மாடித் தோட்டம் அமைக்கும் முன் நினைவில் கொள்ள வேண்டியவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாடித் தோட்டம் அமைக்கும் முன் நினைவில் கொள்ள வேண்டியவைகள்[தொகு]

நாற்றுக்கண் நடுவதற்கு பாலிதீன் பை, 20லி காலி பெயிண்ட் டப்பா, பழைய அல்லது உடைந்த 20 லி தண்ணீர் கேன்கள், பழைய மூங்கில் பிரம்பு கூடை பழைய பிளாஸ்டிக் வாளி ஆகியவற்றை பயன்படுத்தலாம் மண் கொள்ள்ளவு குறைந்த பட்சம் 20-25 கிலோவகை இருக்க வேண்டும் மாடி தரையில் நீர் தேங்காமல் இருக்க பழைய செங்கல்(அ) ஹாலோ பிளாக் கற்களை அடுக்கி அதன் மேல் பயன் இல்லாத சிமென்ட் பலகைகள், பழைய கிரானைட்கல் (கீரல் விழுந்த்து) உடைந்த பலகைகள் ஆகியவற்றை ½ அடி உயரமாக வைக்கப்பட்டுள்ள செங்கள் (அ) ஹாலோ பிளாக் கற்கள் மேல் வைத்து அதன் மேல் மண் நிறப்பிய பிளாஸ்டிக் பை வைக்கலாம்.

மண் நிரப்பும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை[தொகு]

 1. 1மடங்கு செம்மண் + 1 மடங்கு மணல் + 1 மடங்கு நன்கு மக்கிய குப்பை நன்கு கலக்க வேண்டும். செம்மண் கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள மண்ணை பயன்படுத்தலாம். நகரப்பகுதியாக இருந்தால் தென்னை நார் கழிவு பயன்படுத்தலாம்.
 2. இத்துடன் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா கலைவை மண்ணுடன் கலந்தால், மண் மேலும் வளமாகும். பைகளை வரிசையாக பலகையின் அடுக்கி வரிசைக்கு வரிசை 3 அடி இடைவெளி கொடுக்கவும்.
 3. இடைவெளி 3 அடி கொடுப்பதால் செடிகளுக்கு ஊடேகளை எடுத்தல், மற்றும் சில சாகுபடி வேலைகளுக்கு எளிதாக இருக்கும். மேலும் வழிந்தோரும் தண்ணீர் தேங்காமல் இருக்கும்.
 4. பாசனத்தை பொருத்த வகை பூவானமூலம் நீர் பாச்சுவதைக்காட்டிலும் சொட்டு நீர் பாசனம் மிகவும் உகந்த்தாகும்.
 5. நிழல் வலை அமைத்து மண் நிரப்பியபைகள் தயார் செய்யும் போது நாற்றாங்கால் விடுவது அவசியம் முதலில் நமக்கு தேவையான காய்கறி செடிக்ளுக்கு முடிவு செய்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் குழித்தட்டு நாற்றாங்கள் தயார் செய்ய வேண்டும்.

குழித்தட்டு நாற்றாங்கள்[தொகு]

 1. குழித்தட்டு தென்னை நார் கழிவுடன் பாஸ்போ பேக்டீரிய, அஸோஸ் வைரில்லம், டிரைக்கோ கிராம்மாவிரிடி ஆகிய வற்றை நன்கு கலந்து (தலா 2 கிலோவாகவும்) கத்தரி மற்றும் தக்காளி நாற்றுக்களை 15-20 நாட்களில் வேருடன் எடுத்து தயாராக உள்ள பைகளில் நடவு செய்ய வேண்டும்.
 2. பெரிய விதைகளான, பொரியல்தட்டை, வெண்டை, செடிஅவரை ஆகிய விதைகளை நேரடியாக பைகளில் நடவு செய்யலாம்.
 3. பூச்சிகளை பொருத்தவரை கத்தரி தக்காளி பயிர்களால் மாவுப்பூச்சி தாக்குதல் தென்படும் அதை ஆரம்ப நிலையில் கவனித்து கைகளால் பூச்சிகளை நசுக்கிவிடலாம். இரு நாட்களுக்கு ஒரு முறை மூலிகை பூச்சி விரட்டி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
 4. பயறுவகை பயிர்களை அசுவினி தாக்குத தென்படும். அதைக் கட்டுப்படுத்த 10 லி தண்ணீர் +30 மி வேப்பெண்ணெய் + சோப்பு ஆயில் 1 மி . கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப் படுத்தலாம்.

அறுவடை[தொகு]

 1. தினமும் காலையில் காய்கள் முற்றாத நிலையில் பறித்து அமைக்கலாம்.
 2. முதலில் குழித்தட்டில் முக்கால அளவு ¾ தென்னை நள் கழிலை நிரப்பி பின் நமக்கு தேவையான விதைகளை (சிறிய விதைகள்) குழிக்கு தென்னை நார்க்கழியை பரப்ப வேண்டும். முடிந்தவரை நாட்டு காய்கறி விதைகளை தேர்வு செய்தல் நலம் அதன் பின்னர். கைகளால் விதை நட்ட குழிகளில் மேலோட்டமாக அழுத்தவும் கொடுத்தல் வேண்டும். பின்னர் பூவாளி கொண்டு நன்கு நனையும் வரை நீர் விடவும்.
 3. நடவு செய்த குழிதட்டுக்களை நிழல் வலையில் வப்பதுக் இருந்தால் தேவையறிந்து நீர் பாசனம், செய்ய வேண்டும். நிழல் வலை இல்லாமல் இருந்தால் காலை, மாலை இருவேலையும் நீர் தெளிக்க வேண்டும்.
 4. நிழல் வலைஇல்லாமல் நேரடி சூரிய ஒளி படுமாயின் குழிதட்டின் மேல் செய்தி தாள்களை கொண்டு முடவேண்டும். பின் அதன் மேல் காலை, மாலை இரு வேளைகளிலும் நீர் தெளித்தல் அவசியம்.

மேற்கோள்கள்[தொகு]

 1. www.tnau.org.in