மாடக் கோவில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்று நிலை மாடக் கோயிலான சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்

மாடக் கோவில் என்பது மாடி போன்ற அமைப்புடைய கோவிலாகும். இவ்வமைப்பில் ஒன்றின் மீது ஒன்றாக நிலைகள் அமைந்திருக்கின்றன. கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே இவ்வகையான மாடக்கோயில்கள் இருந்துள்ளன.

வரலாறு[தொகு]

தற்போது காணப்படும் மாடக் கோயில்கள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு காலத்திற்கு பிற்பட்டவை. என்றாலும் சங்க காலத்திலே மாடக் கோயில்கள் தமிழ்நாட்டில் இருந்தன. கடைச்சங்க காலத்தைச் சேர்ந்த சோழன் கோச்செங்கணான் சிவபெருமானுக்கு 70 மாடக் கோயில்கள் அமைத்ததாக திருமங்கையாழ்வார் தன் திருநறையூர் பாசுரத்தில் "எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக் குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்" என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனார் அவர் காலத்தில் எழுபத்தெட்டு மாடக் கோயில்கள் இருந்ததை அடைவு திருத்தண்டகத்தில் பாடியுள்ளார்.[1]

வகைகள்[தொகு]

மாடக் கோயில்கள், அதன் நிலைகளின் எண்ணிக்கு தக்கவாறு பெயரிப்பட்டுள்ளன.

 • ஒன்பது நிலை மாடக் கோயில்கள்
 • ஐந்து நிலை மாடக் கோயில்கள்
 • மூன்று நிலை மாடக் கோயில்கள்
 • இரண்டு நிலை மாடக் கோயில்கள்

இவற்றில் முன்று மற்றும் இரண்டு நிலை மாடக் கோயில்களே தற்போது வழிபாட்டில் உள்ளன.

கோயில் அமைப்பு[தொகு]

இரண்டு நிலை மாடக் கோயிலின் அமைப்பானது கீழ்கண்ட எட்டு உறுப்புகள் கொண்டதாக அமைகிறது.

 1. தரை
 2. சுவர்
 3. தளவரிசை
 4. சுவர்
 5. தளவரிசை
 6. கழுத்து
 7. கூரை
 8. கலசம்

மூன்று நிலை மாடக்கோயில்களின் கீழ்கண்ட பத்து உறுப்புகளை கொண்டதாக அமைகிறது.

 1. தரை
 2. சுவர்
 3. தளவரிசை
 4. சுவர்
 5. தளவரிசை
 6. சுவர்
 7. தளவரிசை
 8. கழுத்து
 9. கூரை
 10. கலசம்

மாடக் கோவில்கள்[தொகு]

கருவி நூல்[தொகு]

 • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி வேங்கடசாமி

ஆதாரங்கள்[தொகு]

 1. [1]தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தூங்கானை மாடம் (கட்டுரை), பக்கம் 19 தமிழ்ப் பொழில் இதழ், 1958, ஏப்ரல், மே

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடக்_கோவில்கள்&oldid=3695129" இலிருந்து மீள்விக்கப்பட்டது