மாதிரிப் பள்ளித் திட்டம் (இந்திய அரசு)
மாதிரிப் பள்ளித் திட்டம் (இந்திய அரசு), இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பொது-தனியார் கூட்டு முயற்சியின் கீழ் இந்தியாவில் 6,000 மாதிரிப் பள்ளிகளை நிறுவ இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்பள்ளிகள் இந்தியாவின் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களில் நிறுவப்பட உள்ளது. திறன்மிகு கிராமப்புற குழந்தைகளுக்கு இம்மாதிரிப் பள்ளிகள் அதிக ஊக்கம் அளிக்கக்கூடியதாக இருக்கும்.[1] இத்திட்டத்திற்கு மாநில அரசுகள் தேவையான நிலம் ஒதுக்கும். இந்திய அரசும், தனியார் நிறுவனங்களும் நிதி வழங்கும். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு, ஒரு மாதிரிப் பள்ளி வீதம் அமைக்கப்பட உள்ளது. இம்மாதிரிப் பள்ளியானது கேந்திரிய வித்யாலயா போன்ற குறைந்த பட்சக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். மாணவர்-ஆசிரியர் விகிதம், தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள், முழுமையான கல்விச் சூழல், பொருத்தமான பாடத்திட்டம், வாரியத் தேர்வுகளில் செயல்திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும்.[2]பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி இத்திட்டத்திற்கு செலவிடப்படும். தமிழ்நாடு தவிர பி|ற மாநிலங்களில் இத்திட்டத்தின் கீழ் மாதிரி பள்ளிகள் நிறுவப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இத்திட்டதிற்கு பதிலாக தில்லி அரசு நடத்தும் பள்ளிகள் போன்று தமிழ்நாட்டில் முன்மாதிரிப் பள்ளிகள் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளது.[3]
திட்டத்தின் நோக்கம்
[தொகு]- மாதிரிப் பள்ளிகள் திட்டத்தின் மூலம் மக்களவைத் தொகுதி அளவில் உயர்தர பள்ளிக் கல்வியை வழங்குதல்.
- இப்பள்ளிகள் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியே இலக்காக கொண்டிருக்கும்.
- பொது-தனியார் திட்டத்தின் கீழ் நிறுவப்படவுள்ள மாதிரிப் பள்ளிகளின் காரணங்கள்:
- தனியார் கூட்டாளிகள் பள்ளியின் மூலதனச் செலவினங்களுக்கு பங்களிப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளை அமைத்தல்
- தரமான கல்வியை வழங்குவதை சாத்தியமாக்கும்
- நீண்டகால ஒப்பந்தத்தின் பின்னணியில் தனியார் துறை செயல்திறன், வாழ்க்கைச் சுழற்சி செலவுகளை மேம்படுத்தவும், பள்ளி உள்கட்டமைப்பு உட்பட கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- சட்டப்பூர்வமாக தகுதியுள்ள தனியார் நிறுவனத்தால் மாதிரிப் பள்ளியின் உள்கட்டமைப்பு நிறுவப்படும். இந்த தனியார் நிறுவனம் ஒரு அறக்கட்டளை அல்லது ஒரு சங்கம் அல்லது இலாப நோக்கற்ற நிறுவனமாக இருக்கலாம். இதன் தொடர்ச்சியான செலவுக்கு இந்திய அரசு பங்களிக்கும்.
இத்திட்டத்தின் பயன்கள்
[தொகு]- புதிய மாதிரிப் பள்ளிகள் நிறுவுதல் அல்லது ஏற்கனவே உள்ள பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக மாற்றுதல்.
- கற்பித்தலுடன் விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு வாய்ப்புகள் இருக்கும்.
- மாதிரிப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல், தோட்டங்கள், கருத்தரங்கம் போன்ற வசதிகள் வழங்கப்படும். * மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நூல்கள் மற்றும் செய்தித்தாள்களுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும். வழங்கப்படும்.
- இப்பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உட்கட்டமைப்பு, இணைய இணைப்புகள் மற்றும் முழுநேர கணினி ஆசிரியர்கள் இருப்பர். அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் கற்பிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
- இப்பள்ளிகளில் வழக்கமான பாடம் சார்ந்த ஆசிரியர்களைத் தவிர கலை மற்றும் இசை ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள். மேலும் மாணவர்களுக்கு இந்தியப் பாரம்பரியம், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படும்.
- ஆசிரியர் மாணவர் விகிதம் 1:25 என்ற அளவில் இருக்கும். ஒரு வகுப்பறை குறைந்தபட்சம் 30 மாணவர்களுடன், விசாலமானதாக இருக்கும். வகுப்பறை-மாணவர் விகிதம் 1:40ஐ விட அதிகமாக இருக்காது.
- 2005 தேசியப் பாடத் திட்டம் மற்றும் அதன் அடுத்தடுத்த பதிப்புகளைப் பின்பற்றும். அதே நேரத்தில், பாடத்திட்டம் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் சூழலை வெளிப்படுத்தும் வகையில் அமையும். மேலும் பயன்பாட்டு அடிப்படையில் கற்றல் இருக்கும்.
- பள்ளி பாடத்திட்டத்தில் தலைமைத்துவ குணங்கள், குழு மனப்பான்மை, பங்கேற்பு திறன்கள், மென் திறன்களின் வளர்ச்சி மற்றும் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை கையாளும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் விதத்தில் இருக்கும்.
- இந்தப் பள்ளிகளில் சுகாதாரக் கல்வி மற்றும் சுகாதாரப் பரிசோதனை அறிமுகப்படுத்தப்படும்.
- இந்தப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வசதிகள் இருக்கும், மேலும் சிறப்பு ஆசிரியர்கள் இருப்பர்.
- களப் பயணங்கள் மற்றும் கல்விச் சுற்றுலாக்கள் பாடத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்.
- மாணவர்களின் கல்வி, உணர்ச்சி மற்றும் நடத்தைத் தேவைகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆலோசகர் இருப்பர்.
- மாணவர்கள் மத்தியில் தேசியத்தின் மதிப்பைப் புகுத்தவும், ஒழுக்கமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் வகையில் தேசிய மாணவர் படை பயிற்சியை பள்ளிகள் வழங்கும்.
- மாணவர் சேர்க்கை தன்னாட்சி தேர்வுத் தேர்வு மூலம் நடைபெறும்.
- மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்படும் ஒரு தன்னாட்சி செயல்முறையின் மூலம் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதனையும் காண்க
[தொகு]- நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
- கேந்திரிய வித்யாலயா
- ஜவஹர் நவோதயா வித்தியாலயம்
- பெருநிறுவன சமூகப் பொறுப்பு