மாடித் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்தாலியில் உள்ள ஒரு சிறிய மொட்டை மாடியின் தோற்றம். மேல் மட்டத்திலிருந்து தடுப்புச் சுவரில் தாவரங்கள் படரவிடப்பட்டுள்ளன.

தோட்டக்கலையில், மாடித் தோட்டம் (Terrace garden) என்பது ஒரு கட்டடத்தின் மேலே உள்ள தட்டையான மொட்டை மாடியில் அமைக்கப்படும் தோட்டம் ஆகும்.

வரலாறு[தொகு]

பாரசீகம்

சம தளமானது பொதுவாக மன ஆறுதல், ஓய்வு போன்றவற்றிற்கு அவசியமானதாகக் கருதப்படுவதால், மொட்டை மாடியானது ஒரு உயரமான காட்சித் தளமாக பண்டைய பாரசீக தோட்டக்கலை பாரம்பரியத்தில் துவக்கத்தில் தோன்றியது. ஒரு உயர்ந்த பார்வை தளமாக பண்டைய பாரசீக தோட்டக்கலை பாரம்பரியத்தில் ஆரம்பத்தில் தோன்றியது. மொட்டை மாடியில் இருந்து படிப்படியாக கீழிறங்கி வருவது போன்ற தோட்டத்தை மொட்டை மாடியில் அமைக்கும் பழமையான தோட்டக்கலை நடைமுறை இருந்து வந்தது. பாபிலோனின் தொங்கு தோட்டம் ஜிகுராட்டில் உள்ளதைப் போன்ற படிகள் கொண்ட ஒரு செயற்கை மலையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பண்டைய உரோம்

சின்ன ஆசியாவின் மலைப்பாங்கான பகுதிகளில் இருந்து பாரசீக தோட்டக்கலையின் அனுபவத்தை லுகுல்லஸ் உரோமுக்கு மீண்டும் கொண்டு வந்தார். அவை இயற்கையான சாய்வு படிக்கட்டுகளால் இணைக்கப்பட்ட மொட்டை மாடிகளில் வரிசையாக வடிவமைக்கப்பட்டது.

மிட் வேல்ஸில் உள்ள போவிஸ் கோட்டையகத்தில் உள்ள ஒரு தளத்தில் வளர்ந்து தாங்கியுள்ள தாவரங்கள்.

காப்ரியில் பேரரசுக்கு உரிய மாளிகைகள் பல்வேறு மாடித் தோட்டங்களை ஏற்படுத்த ஏதுவாக கட்டப்பட்டன. எர்குலேனியத்தில் உள்ள பாப்பிரியின் கடலோர மாளிகையில், ஜூலியஸ் சீசரின் மாமனாரின் மாளிகைத் தோட்டங்கள் தொடர்ச்சியாக மொட்டை மாடிகளில் இருந்து கீழிறங்கிவந்து, நேபிள்ஸ் விரிகுடாவின் இனிமையான மற்றும் மாறுபட்ட காட்சியை அளித்தது. அவற்றில் சில மட்டுமே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மொட்டை மாடிக்கு கீழே உள்ள கிரிப்டோபோர்டிகசில் உள்ள அறைகள் பூ பூத்த, பழங்கள் கொண்டதான மரங்கள் கொண்டதாக வரையப்பட்டுள்ளன.

இத்தாலிய மறுமலர்ச்சி காலம்

இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் போது, வன இயற்கை மீது மனிதனின் கட்டுப்பாட்டை காட்டும் விதமாக மொட்டை மாடியில் படிக்கட்டுகள் மற்றும் நீர் அம்சங்கள் இணைந்ததாக மாடித்தோட்டம் வடிவமைக்கப்பட்டது.

சமகாலத்தில்[தொகு]

தற்கால மாடித் தோட்டங்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் அமைக்கப்படுகின்றன. அவை தரை மட்டத்தைத் தவிர அடுக்குமாடி குடியிருப்பு அல்லது தனிவீட்டின் மொட்டை மாடியின் ஒரு கூறாக அமைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் கூரைத் தோட்டங்களுடன் ஒத்து விவாதிக்கப்படுகின்றன. இருப்பினும் இவை ஒருபோதும் உண்மையில் கூரைத் தோட்டங்கள் அல்ல. மாறாக பால்கனிகள் மற்றும் மொட்டைமாடி தளங்களில் சிறியதாக அமைக்கப்படுகின்றன. இந்த தோட்டங்கள்ளானது தொட்டிகளில் வளர்க்கப்படும் தாவரங்களால் ஆனவை. தொட்டிகளில் காய்கறிகள், கீரைகள், மலர்கள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. இவற்றிற்கு தானியங்கி முறையில் சொட்டு நீர் பாசனம், நுண்நீர் பாசன முறைகள் மூலம் இந்த மாடிகள் பசுமையான தோட்டங்களாக மாற்றறப்படுகின்றன.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடித்_தோட்டம்&oldid=3734519" இலிருந்து மீள்விக்கப்பட்டது