மாதம்பாக்கம் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாதம்பாக்கம் ஏரி
Madambakkam Lake
சென்னையில் மாதம்பாக்கம் ஏரியின் அமைவிடம்
சென்னையில் மாதம்பாக்கம் ஏரியின் அமைவிடம்
மாதம்பாக்கம் ஏரி
Madambakkam Lake
அமைவிடம்மாதம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்12°54′36″N 80°09′54″E / 12.910°N 80.165°E / 12.910; 80.165ஆள்கூறுகள்: 12°54′36″N 80°09′54″E / 12.910°N 80.165°E / 12.910; 80.165
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
Settlementsசென்னை

மாதம்பாக்கம் ஏரி (Madambakkam Lake) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையை அடுத்துள்ள கிழக்கு தாம்பரம் பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1] மழைநீர் ஏரியான இது மழைக்காலத்தில் மட்டும் நிரம்புகிறது. தன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களின் தண்ணீர் தேவையைப் மாதம்பாக்கம் ஏரி பூர்த்தி செய்கிறது. பல ஆண்டுகளாகப் பாராமரிப்பு இல்லாமல் குப்பைகள் கொட்டும் இடமாக இருந்த ஏரியை உள்ளுர் தன்னார்வலர்கள் குறிப்பிட்ட கால இடைவேளைக்கு ஒருமுறை சுத்தம்செய்து ஏரியைப் பராமரித்து வருகிறார்கள்.[2]

இந்தியச் சுற்றுச்சூழல் அறக்கட்டளை அமைப்பின் முயற்சிகள்[தொகு]

சுத்தம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை அமைப்பினர் எடுத்துக் கொண்ட நீர்நிலைகளில் ஒன்று மாதம்பாக்கம் ஏரியாகும்.[3] 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த அமைப்பு வார இறுதி நாட்களில் தன்னார்வலர்கள் ஆதரவுடன் ஏரியை சுத்தம் செய்ய முன்வந்தது.[4] நீண்ட 4 ஆண்டுகால தன்னார்வச் செயல்பாடு சாலைத் தடையைத் எதிர்த்து பின்னர் 2020 ஆம் ஆண்டு முழு அளவிலான மறுசீரமைப்பு முயற்சிகளை மீண்டும் தொடங்கியது. முழுமையாக ஆழப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல், நுழைவாயில் மற்றும் வெளியேறுமிடம் போன்றவற்றை முறைப்படுத்துதல், சுத்தம் செய்தல் ஆகியவை மறுசீரமைப்பு முயற்சிகளில் அடங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lakshmi, K. (8 May 2018). "Metrowater to rejuvenate two large waterbodies". The Hindu (Chennai: The Hindu). https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/metrowater-to-rejuvenate-two-large-waterbodies/article23807577.ece. பார்த்த நாள்: 25 August 2018. 
  2. சௌ, விஷ்ணுராஜ். "மாடம்பாக்கம் ஏரியிலிருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டம்..! கொந்தளிக்கும் மக்கள்". www.vikatan.com/. 2021-11-20 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாடம்பாக்கம் ஏரி கால்வாய் சீரமைக்கப்படுமா?". Dinamalar. 2021-04-20. 2021-11-20 அன்று பார்க்கப்பட்டது.
  4. T.S. Atul Swaminathan; Vaishali R. Venkat (31 August 2013). "An initiative to save Madambakkam Lake". The Hindu (Chennai: Kasturi & Sons). https://www.thehindu.com/features/downtown/an-initiative-to-save-madambakkam-lake/article5078614.ece. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதம்பாக்கம்_ஏரி&oldid=3480115" இருந்து மீள்விக்கப்பட்டது