உள்ளடக்கத்துக்குச் செல்

மாணவர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாணவர் சங்கம் (students' union)[note 1] என்பது பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்,உயர்நிலைப் பள்ளிகளில் இருக்கும் ஒரு மாணவர் அமைப்பாகும் . உயர்கல்வியில், மாணவர் சங்கத்திற்கு பெரும்பாலும் வளாகத்தில் சொந்தக் கட்டிடம் வழங்கப்படுகிறது. இது சமூக, நிறுவன நடவடிக்கைகள், பிரதிநிதித்துவம் மற்றும் உறுப்பினர்களின் கல்வி ஆதரவு ஆகிய பணிகளை மேற்கொள்கிறது. சில சமயங்களில் இது ஒரு மன்றமாகவும் இருக்கலாம்.

நோக்கம்

[தொகு]

நாடுகளைப் பொறுத்து, சங்கங்களின் நோக்கம், கூடும் முறை, செயல்படும் விதம் ஆகியன மாறுபடலாம். பான்னாட்டளவில், மாணவர் சங்கம் அல்லது மாணவர் அரசாங்கத்தின் நோக்கம் சக மாணவர்களை ஏதோ ஒரு வகையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.

ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு மாணவர் சங்கக் கட்டிடம், இது மாணவர் செயல்பாட்டு மையமாகவும் பயன்படுகிறது.

நாடுகள் வாரியாக

[தொகு]

ஆசியா மற்றும் ஓசியானியா

[தொகு]

ஆஸ்திரேலியாவில், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர் அமைப்புகள் உள்ளன.

ஆஸ்திரேலிய மாணவர் சங்கங்கள் பொதுவாக உணவகங்கள், சிறிய சில்லறை விற்பனை நிலையங்கள் (எ.கா. செய்தி நிறுவனங்கள்), மாணவர் ஊடகங்கள் (எ.கா. வளாக செய்தித்தாள்கள்), பல்வேறு சமூக, கலை, அரசியல், பொழுதுபோக்கு, சிறப்பு ஆர்வம் மற்றும் விளையாட்டு மன்றங்கள், சங்கங்களுக்கான ஆதரவு போன்ற சேவைகளை வழங்குகின்றன. பெரும்பாலானவை பெண், LGBT, சர்வதேச, பழங்குடி மாணவர்களுக்கு சிறப்பு ஆதரவுச் சேவைகளையும் வழங்குகின்றன. 2006 ஆம் ஆண்டில் தன்னார்வ மாணவர் சங்கம் (VSU) அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

2011 ஆம் ஆண்டில், விளையாட்டு வசதிகள், குழந்தை பராமரிப்பு மற்றும் ஆலோசனை, மாணவர் ஊடகம் மற்றும் "மாணவர்களின் நலன்களைப் பேணுதல்" ஆகிய வசதிகளுக்கு நிதியளிக்க பல்கலைக்கழகங்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களிடமிருந்து கட்டாய சேவைக் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கும் சட்டத்தை அரசாங்கம் இயற்றியது. [2]

இந்தியா

[தொகு]

அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) ஆகஸ்ட் 12, 1936 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான மாணவர் அமைப்பாகும். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பதவிகளைக் கட்டுப்படுத்த தேர்தல்களில் போட்டியிடும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு, இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய தேசிய மாணவர் சங்கம், சவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம், தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கம், உதய் பிரதாப் கல்லூரி மாணவர் சங்கம் சுவேரோ மாணவர் சங்கம் ஆகியவை சில குறிப்பிடத்தகுந்த சங்களாகும். சமீபத்தில், சில பள்ளி நிர்வாகங்கள் மாணவர் அரசாங்க முறையை ஏதாவது ஒரு வடிவத்தில் இணைப் பாடத்திட்ட நடவடிக்கைகளாகச் சேர்க்கத் தொடங்கியுள்ளன. தேசியக் கட்டிடக்கலை மாணவர் சங்கம் என்ற தனித்துவமான, அரசியல் சார்பற்ற சுயாதீன கட்டிடக்கலை மாணவர் அமைப்பும் உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. also known by many other names including students' council, student government, free student union, student senate, students' association, guild of students, or government of student body

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Debate rages over voluntary student unionism". ABC. 27 Apr 2005. http://www.abc.net.au/news/2005-04-27/debate-rages-over-voluntary-student-unionism/1558892. 
  2. "Student Services and Amenities Fee". Department of Education and Training. Australian Government. Retrieved 1 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணவர்_சங்கம்&oldid=4257172" இலிருந்து மீள்விக்கப்பட்டது