மாணிக்கம் லெட்சுமணன்
மாணிக்கம் லெட்சுமணன் Krishnan Letchumanan | |
|---|---|
(மனித வளங்கள், தோட்டங்கள் மற்றும் புதிய கிராமங்கள்) | |
| பதவியில் 22 மே 2013 – 12 மே 2018 | |
| ஆட்சியாளர் | துவாங்கு முகிரிஸ் |
| முன்னையவர் | |
| பின்னவர் | |
ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி | |
| பதவியில் 5 மே 2013 – 12 ஆகத்து 2023 | |
| முன்னையவர் | |
| பின்னவர் | |
| பெரும்பான்மை | 2,691 (2013); 1,062 (2018) |
| 2013–2023 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Manickam a/l Letchumanan 30 நவம்பர் 1959 நெகிரி செம்பிலான் |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | சுயேச்சை (2023–2024) |
| பிற அரசியல் தொடர்புகள் | |
| துணைவர் | டத்தின் விமலா வையாபுரி |
| கல்வி | புளுவெளி தோட்டத் தமிழ்ப்பள்ளி கேமரன் மலை (1966-1971) சுல்தான் அகமது சா உயர்நிலைப்பள்ளி தானா ராத்தா (1972-1973) சமூக அறிவியல் முதுகலை (எம்.ஏ.) மலாயா பல்கலைக்கழகம் |
டத்தோ மாணிக்கம் லெட்சுமணன் (ஆங்கிலம்; மலாய்: Manickam Letchuman) என்பவர் மலேசிய அரசியல்வாதி; நெகிரி செம்பிலான் மாநில பாரிசான் நேசனல் (BN) நிர்வாகத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மாநில அமைச்சர் (EXCO); ஜெராம் பாடாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
2013 மே மாதம் முதல் 2018 மே மாதம், பாரிசான் நேசனல் மாநில நிர்வாகம் சரியும் வரையில் இவர் நெகிரி செம்பிலான் மாநில அமைச்சர் பதவியை வகித்தார். அதே காலக் கட்டத்தில் மே 2013 முதல் ஆகத்து 2023 வரை இரு தவணைகளுக்கு ஜெராம் பாடாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும்[1] சேவை செய்துள்ளார்.
பின்னணி
[தொகு]அவர் நவம்பர் 30, 1959 அன்று பிறந்தார். அவர் தமது தொடக்கக் கல்வியை கேமரன் மலை புளுவெளி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் (SJK(T) Ladang Blue Valley ) (1966-1971) பெற்றார். பின்னர் தானா ராத்தா சுல்தான் அகமது சா உயர்நிலைப்பள்ளியில் (SMK Sultan Ahmad Shah, Tanah Rata) தமது இடைநிலைக் கல்வியை (1972-1973) பெற்றார். அதன் பின்னர் அவர் தமது உயர்க் கல்வியை மலாயா பலகலைக்கழகத்தில் பெற்றார்.
அதே பல்கலைக்கழகத்தில் (UM) மலாய் மொழிக் கல்வியில் உயர்ச் சான்றிதழ் (1986-1987) பெற்று, பின்னர் மலாய் மொழி மற்றும் தமிழ் மொழி ஆகிய இரு மொழிகளில் இளங்கலை (1982-1985) பட்டப் படிப்பை முடித்த பிறகு, மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் முதுகலைப் பட்டம் (2004-2005) பெற்றார்.
ஏப்ரல் 1987 முதல் மே 2013 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். பகாவ் டத்தோ மன்சோர் உயர்நிலப்பள்ளியில் (SMK Datuk Mansor) தமது ஆசிரியர் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் செலுபு சிம்பாங் பெர்த்தாங் பாசோ 2 உயர்நிலப்பள்ளியில் (SMK Pasoh 2) ஆகத்து 2006 முதல் மே 2013 வரை பணியாற்றினார். அதன் பின்னர் 2013-ஆம் ஆண்டு ஜெராம் பாடாங் தொகுதியின் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அரசியல்
[தொகு]அவர் பாரிசான் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மஇகாவின் செம்போல் பிரிவுத் தலைவராகவும் (2015-2018); நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மஇகா தலைவராகவும் பதவி வகித்தார். 2023 அக்டோபர் 6 அன்று, அவர் மஇகாவை விட்டு வெளியேறினார்.[2]
தற்போது இவர் மலேசிய இசுலாமிய கட்சியின் (PAS) ஆதரவாளர் துணைக்கட்சியில் (DHPP) (Supporter Congress) உறுப்பினராக உள்ளார்.[3] இந்தக் கட்சி பெரிக்காத்தான் நேசனல் (PN) கூட்டணியின் ஓர் அங்கமாகும். அத்துடன் 2023–2024 காலக்கட்டத்தில் சுயேச்சையாகவும் செயல்பட்டார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2013 | N07 ஜெராம் பாடாங் | மாணிக்கம் லெட்சுமணன் (மஇகா) |
5,690 | 63.68% | குமார் துரைசிங்கம் (பிகேஆர்) | 2,999 | 33.57% | 9,185 | 2,691 | 81.20% | ||
| சைலானி சக்காரியா (சுயேச்சை) | 201 | 2.25% | ||||||||||
| மாதவன் ராமன் நாயர் (சுயேச்சை) | 45 | 0.50% | ||||||||||
| 2018 | மாணிக்கம் லெட்சுமணன் (மஇகா) |
3,702 | 39.26% | சுரேஷ் சீனிவாசன் (சுயேச்சை) | 2,640 | 28.00% | 9,844 | 1,062 | 79.80% | |||
| முசிலாடி சப்து (பிகேஆர்) | 2,302 | 24.41% | ||||||||||
| பைருஸ் முகம்ட் இசா (பாஸ்) | 785 | 8.33% | ||||||||||
விருதுகள்
[தொகு]
நெகிரி செம்பிலான்
- நெகிரி செம்பிலான் விசுவாச விருது (DPNS) – டத்தோ (2015)[5]
- சிறந்த பொதுச் சேவை பதக்கம் (PMC) (2011)
- சிறப்பு சேவைப் பதக்கம் (PJK) (2006)
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Yang Berbahagia Dato' Manickam a/l Letchuman". Facebook. Retrieved 18 February 2026.
- ↑ "Datuk L Manickam keluar MIC". www.bharian.com.my. 6 October 2023.
- ↑ "Former Negri Sembilan MIC chairman joins PAS Supporters' Congress". www.thestar.com.my. 1 August 2024.
- ↑ "The Star Online GE14". The Star (Malaysia). https://election.thestar.com.my/. பார்த்த நாள்: 24 May 2018. Percentage figures based on total turnout.
- ↑ "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat".