மாதுரி சட்டோபாத்யாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாதுரி சட்டோபாத்யாய்
படிமம்:Madhuri Chattopadhyay.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்புதிசம்பர் 16, 1939(1939-12-16)
கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா
இறப்பு19 அக்டோபர் 2013(2013-10-19) (அகவை 73)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடுதல்

மாதுரி சட்டோபாத்யாய் (Madhuri Chattopadhyay) (16 திசம்பர் 1940 - 19 அக்டோபர் 2013) கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு வங்காளப் பாடகராவார். இவர் 1960, 70 மற்றும் 80களில் வங்காள மொழியில் ஏராளமான பிரபலமான பாடல்களைப் பாடினார். [1] [2] கீதம், கசல், வங்காள நவீன பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், நஜ்ருல் கீதம், ரவீந்திர சங்கீதம் ஆகியவற்றில் இவர் செய்த பங்களிப்புக்காகைவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். இவர் ஒரு சில வங்காள மொழித் திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாகவும் இருந்தார். பிற்காலத்தில் சியாமா சங்கீத்திலும் இசைத் தொகுப்புகளை வெளியிட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சங்கர்லால் பட்டாச்சார்யா என்பவரின் கணக்குகளின்படி, [3] மாதுரி கொல்கத்தாவின் பூங்காத் தெருவிலுள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தார். மேலும் தனது ஆரம்ப ஆண்டுகளில் வடக்கு கொல்கத்தாவில் உள்ள பலராம் போஸ் படித்துறை சாலையில் உள்ள தனது தாய் மாமாவின் வீட்டில் வளர்க்கப்பட்டார். இவரது தந்தை ஸ்ரீ சிவநாத் பாண்டோபாத்யாய் ஒரு பிரபலமான கீர்த்தனை பாடகராக இருந்தார். இது இவருக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தாது. இவர், தனது ஆரம்ப காலங்களிலிருந்து பாடகர் உமா தே, உஸ்தாத் கெராமத்துல்லா கான், பண்டிட் ஹரிஹர் சுக்லாஜி போன்ற பிரபல கலைஞர்களின் கீழ் இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றார். இவரது தந்தையைத் தவிர, பிரபல பாடகர் இரத்தின் கோஷிடமிருந்து கீர்த்தனையில் பயிற்சி பெற்றார். இவருக்கு அருண்குமார் சட்டோபாத்யாய் என்பவருடன் திருமணம் நடந்தது. இதன் மூலம் இவர்களுக்கு ரூபா சட்டோபாத்யாய் என்ற ஒரு மகள் இருக்கிறார்.

தொழில்[தொகு]

மாதுரி 1955இல் தனது பதினான்கு வயதில் அனைத்திந்திய வானொலியில் ஒரு பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1959 ஆம் ஆண்டில் மெகாஃபோனிலிருந்து தனது முதல் பதிவை பக்தி இசைத் தொகுப்பாக வெளியிட்டார். இதில் இடம்பெற்ற இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்தவர் நாச்சிகேதா கோஷ் என்பவர். "ஓலி ஓமன் கோர் நொய்", "டோமே அமே புரோதம் தேகா" என்ற இந்த இரண்டு பாடல்களும் அவற்றின் முதல் வெளியீட்டில் ஒரு பெரிய வெற்றியாக மாறியது. மேலும், வங்காளிகளின் மனதில் ஒரு நிரந்தர இடத்தையும் உருவாக்கியது. [4]

மெகாஃபோன் இசைத் தட்டு நிறுவனத்தின் உரிமையாளர் கமல் கோஷ் இவரை சலில் சௌதுரியிடம் அறிமுகப்படுத்தினார். 1960ஆம் ஆண்டில் இவர் சலீல்சௌதுரி இசையமைத்த தனது பக்தி இசைப் பாடல்களான "நிஜேர் ஹரே குன்ஜி", "எபார் அமர் சோமோய் ஹோலோ ஜாபர்" என்ற இரண்டு பாடல்களை வெளியிட்டார். [4]

சலீல் சௌத்ரியின் மேலும் சில பாடல்களையும் இவர் பாடினார். <[2] "ஓய் ஜீ சோபுஜ் போனோ பித்திகா" பாடலுக்கு இசையமைக்கும்போது சலீல், பீத்தோவனின் 6 வது சிம்பொனியின் (பாஸ்டோரல்) இசைக் குறிப்புகளைப் பயன்படுத்தினார். இது மாதுரியின் குரலுடன் கலந்தது .

வங்காளத் திரைப்படங்களில் பின்னணிப் பாடகர்[தொகு]

இசை மேதையான இரத்தீன் கோஷ் இவரது குருவாக இருந்தார். அவர்தனது இசையமைப்பில் 1964இல் "மோஹா தீர்த்த காளிகாட்" என்ற வங்காளத் திரைப்படத்தில் பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தினார். நீலிமா பந்தோபாத்யாய், பினாய் ஆதிகாரி மற்றும் மானஸ் முகோபாத்யாய் ஆகியோருடன் சேர்ந்து பாடிய பாடல் இது. அதே ஆண்டில் இவர் "இராதாகிருஷ்ணா" என்ற வங்காளத் திரைப்படத்தில் பாடினார். 1965 ஆம் ஆண்டில் இவர் "ரூப் சனதன்" ஒரு கீர்த்தனையில் பாடினார். மானபேந்திர முகோபாத்யாய் 1966 ஆம் ஆண்டில் "உத்தர் புருஷ்" திரைப்படத்தில் ஒரு வெற்றியைக் கொடுத்தார். இதில் இடம்பெற்ற "எக்பார் ப்ரோஜே சாலோ பிரஜேஸ்வர்" பாடல் மிகவும் பிரபலமானது. இவர் குரல் கொடுத்த பிற திரைப்படங்கள் "ஷாச்சிமர் சோன்சார்" (1971), "ஸ்வர்ணா மஹால்" (1982), "டானியா" (1987) போன்றவை. [5]

இவரது ஒப்பிடமுடியாத திறமை மற்றும் இவரது சிறப்பான விளக்கங்கள் இருந்தபோதிலும், இவர் ஊடகங்கள் மற்றும் விளம்பரங்களின் கவனத்தை ஈர்க்காமல் தன்னை ஒதுக்கி வைத்திருந்தார்.. [6]

விருதுகள்[தொகு]

இவருக்கு 2012 ஆம் ஆண்டில் மேற்கு வங்க அரசு "இசை சம்மான்" என்ற கௌவரவத்தை வழங்கியது. [7]

மேற்கோள்கள்[தொகு]