மாதவபெட்டி சத்யம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாதவபெட்டி சத்யம்
பிறப்புமே 11, 1922(1922-05-11)
பிறப்பிடம்பாபட்லா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும்
இறப்பு18 திசம்பர் 2000(2000-12-18) (அகவை 78)
இசை வடிவங்கள்பாடுதல்
தொழில்(கள்)பின்னணிப் பாடகர், நடிகர்
இசைத்துறையில்1946–2000

மாதவபெட்டி சத்யம் ( Madhavapeddi Satyam ) (11 மார்ச் 1922 - 18 டிசம்பர் 2000) ஒரு இந்திய பாடகரும் மேடை நடிகரும் ஆவார். முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றினார். 1946 ஆம் ஆண்டில் இயக்குநர் ஒய். வி. ராவின் தமிழ் - இந்தி இருமொழித் திரைப்படமான "ராமதாஸி"ல் கபீர் வேடத்தில் நடித்து பாடகர்-நடிகராக படங்களில் நுழைந்தார். இருப்பினும், இவர் தனது தனித்துவமான குரலால் பின்னணிப் பாடகராக மிகவும் பிரபலமானார். அவரது குரல் எஸ். வி. ரங்கராவ், இரேலங்கி, இரமண ரெட்டி போன்ற கலைஞர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அக்கினேனி நாகேஸ்வர ராவ், என். டி. ராமராவ், ஜக்கையா, பத்மநாபம் போன்றவர்களுக்காகவும் இவர் பாடியுள்ளார். ஐம்பதாண்டு கால தனது தொழில் வாழ்க்கையில் இவர் எஸ்.வி.ரங்கராவின் மாயா பஜார் திரைப்படத்திலிருந்து "விவாஹ போஜனமு" மற்றும் இரமண ரெட்டியின் குலகோத்ராலு திரைப்படத்திலிருந்து "அய்யய்யோ ஜோப்புலோ டப்புலு போயனே" போன்ற பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் உட்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 7,000 பாடல்களைப் பாடியுள்ளார்.

சுயசரிதை[தொகு]

மாதவபெட்டி சத்யம் 1922 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஆந்திராவின் பொன்னூரில் உள்ள பாபட்லாவில் பிறந்தார். இவரது பெற்றோர் மாதவபெட்டி இலட்சுமி நரசையா மற்றும் சுந்தரம்மா. சிறுவயதிலிருந்தே இவர் நாடகங்களில் பாடுவதற்கும் நடிப்பதற்கும் திறமையைக் காட்டினார். இவரது தந்தை வழி மாதவபெட்டி வெங்கட்ராமையா, நன்கு அறியப்பட்ட நாடகக் கலைஞராவார். இவர் நாடகத்தில் வெவ்வேறு வேடங்களில் சித்தரிக்கத் தொடங்கினார். அவற்றில் ஒன்று "சலோ டெல்லி" என்ற ஒரு சமூக நாடகம், அதில் இவரது பாடல், நடிப்பு மற்றும் இசைத் திறன் முதன்முறையாக சென்னையில் வெளிபட்டது. 1946 ஆம் ஆண்டில் இயக்குனர்-தயாரிப்பாளர் ஒய்.வி.ராவ் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சத்யம், அவரது திரைப்படமான ராமதாஸில் கபீராக நடிக்கவும், சி.ஆர்.சுப்பராமனின் இசை மேற்பார்வையில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் இந்த இருமொழி படத்தில் மூன்று பாடல்களைப் பாடவும் வாய்ப்பு கிடைத்தது.

1949ஆம் ஆண்டில் தெலுங்கு திரையுலகில் நுழைந்த உடனேயே லைலா மஜ்னு படத்திற்காக கண்டசாலாடன் சேர்ந்து "மனசு காதா குடா தோடை ..." தனது முதல் தெலுங்கு பாடலை பாடினார்.

இறப்பு[தொகு]

இவர் தனது 78 வயதில் 2000 டிசம்பர் 18 அன்று சென்னையில் இறந்தார்.

மாதவபெட்டி சத்யம் விருது[தொகு]

குச்சிபுடி நிபுணரான மாதவபெட்டி சத்யமின் மகன், மாதவபெட்டி மூர்த்தி, தனது பெற்றோரின் நினைவாக தெலுங்குத் திரைப்படத் துறையில் சிறப்பாக பணியாற்றும் கலைஞர்களுக்கு 'மாதவபெட்டி சத்யம்' விருதையும் 'மாதவபெட்டி பிரபாவதி' விருதையும் வங்கி வருகிறார்.[1].இந்த விருதைப் பெற்ற சில திரைப்பப்ட பிரபலங்கள் பின்வருமாறு:

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.hindu.com/fr/2007/03/23/stories/2007032300150200.htm[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவபெட்டி_சத்யம்&oldid=3351142" இருந்து மீள்விக்கப்பட்டது