மாதுரி பாதுரி
மாதுரி பாதுரி (Madhuri Bhaduri)(பிறப்பு 1958) ஓர் இந்திய கலைஞர் ஆவார்.
முதலில் ஒரு விளையாட்டு வீரராக, தேசிய அளவில் பூப்பந்து, சுவர்ப்பந்து விளையாடிய பாதுரி, 1977ஆம் ஆண்டு ஓவியம் வரையத் தொடங்கினார். இவர் தனது ஆரம்பக்காலக் கலைப்படைப்புகளை நண்பர்களுக்கும் குடும்ப உறவினர்களுக்கும் பரிசாக வழங்கினார். பின்னர் மக்கள் ஓவியங்களைப் பணம் கொடுத்து வாங்கத் தயாராக இருப்பதை உணர்ந்தவுடன் அவற்றை விற்கத் தொடங்கினார்.[1][2] புனேவில் உள்ள அலையன்சு பிரான்சைசில் பிரெஞ்சு மொழியைப் படித்த பிறகு, 1988ஆம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பாதுரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாலக் கந்தர்வா கலைக்கூடத்தில் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்தத் தொடங்கினார்.[3][4]
தனது தொழில் வாழ்க்கையில், பாதுரி பல்வேறு பாணிகளில் படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் பண்பியல் ஓவியம், நிலப்பரப்புகள், உருவ ஓவியங்கள் ஆகியவை அடங்கும்.[5] இவர் முதன்மையாக நெய்யோவியம் வரையத் தொடங்கினாலும் 2002ஆம் ஆண்டில் சிற்பக் கலையிலும் சோதனைகளைச் செய்தார்.[3] காயத்திரி தேவி, அஜய் பிரமல், ஆதித்ய விக்ரம் பிர்லா, ஜாம்ஷெட் பாபா (டாட்டா புதல்வர்கள் முன்னாள் தலைவர்) உள்ளிட்ட பல ஓவிய சேகரிப்பாளர்களால் இவருடைய ஓவியங்கள் வாங்கப்பட்டன.[2][3] பாதுரியின் படைப்புகள் இந்தியா மட்டுமின்றி துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கண்காட்சி படுத்தப்பட்டுள்ளன.[6] பாதுரி நியூயார்க்கின் அகோரா கேலரியால் தன்னுடைய ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
2016ஆம் ஆண்டில், "கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் துறையில் ஐகானிக் தலைமைத்துவம்" என்ற பிரிவில் பாதுரி அனைத்து மகளிர் விருதையும், பெண்களுக்கான சரோஜினி நாயுடு தேசிய விருதையும் பெற்றார்.[3][7]
பாதுரியின், எம் படப்பிடிப்பகம், புனேவில் அமைந்துள்ளது. இங்குதான் தனது வாழ்நாளைக் கழித்துவருகிறார்.[1][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Kaur, Loveleen (11 October 2017). "Madhuri Bhaduri – Life Through The Canvas And Beyond". Pune365.com. Archived from the original on 19 July 2018. Retrieved 19 July 2018.
- ↑ 2.0 2.1 Singh, Himanshi Lydia (9 February 2016). "Madhuri Bhaduri on creativity, arts and being human". The Woo Mag. Archived from the original on 11 June 2024. Retrieved 19 July 2018.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Madhuri Bhaduri - Senior Artist - India". All Ladies League. Archived from the original on 28 February 2021. Retrieved 19 July 2018.
- ↑ "Madhuri Bhaduri". Fiidaa Art. Archived from the original on 19 July 2018. Retrieved 19 July 2018.
- ↑ "Canvas is a reflection of the artist, says painter Madhuri Bhaduri". Zoom (Indian TV channel). Times Now. 30 March 2018. Archived from the original on 7 August 2020. Retrieved 19 July 2018.
- ↑ Light, David (7 April 2015) [15 November 2012]. "In the frame". Khaleej Times. Archived from the original on 11 June 2024. Retrieved 19 July 2018.
- ↑ 7.0 7.1 "Iconic Women - Madhuri Bhaduri". All Ladies League. 2016. Archived from the original on 22 May 2017. Retrieved 19 July 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]- கலைஞரின் வலைத்தளம்
- TEDxVITPune இல் கலையின் புதிரை அவிழ்ப்பது: புரிதலுக்கான ஒரு பயணம் குறித்து மாதுரி பதுரியின் TEDx பேச்சு.