மாதா இராகமயீ
மாதா இராகமயீ డా. మట్టా రాగమయి | |
---|---|
தெலங்காணா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 திசம்பர் 2023 | |
முன்னையவர் | சந்திர வெங்கட வீரையா |
தொகுதி | சதுபள்ளி |
மாதா இராகமயீ (Matta Ragamayee)(பிறப்பு 1971) தெலங்காணா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசைப் பிரதிநிதித்தி சதுபள்ளி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தெலங்காணா சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2] இவர் பிஆர்எஸ் வேட்பாளர் சாண்ட்ரா வெங்கட வீரையாவை 19,440 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3][4]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இராகமயி 1997-ஆம் ஆண்டில் விஜயவாடாவில் உள்ள சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி தனது எம்பிபிஎஸ் முடித்தார். பின்னர் 2009-ஆம் ஆண்டில் கர்னூல் மருத்துவக் கல்லூரியில் காசநோய் மற்றும் மார்பு நோய்களில் பட்டயப்படிப்பினை முடித்தார்.[5] மட்டா தயானந்த் விஜய்யை மணந்து, நிலோத்பாலா, விராஜி மற்றும் விபாஞ்சி ஆகிய மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 2014 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.[1][6]
அரசியல்
[தொகு]2014-ஆம் ஆண்டில் அரசியலில் சேர்ந்த இவர், ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிடுவதற்காகத் தனது அரசு வேலையை ராஜினாமா செய்தார். தனது கணவருடன், மே 2016-இல் அப்போதைய டி. ஆர். எஸ். கட்சியில் சேர்ந்தார். மே 2023-இல், அவர் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் சத்துப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[5][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Matta Ragamayee Election Result 2023 LIVE: Sathupalle Result Tally Updates". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2023-12-03.
- ↑ Live, A. B. P. (2023-12-03). "Sathupalli Election Result 2023 Live: Inc Candidate Matta Ragamayee Wins From Sathupalli". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2023-12-03.
- ↑ "Election Commission of India". results.eci.gov.in. Retrieved 2023-12-03.
- ↑ "Of 221 women contestants, only 10 script poll success" (in en). https://www.thehansindia.com/telangana/of-221-women-contestants-only-10-script-poll-success-842486.
- ↑ 5.0 5.1 "Sathupalli MLA Sandra Venkata Veeraiah on target for fifth straight win, this time on BRS ticket". www.newstap.in (in ஆங்கிலம்). 2023-11-25. Retrieved 2023-12-03.
- ↑ "Dr Matta Ragamayee: ఎంబీబీఎస్ నుంచి ఎమ్మెల్యే పదవికి." Sakshi Education (in தெலுங்கு). Retrieved 2023-12-03.
- ↑ Today, Telangana (2023-05-26). "Sathupalli BRS leader Dr Dayanand joins Congress". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-12-03.