மாடிவீட்டு மாப்பிள்ளை
| மாடி வீட்டு மாப்பிள்ளை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | எஸ். கே. ஏ. சாரி |
| தயாரிப்பு | ஏ. வி. சுபராவ் பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் |
| இசை | டி. சலபதி ராவ் |
| நடிப்பு | ரவிச்சந்திரன் ஜெயலலிதா |
| வெளியீடு | சூன் 23, 1967 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4717 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாடி வீட்டு மாப்பிள்ளை (Maadi Veettu Mappilai) என்பது எஸ். கே. ஏ. சாரி இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1][2] இது இல்லரிக்கம் (1959) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[3] இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் நாகேஷ், ரமா பிரபா, வி. கே. ராமசாமி, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், டி. எஸ். முத்தையா, உதய சந்திரிகா, பி. கே. சரஸ்வதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் 1967 சூன் 23 அன்று வெளியானது.
கதை
[தொகு]சோமு தனது தாய் மாமன் தர்மலிங்கத்தின் உதவியுடன் படித்துவருகிறார். அவர் பணக்காரராண சிவஞானத்தின் மகளான மீனாவை காதலிக்கிறார். இந்தக் காதல் மீனாவின் தாய்க்குப் பிடிக்கவில்லை என்றாலும் சிவஞானத்தின் சம்மதத்துடன் சோமுவும், மீனாவும் திருமணம் செய்துகொள்கின்றனர். சோமு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். மாப்பிளையை பிடிக்காத சிவஞானத்தின் மனைவி, மருமகனை அவமதிக்கிறார். இதற்கிடையில் அவரின் உறவினரின் மகனான பாலு சிவஞானத்தின் சொத்துக்களை அபகரிக்க திடமிடுகிறான். பாலு ஏற்கனவே சீதாவை ரகசியமாக மணந்துள்ளான். மேடையில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் போது, சோமு தான் இறந்துவிட்டதாகக் கருதிய தன் தங்கை சீதாவைக் காண்கிறார். அவர்கள் உடன்பிறந்தவர்கள் என்று தெரியாமல், மீனா சோமுவை சந்தேகிக்கிறாள். பாலுவும் அவரது தந்தையும் சோமுவுக்கும் மீனாவுக்கும் இடையில் சிக்கல்களை உருவாக்குகின்றனர். இதனால் சோமுவும், மீனாவும் பிரிகின்றனர். சோமு எவ்வாறு அனைத்து சிக்கல்களையும் தீர்த்து குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்கிறார் என்பதே கதையாகும்.
நடிகர்கள்
[தொகு]- ரவிச்சந்திரன் சோமுவாக[4]
- ஜெ. ஜெயலலிதா மீனாவாக [4]
- நாகேஷ் சங்கரனாக[4]
- இராம பிரபா கௌரியாக[4]
- வி. கே. ராமசாமி தர்மலிங்கமாக[4]
- கே. பாலாஜி பாலுவாக[4]
- மேஜர் சுந்தரராஜன் சிவஞானமாக [4]
- டி. எஸ். முத்தய்யா சதாட்சரமாக [4]
- உதய சந்திரிகா சீதாவாக[4]
இசை
[தொகு]இப்படத்திற்கு டி. சலபதி ராவ் இசையமைத்தார்.
| பாடல் | பாடகர் | வரிகள் |
|---|---|---|
| "பாலாடைப் மறந்து" | பி. சுசீலா, வசந்தா, ஜெயதேவ் | கண்ணதாசன் |
| "கேட்டுப் பார் கேள்விகள் நூறு" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |
| "நெஞ்சுக்கு முகமே கண்ணாடி" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |
| "பகலிலே பார்க்கவந்ததேன்னு" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |
| "என்னை மன்னிக்க வேண்டும்" | பி. சுசீலா | |
| "மாடிவீட்டு மாப்பிள்ளை" | தாராபுரம் சுந்தரராஜன் | |
| "கியா கியா மசாஜ்" | டி. எம். சௌந்தரராஜன் |
வெளியீடும் வரவேற்பும்
[தொகு]மாடி வீட்டு மாப்பிள்ளை 1967 சூன் 23 அன்று வெளியானது.[5][6] படத்தை ஸ்ரீ விநாயகா மூவீஸ் விநியோகித்தது.[7] படத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தபோதிலும் அதன் நகைச்சுவை அவற்றை மறைத்துவிட்டதாக கல்கி குறிப்பிட்டது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மாடி வீட்டு மாப்பிள்ளை". கல்கி. 25 June 1967. p. 1. Archived from the original on 25 July 2022. Retrieved 21 December 2021.
- ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. Retrieved 9 July 2022.
- ↑ Narasimham, M. L. (24 September 2015). "Blast from the past: Illarikam (1959)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161209140112/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/starring-a-nageswara-rao-jamuna-girja-hemalatha-relangi-gummadi-ramana-reddy-csr-allu-ramalingaiah-r-nageswara-rao/article7685387.ece.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 "மாடி வீட்டு மாப்பிள்ளை". Pesum Padam. July 1967. p. 119. Retrieved 11 April 2022 – via Issuu.
- ↑ "மாடி வீட்டு மாப்பிள்ளை". Kalki. 25 June 1967. p. 1. Archived from the original on 25 July 2022. Retrieved 21 December 2021.
- ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". Dinamani. 6 December 2016. Archived from the original on 24 June 2020. Retrieved 9 July 2022.
- ↑ Cowie & Elley 1977, ப. 269.
- ↑ "மாடி வீட்டு மாப்பிள்ளை". Kalki. 16 July 1967. p. 35. Archived from the original on 25 July 2022. Retrieved 21 December 2021.
