மாதே மகாதேவி
மாதே மகாதேவி | |
---|---|
பிறப்பு | சசலஹாட்டி , சித்ரதுர்கா | 13 மார்ச்சு 1946
இறப்பு | 14 மார்ச்சு 2019 பெங்களூர் | (அகவை 73)
தேசியம் | இந்தியர் |
கல்வி | இளங்கலை அறிவியல் முதுகலைப் பட்டம் |
பெற்றோர் | பசப்பா (தந்தை) கங்காம்மா (தாய்) |
மருத்துவர் பூஜ்யா மாதே மகாதேவி இளம் அறிவியல் (Dr Poojya Maate Mahadevi 13 மார்ச் 1946 - 14 மார்ச் 2019 [1] ) ஓர் இந்திய ஆன்மீகத் தலைவர், மறைபொருள் ஆய்வாளர் , எழுத்தாளர் மற்றும் முதல் பெண் சத்குரு ஆவார். வீர சைவ சமூகத்தின் தலைவராக இருந்தவர் ஆவார். [2] [3]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]1970 ஆம் ஆண்டில் இவர் லிங்காயத் சமூகத்தில் ஒரு சத்குருவாக ஆனார், முதல் முறையாக ஒரு பெண் அந்த பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் 12 ஆம் நூற்றாண்டின் பெண் கவிஞரான அக்கா மகாதேவியை, தனது முன்மாதிரியாக கொண்டிருந்தார். [4] [5]
1983களில், இவர் இருபது புத்தகங்களை வெளியிட்டு, கர்நாடகாவின் தார்வாடுவில் ஜகன்மாதா அக்கா மகாதேவி ஆசிரமம் என்ற கல்வி மற்றும் மத நிறுவனத்தைத் தொடங்கினார். பெண்களின் கல்வி மற்றும் ஆன்மீக மேம்பாடுகளை நோக்கமாகக் கொண்டு அந்த நிறுவனம் செயல்படும். இவரது பல புத்தகங்களில் பசாவ தத்வ தரிசனம் என்பது இடம்பெற்றிருக்கும். இது சாதி அமைப்புக்கு எதிராகப் போராடிய 12 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியும் தத்துவஞானியுமான பசவர் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றியதாகும்.
சான்றுகள்
[தொகு]- ↑ https://www.deccanchronicle.com/nation/current-affairs/150319/lingayat-seer-jagadguru-mate-mahadevi-is-dead.html
- ↑ The Yogi and the mystic: studies in Indian and comparative mysticism. Curzon. 1989.
- ↑ Tahira Basharat (July–December 2009). "The Contemporary Hindu Women of India: An Overview". South Asian Studies: A Research Journal of South Asian Studies 24 (2): 242–249. http://pu.edu.pk/csas/journal/PDF/5-Dr.%20Tahira.pdf.
- ↑ Feminism and World Religions. SUNY Press. 1999.
- ↑ Lingayathism website பரணிடப்பட்டது 2010-08-09 at the வந்தவழி இயந்திரம்