உள்ளடக்கத்துக்குச் செல்

மாட்டு ஈ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Tabanidae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
மாட்டு ஈ
புதைப்படிவ காலம்:Berriasian–Recent
Tabanus sulcifrons[2]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Tabanidae
Subfamilies
குதிரை-ஈக்கள் ஒரு குதிரையின் தலையில் அமர்ந்து குருதி குடிக்கின்றன

மாட்டு ஈ அல்லது குதிரை ஈ (மற்ற பெயர்கள், பார்க்க § Common names ) என்பது பூச்சி வரிசையில் தபனிடே குடும்பத்தைச் சேர்ந்த இருசிறகி பூச்சி ஆகும். இவை பெரும்பாலும் பெரியதாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இவற்றில் பெண் ஈக்கள் மனிதர்களையும், விலங்குகளையும் கடித்து குருதியை உருஞ்சக்கூடியன. இந்த ஈக்கள் சூரிய ஒளியில் பறக்க விரும்புகிறன, இருண்ட, நிழலான பகுதிகளைத் தவிர்க்கின்றன. இவை இரவில் பறப்பதில்லை. இவை சில தீவுகள் மற்றும் துருவப் பகுதிகள் (ஹவாய், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து) தவிர உலகம் முழுவதும் காணப்படுகின்றன. குதிரை-ஈக்கள் மற்றும் போட்ஃபிளைஸ் (ஓஸ்ட்ரிடே) இரண்டும் சில நேரங்களில் கேட்ஃபிளைஸ் என்று குறிப்பிடப்படுகின்றன. [3]

வளர்ந்த மாட்டு-ஈக்கள் தேன் மற்றும் தாவரச் சாற்றை உணவாக கொள்கின்றன; ஆண் பூச்சிகளிக்கு பலவீனமான உறிஞ்சு குழாய்கள் உள்ளன. இவற்றில் பெண் ஈக்கள் மட்டுமே முட்டைகளை உற்பத்தி செய்ய தேவைப்படும் புரதத்தைப் பெற இரத்தத்திற்காக மாடு, குதிரை போன்ற விலங்குகளைக் கடிக்கின்றன. பெண் ஈக்களானது உறிஞ்சு குழாயும் அதன் முனையில் ஊசி போன்ற கூரிய உறுப்பும் கொண்டுள்ளன. அதன் மூலம் மாட்டின் தோலைக் குத்தி இரத்தத்தை உறிஞ்சி உண்ணும். இவற்றின் குடம்பிகள் ஈரமான வாழ்விடங்களில் வளர்கின்றன.

பெரிய கூட்டுக் கண்கள், குறுகிய உணர்கொம்புகள் (கண்களுக்கு இடையில், கீழே) மற்றும் தடித்த துளையிடும் உறுஞ்சுகுழாய்களைக் கொண்டுள்ள தபனஸ் அட்ரட்டஸின் தலை

பெண் மாட்டு-ஈக்கள் அவற்றின் உணவுப் பழக்கத்தினால் இரத்தத்தில் பரவும் நோய்களை ஒரு விலங்கிலிருந்து மற்ற விலங்குகளுக்கு பரப்புகின்றன. நோய்கள் ஏற்படும் பகுதிகளில், இவை குதிரை தொற்று இரத்த சோகை வைரஸ், சில டிரிபனோசோம்கள், ஃபைலேரியல் புழு லோவா லோவா, கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகளிடையே ஆந்த்ராக்ஸ், துலரேமியா ஆகிய நோய்களை கொண்டு சென்று பரப்புவதாக அறியப்படுகிறது. இவை கால்நடைகளின் வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கலாம் மேலும் பொருத்தமான தங்குமிடங்கள் வாய்த்தால் மாடுகளின் பால் உற்பத்தியைக் குறைக்கக்கூடும்.


குறிப்புகள்

[தொகு]
  1. International Commission on Zoological Nomenclature (1961). The Bulletin of Zoological Nomenclature. International Trust for Zoological Nomenclature. p. 55.
  2. Cirrus Digital Horse Fly Tabanus sulcifrons
  3. "gadfly". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்டு_ஈ&oldid=3051247" இலிருந்து மீள்விக்கப்பட்டது