உள்ளடக்கத்துக்குச் செல்

மாணிக்கவாசகம் சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணிக்கவாசகம் சுந்தரம்
Yang Berhormat
Manikavasagam Sundram
படிமம்:Manikavasagam Sundaram.jpg
சிலாங்கூர் காப்பார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2008–2013
முன்னையவர்கோமளா தேவி பெருமாள்
Komala Devi Perumal (ம.இ.கா - பாரிசான்)
பின்னவர்மணிவண்ணன் கோவிந்தசாமி
(பி.கே.ஆர்பாக்காத்தான்)
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிமலேசிய மக்கள் கட்சி (PRM) (1999-2000)
பி.கே.ஆர் (PKR) (2000-2018)
வேலைஅரசியல்வாதி

மாணிக்கவாசகம் சுந்தரம் அல்லது சு. மாணிக்கவாசகம் (ஆங்கிலம்: Manikavasagam s/o Sundram அல்லது S. Manikavasagam; மலாய்: Manikavasagam Sundram; சீனம்: 马尼卡瓦萨甘圣日) (பிறப்பு: 27 சூன் 1965) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; ஒரு சமூகச் செயற்பாட்டாளர்; 2008 முதல் 2013 வரை மலேசியா சிலாங்கூர் மாநிலத்தின் காப்பார் மக்களவை தொகுதியின் (Kapar Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1])

2008-ஆம் ஆண்டு, பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) எதிர்க் கூட்டணியின் மக்கள் நீதிக் கட்சியில் (People's Justice Party) (பிகேஆர்) உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்பு இந்தத் தொகுதி பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணியின் கீழ் இருந்தது.[2]

மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப் படுவதற்கு முன்பு, இவர் இந்து உரிமைகள் போராட்டக் குழு (Hindu Rights Action Force) அல்லது இண்ட்ராப் (HINDRAF) அமைப்பின் முக்கியத் தலைவராக இருந்தார்.[3][4]

பொது[தொகு]

தலைமைப் பதவி துறப்பு[தொகு]

2008 டிசம்பர் மாதம், பி.கே.ஆர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். சிலாங்கூர் மாநிலத்தின் பி.கே.ஆர் கட்சியின் தலைமையின் மீதான ஏமாற்றத்தைக் காரணம் காட்டினார். எனினும் இறுதியில் பி.கே.ஆர் கட்சியில் அவர் வகித்த தலைமைப் பதவியை மட்டும் துறப்பு செய்தார். ஆனால் கட்சியில் இருந்து விலகவில்லை.[5][6]

நீதிமன்ற கைது ஆணை[தொகு]

ஜூன் 2009 இல், மலேசிய தமிழ்த் திரைப்பட நடிகையின் மரணம் தொடர்பான விசாரணையில்; சாட்சியம் அளிப்பதற்கான நீதிமன்ற ஆணைக்கு பதிலளிக்க மாணிக்கவாசகம் சுந்தரம் மறுத்தார். அதனால் அவருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.[7][8]

இருப்பினும் அவர் இறுதியில் விசாரணையில் சாட்சியம் அளித்தார். அதன் பின்னர் இரண்டு வாரங்களில், அவர் ஒரு பொது ஆர்ப்பாட்டத்தின் போது, வேறு ஒரு காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.[9][10]

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் தோல்வி[தொகு]

2013 மலேசியப் பொதுத் தேர்தலில் அவர் காப்பார் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு பி.கே.ஆர் கட்சியின் தலைமைத்துவம் அனுமதிக்கவில்லை.

மாறாக அவர் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் புக்கிட் மெலாவத்தி மாநிலத் தொகுதியில் (Bukit Melawati State Constituency) போட்டியிட்டார். இருப்பினும் அம்னோ (UMNO) வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

பிகேஆர் கட்சியில் இருந்து இடைநீக்கம்[தொகு]

2014-இல் சிலாங்கூர் மாநில முதல்வர் காலிட் இப்ராகிமுக்கு (Selangor Chief Minister Khalid Ibrahim) எதிராக "பண அரசியல்" குற்றச்சாட்டுகளை மாணிக்கவாசகம் சுந்தரம் முன்வைத்தார். அதற்காக அவர் பிகேஆர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரின் இடைநீக்கம் நீக்கப்பட்டது. அதன் பிறகு, பிகேஆர் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடுமாறு சிலாங்கூர் முதலமைச்சர் காலிட் இப்ராகிமுக்கு சவால் விடுத்தார்.[11][12]

சிலாங்கூர் முதலமைச்சருக்கு சவால்[தொகு]

இருப்பினும் மாணிக்கவாசகம் சுந்தரம் சிலாங்கூர் மாநிலத்தின் பிகேஆர் தலைமை பதவிக்கு (Selangor Division PKR Chief Post) போட்டியிட்டு வென்றார். இந்த நிகழ்வுகளின் பின்னணியில், 2014-ஆம் ஆண்டில் காலிட் இப்ராகிம் தன் முதலமைச்சர் பதவியையும் இழக்க வேண்டி வந்தது.[13]

7 ஏப்ரல் 2018-இல், அவர் மலேசிய மக்கள் கட்சியில் (Malaysian People's Party) மீண்டும் இணைவதாக அறிவித்தார். 2018 மலேசிய பொதுத் தேர்தலில்; காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கும் (Kapar Parliamentary Seat); சிலாங்கூர் மாநில மேரு தொகுதிக்கும் (Meru State Seat); மலேசிய மக்கள் கட்சியின் கீழ் போட்டியிட்டார். ஆனால் இரண்டிலும் தோல்வி அடைந்தார்.[14][15]

மேற்கோள்கள்[தொகு]

 1. "YB Manikavasagam". S. Manikavasagam: official blog. Archived from the original on 13 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 January 2010.
 2. "Malaysia Decides 2008". The Star (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 17 January 2010.
 3. "Malaysian police break up ethnic Indian rally". NBC News. 16 February 2008. http://www.nbcnews.com/id/23194448. 
 4. Zappei, Julia (16 February 2008). "Malaysian Police Break Up Indian Rally". Fox News. http://www.foxnews.com/wires/2008Feb16/0,4670,MalaysiaIndianUnrest,00.html. 
 5. "Manikavasagam holds off on quit decision (updated)". The Star (Malaysia). 31 December 2008. http://thestar.com.my/news/story.asp?file=/2008/12/31/nation/20081231155855. 
 6. Goh, Lisa (1 January 2009). "Kapar MP quits party post". The Star (Malaysia). http://thestar.com.my/news/story.asp?file=/2009/1/1/nation/2926022&sec=nation. 
 7. "Arrest warrant issued against Kapar MP Manikavasagam". The Sun (Malaysia). 23 June 2009. http://www.thesundaily.com/article.cfm?id=34956. 
 8. Goh, Lisa (24 June 2009). "Manikavasagam applies to set aside arrest order (Update)". The Star (Malaysia). http://thestar.com.my/news/story.asp?file=/2009/6/24/nation/20090624114439&sec=nation. 
 9. Hamdan, Nurbaiti (9 July 2009). "Kapar MP: Vell Paari behaved as if he lost his wife at Sujata's funeral". The Star (Malaysia). http://thestar.com.my/news/story.asp?file=/2009/7/9/nation/20090709195120&sec=nation. 
 10. Rajendra, Edward (17 July 2009). "Seven arrested outside MACC office, all later released (Update)". The Star (Malaysia). http://thestar.com.my/news/story.asp?file=/2009/7/17/nation/20090717111031&sec=nation. 
 11. "Khalid defeated in PKR division polls". The Rakyat Post. 26 June 2014. http://www.therakyatpost.com/news/2014/06/26/khalid-defeated-pkr-division-polls/. 
 12. Syed Jaymal Zahiid (15 April 2013). "PKR names three new faces for Selangor contest". The Malaysian Insider. http://www.themalaysianinsider.com/malaysia/article/pkr-names-three-new-faces-for-selangor-contest. 
 13. Jamilah Kamarudin (16 May 2014). "Suspended PKR member begs party to allow him to take on Khalid in polls". The Malaysian Insider. http://www.themalaysianinsider.com/malaysia/article/suspended-pkr-member-begs-party-to-allow-him-to-take-on-khalid-in-polls. 
 14. "PRM announces candidates for 15 parliamentary, state seats in Selangor". Bernama (The Malay Mail). 7 April 2018. http://www.themalaymailonline.com/malaysia/article/prm-announces-candidates-for-15-parliamentary-state-seats-in-selangor. 
 15. "Keluar PKR, bekas MP Kapar kembali ke PRM". The Star (Malaysia) (mStar). 8 April 2018. http://www.mstar.com.my/berita/berita-semasa/2018/04/08/manikavasagam-kembali-ke-prm/. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்கவாசகம்_சுந்தரம்&oldid=3947456" இலிருந்து மீள்விக்கப்பட்டது