மாண்புமிகு
'மாண்புமிகு' ( The Honourable, (சுருக்கமாக: Hon., Hon'ble) என்பது ஒரு கௌரவமிக்க அடைமொழி ஆகும். இது பொதுவாக அரசு அல்லது தூதரகப் பதவிகளை வகிக்கும் சிலரின் பெயர்கள் அல்லது பதவிகளுக்கு முன் முன்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.
அரசாங்கங்களின் பயன்பாடு
[தொகு]சர்வதேச இராசதந்திரம்
[தொகு]பன்னாட்டு இராசதந்திர உறவுகளில், வெளி நாடுகளின் பிரதிநிதிகள் பெரும்பாலும் "மாண்புமிகு" என்ற முன்னொட்டுடன் அழைக்கப்படுகின்றனர். தூதரகத்தின் துணைத் தூதர்கள், பொறுப்பாளர்கள், தூதர்கள்-ஜெனரல்கள், கௌரவத் தூதர்களுக்கு எப்போதும் இந்த முன்னொட்டு வழங்கப்படுகிறது. அனைத்து தூதரகத் தலைமைப் பதவிகளில் உள்ளவர்களும், அவர்கள் கௌரவப் பதவிகளில் இருந்தாலும் சரி அல்லது தொழில்முறை பதவிகளில் இருந்தாலும் சரி, அமெரிக்க வெளியுறவுத் துறையின்படி இந்த கௌரவ முன்னொட்டைப் பெறுகிறனர். [1] இருப்பினும், மாண்புமிகு (தி ஹானரபிள்) என்பதற்குப் பதிலாக எக்ஸலன்சி என்ற கௌரவ முன்னொட்டு தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில்
[தொகு]இந்தியாவில், இந்திய உயர் நீதிமன்ற மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு ( Hon'ble ) என்ற முன்னொட்டுடன் அழைக்கப்படுகிறனர்; [2] பெரும்பாலும் Honourable என்பதை "HMJ" என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றனர், அதாவது, மாண்புமிகு திரு/திருமதி. நீதி, அதைத் தொடர்ந்து அவர்களின் பெயர் என்று அழைக்கபடுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத் தலைவர்கள் ( பிரதமர், குடியரசுத் தலைவர், இந்திய துணைக் குடியரசுத் தலைவர், ஒன்றிய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், ஆளுநர்கள் ) ஆகியோரின் பெயருக்கு முன்னாள் மாண்புமிகு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறனர்.
மலேசியா, சிங்கப்பூர்
[தொகு]மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழில் மாண்புமிகு என்பதற்கு பதிலாக மாட்சிமை தாங்கிய என்ற அடைமொழி வழங்கப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ This is referenced in the Los Angeles Country Protocol Register: "Following the practice of the U.S. Department of State Office of Protocol, all heads of post are accorded the courtesy style of 'The Honorable' before their names." ceo.lacounty.gov பரணிடப்பட்டது 16 சூன் 2015 at the வந்தவழி இயந்திரம் Los Angeles has the highest density of consulates and consulates-general of any city in the world. Furthermore, for example, phoenix.gov பரணிடப்பட்டது 22 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம் or oakgov.com பரணிடப்பட்டது 22 ஆகத்து 2010 at the வந்தவழி இயந்திரம் An authoritative source can be found at bmeia.gv.at பரணிடப்பட்டது 16 பெப்ரவரி 2022 at the வந்தவழி இயந்திரம் where the Austrian Ministry of Foreign Affairs lists all honorary consuls with the style of The Hon.
- ↑ "Is it a Judge who is Hon'ble or a Court?". TheLeaflet (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-12. Archived from the original on 30 July 2021. Retrieved 2021-06-28.
- ↑ "'மாட்சிமை' என்கிற சொல் எப்படி வந்தது?". Hindu Tamil Thisai. 2025-03-06. Retrieved 2025-03-07.