உள்ளடக்கத்துக்குச் செல்

மாதபங்கா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதபங்கா ஆறுநதி (வங்காளம்: মাথাভাঙ্গা নদী, romanized: Māthābhāṅgā Nadī) என்பது இந்தியா, வங்காளதேசம் நாடுகளுக்கு இடையே பாயும் ஒரு எல்லை தாண்டிய ஆறாகும்.[1][2]

வரலாறு

[தொகு]
மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள சிகர்பூர் அருகில் மாதபங்கா ஆறு

மாதபங்கா அல்லது ஹவுலியின் அணுகக் கூடிய கீழ் பகுதி ஹௌலியா என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து பத்மா ஆறு பிரிந்து செல்கிறது. இதிலிருந்து 10 மைல்களுக்கு கீழே ஜலங்கி ஆறு பிரிகின்றது[3]
மாதபங்கா முதலில் தென்கிழக்கு திசையில் ஹத்போலியா கிராமம் வரை ஓடுகிறது. இங்கு இது இரண்டாகப் பிரிகிறது. இதன் ஒரு கிளை குமார் அல்லது பங்காசி என அழைக்கப்படுகிறது. இதன் பின்னர் இதே திசையிலும், ஆல்தங்காவைக் கடந்தும், மாவட்டத்தின் எல்லை வரை தொடர்கிறது. இதன் எல்லை சில மைல்களுக்கு ஜெசூர் வரை நீண்டுள்ளது. மறுபுறம், மற்றொரு கிளையாறு மிகவும் வளைந்து நெளிந்து செல்லும் பாதையைக் கொண்டுள்ளது. இதன் பொதுவான போக்கு தெற்கு நோக்கியே உள்ளது. அது சௌதங்காவைக் கடந்து கிருஷ்ணகஞ்ச் (இந்தியாவில்) பகுதியை அடைகிறது. இங்கு இரண்டாவது முறையாகப் பிரிந்து இரு நீரோடைகளாக சுருணி ஆறு மற்றும் இச்சாமதி ஆறு என மாறுகின்றன. மேலும் மூல நதியின் பெயரும் மறைந்து போகிறது.[4] இது சிகர்பூர், கரீம்பூர் அருகில் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே எல்லையாக அமைகிறது.[5][6][7] மாதபங்கா ஆறானது தென்மேற்கு வங்காளதேசத்தில் ஒரு முக்கியமான ஆறாகும். மேலும் இது மழைநீரிலிருந்து நன்னீரை ஜலங்கி வழியாக சுந்தரவனக் காடுகளுக்குக் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நதியின் நிறம் பச்சையாகவும் தெளிவாகவும் இருக்கும்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Trans-boundary Rivers". Banglapedia (in ஆங்கிலம்). Retrieved 2017-07-13.
  2. ↑ The NEHU Journal. "Impact of In-Bed and On-Bank Soil Cutting by Brick Fields on Moribund Deltaic Rivers" (PDF). ISSN 0972-8406. Retrieved 1 December 2023.
  3. ↑ Sadi, Anup (2018-06-25). "মাথাভাঙ্গা নদী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একটি আন্তঃসীমান্ত নদী". রোদ্দুরে (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-12-01.
  4. ↑ Network, N. F. N. (2018-07-05). "Water Test To Draw Centre's Attention On Mathabhanga, Churni Pollution" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-12-01.
  5. ↑ "Century-old Nadia school with major contribution in Bangladesh Freedom Movement". Get Bengal (in ஆங்கிலம்). Retrieved 2023-12-01.
  6. ↑ "Another infiltration bid by Bangladesh foiled". The Times of India. 2003-02-16. https://timesofindia.indiatimes.com/india/another-infiltration-bid-by-bangladesh-foiled/articleshow/37648651.cms.
  7. ↑ Network, N. F. N. (2017-08-22). "নদিয়ার ভারতভুক্তি ১৭ আগস্ট ১৯৪৭" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-12-01.
  8. ↑ "Matters Under Rule". Retrieved 31 August 2013.

24°04′00″N 88°48′00″E / 24.0667°N 88.8000°E / 24.0667; 88.8000

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதபங்கா_ஆறு&oldid=4660818" இலிருந்து மீள்விக்கப்பட்டது