உள்ளடக்கத்துக்குச் செல்

மாடன் கொடை விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாடன் கொடை விழா
சுவரொட்டி
இயக்கம்ஆர். தங்கபாண்டி
தயாரிப்புகேப்டன் சிவப்பிரகாசம் உதயசூரியன்
கதைஆர். தங்கபாண்டி
இசைஆர் விபின்
நடிப்பு
  • கோகுல் கௌதம்
  • சாருமிசா
  • டாக்டர் சூரிய நாராயணன்
ஒளிப்பதிவுசின்ராச்சு ராம்
படத்தொகுப்புஆர் இரவிச்சந்திரன்
கலையகம்தெய்வா தயாரிப்பு நிறுவனம்
வெளியீடு14 மார்ச் 2025 (2025-03-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாடன் கொடை விழா (Maadan Kodai Vizha) என்பது 2025 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும், ஆர். தங்கபாண்டி எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சூரிய நாராயணன், சூப்பர்குட் சுப்பிரமணியன், சிறீ பிரியா ஆகியோருடன் கோகுல் கௌதம், சாருமிசா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேவா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் கேப்டன் சிவப்பிரகாசம் உதயசூரியன் திரைப்படத்தை தயாரித்தார். [1]

மாடன் கொடை விழா 2025 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]
  • முருகனாக கோகுல் கௌதம்
  • அமுதவல்லி வேடத்தில் சாருமிசா
  • ஞானமுத்துவாக சூரிய நாராயணன்
  • தாமசு கதாபாத்திரத்தில் சூப்பர் குட் சுப்பிரமணியன்
  • மேரியாக சிறீபிரியா
  • மாதவியாக எசு இராசுமிதா
  • சிவ வேலன்-மாசானம்
  • பாலவேசமாக பவுல்ராச்சு மாரியப்பன்

தயாரிப்பு

[தொகு]

ஆர் தங்கபாண்டி இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக சின்ராச்சு ராம், தொகுப்பாளராக இரவிச்சந்திரன் ஆர் மற்றும் இசையமைப்பாளராக விபின் ஆர் ஆகியோர் படத்தில் பங்குபெற்றனர். [2]

வரவேற்பு

[தொகு]

மாலை மலர் இதழில் விமர்சகர் ஒருவர் 2.5/5 என்ற மதிப்பெண் வழங்கியிருந்தார். "சுடலை மாடன் கொடை விழாவை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்குனர் இரா தங்கபாண்டி இயக்கியுள்ளார் என்றும் கூறியிருந்தார். இயக்குநர் திரைப்படத்தில் காதல், வழிபாட்டு முறைகள், மதம் மற்றும் திருமணம் பற்றி பேசுகிறார் என்றும் உரையாடல்கள் படத்திற்கு பலத்தை சேர்க்கின்றன என்றும் விமர்சித்து இருந்தார். சினிமா விகடன் விமர்சகர் கூறுகையில்," கதையின் அடிப்படையில் சுவாரசியம் இருந்தாலும், திரைக்கதை கணிக்கக்கூடியது ஆனால் இரண்டாம் பாதியில் கடினமாகிறது என குறிப்பிட்டுள்ளார். [3][4] தினதந்தி நாளிதழின் விமர்சகர், "காதல், மோதல் மற்றும் குடும்ப உறவை சித்தரிக்கும் சுவாரசியமான மற்றும் உற்சாகமான திரைக்கதையுடன் ஒரு தரமான திரைப்படத்தை இயக்குனர் ஆர். தங்கபாண்டி வழங்கியுள்ளார் என்று கூறியிருந்தார்..[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'மாடன் கொடை விழா'...ரிலீஸ் தேதி அறிவிப்பு". Daily Thanthi. 2025-03-04. Retrieved 2025-03-09.
  2. "சிவாஜி வீடு ஏலம்.. பிரபு எனக்கு போன் பண்ணி "அப்படி" சொல்லி அழுதார்! தயாரிப்பாளர் ராஜன் எமோஷனல்". One India Tamil. 2025-03-08. Retrieved 2025-03-09.
  3. "மாடன் கொடை விழா திரைவிமர்சனம் | Maadan Kodai Vizha Review in Tamil". Maalai Malar. 2025-03-14. Retrieved 2025-03-14.
  4. "மாடன் கொடை விழா விமர்சனம்: ஆர்வமூட்டும் களம்; இயல்பான நெல்லை கிராமம்; ஆனால் படமாகக் களைகட்டுகிறதா?". Vikatan. 2025-03-15. Retrieved 2025-03-15.
  5. "'மாடன் கொடை விழா' திரைப்பட விமர்சனம்". Daily Thanthi. 2025-03-15. Retrieved 2025-03-15.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடன்_கொடை_விழா&oldid=4286748" இலிருந்து மீள்விக்கப்பட்டது