுத்தினார்.[9] குவகாத்தி பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை செயல் அலுவலராக பதவி வகித்தார். [10] 2018 ஆம் ஆண்டில் அசாம் மாநில அரசின் சுற்றுலாத் துறையின் மாநில ஆணையராகவும் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.[11] 2020 ஆம் ஆண்டில், வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக அங்கமுத்து நியமிக்கப்பட்டார்.[12][13][14] 2020 ஆம் ஆண்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அசாம் அரசாங்கம் பிலிம்பேரின் அடுத்த பதிப்பை கவுகாத்தியில் நடத்தும் என்று அறிவித்தார்.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. "M Angamuthu appointed Chairman, APEDA |". Whispersinthecorridors. Archived from the original on 2022-09-28. பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
  2. "Assam government joins hands with Times of India Group to host the 65th Filmfare Awards in Guwahati - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
  3. "Guwahati Smart City Limited". gscl.assam.gov.in. Government of Assam.
  4. "Consulate General of India, San Francisco, California : Events/Photo Gallery". www.cgisf.gov.in.
  5. "Ladakh hosts international buyer-seller meet on agri product exports - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
  6. Radhakrishnan, Vignesh; Nihalani, Jasmin (2 April 2022). "India looks to fill wheat granaries depleted by Ukraine war in many countries". The Hindu (in Indian English).
  7. "Filmfare Awards 2020 to be held in Guwahati - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
  8. "Covid-19 prevention: Assam put in partial quarantine | Guwahati News - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
  9. "Dr. Madhaiyaan Angamuthu" (PDF). apeda.gov.in.
  10. "Chairman APEDA". www.apeda.gov.in.
  11. "Coronavirus: Assam Shuts Schools, Cancels Exams Till March 29". NDTV.com (in ஆங்கிலம்).
  12. "Basmati rice exports increase by 26% in Q1 to $1.15 bn: Commerce Ministry". IBEF.org.
  13. "Record CaFE – Madhaiyaan Angamuthu: 'Despite Covid-19, agricultural exports did well'". Financialexpress (in ஆங்கிலம்).
  14. Lavania, Deepak. "'UP to play critical role in achieving $400 billion merchandise export target in current fiscal' | Agra News - Times of India". The Times of India (in ஆங்கிலம்).
  15. "Filmfare Awards 2020 All Set To Be Hosted In Guwahati". filmfare.com (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதையன்_அங்கமுத்து&oldid=3625673" இலிருந்து மீள்விக்கப்பட்டது