உள்ளடக்கத்துக்குச் செல்

மாஜு விரைவுச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாஜு விரைவுச்சாலை
Maju Expressway
(Lebuhraya Kuala Lumpur-Putrajaya)
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு : மாஜு நிறுவனம்
நீளம்:26 km (16 mi)
வரலாறு:கட்டுமான தொடக்கம்: 2004
கட்டுமான நிறைவு: 5 திசம்பர் 2007
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கோலாலம்பூர்; கம்போங் பாண்டான் பரிமாற்றச் சாலை
 கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1

E37 கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை
E37 கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை
E10 பந்தாய் புதிய விரைவுச்சாலை
E5 சா ஆலாம் விரைவுச்சாலை
3215 செரி கெம்பாங்கான் சாலை

E6 புத்ராஜெயா இணைப்பு

தெற்கு முடிவு:சைபர்ஜெயா; புத்ராஜெயா பரிமாற்றச் சாலை
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கோலாலம்பூர்; சாலாக் செலாத்தான்; செரி பெட்டாலிங்; புக்கிட் ஜாலில்; புத்ராஜெயா; சைபர்ஜெயா
நெடுஞ்சாலை அமைப்பு

மாஜு விரைவுச்சாலை அல்லது கோலாலம்பூர்-புத்ராஜெயா விரைவுச்சாலை (ஆங்கிலம்; Maju Expressway (MEX) அல்லது Kuala Lumpur–Putrajaya Expressway (KLPE) & KL–KLIA Dedicated Expressway; E20 மலாய்: Lebuhraya Kuala Lumpur-Putrajaya) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு விரைவுச் சாலை வலையமைப்பாகும்.

26 கிமீ (16 மைல்) நீளமுள்ள இந்த விரைவுச்சாலை, கோலாலம்பூர் மாநகர மையத்தை, சிலாங்கூர், செப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் (KLIA) இணைக்கிறது. இந்த விரைவுச்சாலை, மலேசிய பல்லூடகப் பெருவழியின் (MSC) முதுகெலும்பாகும்.[1]

இந்த விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 0, கோலாலம்பூர் கம்போங் பாண்டான் பரிமாற்றச் சாலையில் (Kampung Pandan Interchange), துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு பரிமாற்றச் சாலைக்கு (Tun Razak Exchange) வெளியே அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

மாஜு விரைவுச்சாலையின் கட்டுமானம் திசம்பர் 6, 2004-இல் தொடங்கி; திசம்பர் 5, 2007-இல் நிறைவடைந்து; திசம்பர் 13, 2007-இல் வாகனப் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டது. இந்த விரைவுச்சாலை மலேசியத் தலைநகரான கோலாலம்பூருக்கும், மலேசிய அரசாங்கத்தின் புதிய நிர்வாக மையமான புத்ராஜெயாவிற்கும் இணைப்பை வழங்குகிறது.

மேலும் மலேசிய பல்லூடகப் பெருவழி (MSC); மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் மையமான சைபர்ஜெயாவிற்கும் இடையே துரிதமான போக்குவரத்து இணைப்பையும் வழங்கி வருகிறது.[1]

இரட்டை வழித்தடங்களைக் கொண்ட மாஜு விரைவுச்சாலையை; மாஜு எக்ஸ்பிரசுவே (Maju Expressway Sdn Bhd) (MESB) நிறுவனம் இயக்குகிறது. அந்த நிறுவனம் அரசாங்கத்திடம் இருந்து 33 ஆண்டு காலச் சலுகையைப் பெற்றுள்ளது.[1]

இணைப்பு

[தொகு]

புத்ராஜெயா, சைபர்ஜெயா, கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் கோலாலம்பூர் குறைந்த விலை வானூர்தி முனையம் (Low-Cost Carrier Terminal) (LCCT)[2] ஆகியவற்றை கோலாலம்பூருடன் இணைக்கும் நெறிமுறை விரைவுச்சாலை என மாஜு விரைவுச்சாலை (MEX) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாஜு விரைவுச்சாலை, புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூருக்கும் இடையிலான பயண நேரத்தை 60 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களாக அல்லது முந்தைய பயண நேரத்தில் பாதியாகக் குறைக்கிறது. அதே வேளையில் கம்போங் பாண்டான், சாலாக் செலாத்தான், கூச்சாய் லாமா, புக்கிட் ஜாலில் மற்றும் புத்ராஜெயா உத்தாமா ஆகிய இடங்களில் மாற்றுச் சாலைகளையும் கொண்டுள்ளது.[1]

கூறுகள்

[தொகு]
  • இந்த விரைவுச் சாலை, வாகனக் கண்டுபிடிப்பான்கள் மற்றும் மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி (CCTV) கருவிகளை உள்ளடக்கிய போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அமைப்பை (Traffic Control and Surveillance System) வழங்குகிறது.
  • அவசர தொலைபேசிகள் மற்றும் மாறும் தகவமைப்பு பலகைகள் (Variable Message Signs)
  • விரைவுச் சாலையில் உதவி தேவைப்படும் ஓட்டுநர்களுக்கு உதவிகள் செய்ய மாஜு விரைவுச்சாலை ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
  • ஓட்டுநர் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக முழு விரைவுச் சாலையும் இரவில் முழுமையாக ஒளிரும்.
  • 90 கிமீ/மணி வேக வரம்பு[3]
  • விரைவுச்சாலைகளில் பல மேம்பாலங்கள்
  • புக்கிட் ஜாலில் மற்றும் செரி கெம்பாங்கான் இடையே நீண்ட நேரான பிரிவுகள்
  • சாலாக் செலாத்தான் பகுதியில் இருந்து கோலாலம்பூர் வானலைக் காட்சிகள்

சுங்கக் கட்டணங்கள்

[தொகு]
பிரிவு வாகனங்களின் வகை கட்டணம்
(மலேசிய ரிங்கிட் RM)[4]
சாலாக் செலாத்தான் செரி கெம்பாங்கான் புத்ராஜெயா
0 விசையுந்துகள்
(இரண்டு அச்சுகள் மற்றும் இரண்டு சக்கரங்கள் கொண்ட வாகனங்கள்)
இலவசம்
1 தனியார் வாகனங்கள்
(இரண்டு அச்சுகள் மற்றும் மூன்று அல்லது நான்கு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் (வாடகை உந்துகள் மற்றும் பேருந்துகள் தவிர)))
2.00 2.20 3.50
2 கூடு உந்துகள் மற்றும் பிற சிறிய சரக்கு வாகனங்கள்
(இரண்டு அச்சுகள் மற்றும் ஐந்து அல்லது ஆறு சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (பேருந்துகள் தவிர))
4.00 4.40 7.00
3 பெரிய சுமையுந்துகள்
(மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகளைக் கொண்ட வாகனங்கள் (பேருந்துகள் தவிர))
6.00 6.60 10.50
4 வாடகை உந்துகள் 1.00 1.10 1.80
5 பேருந்துகள் 1.50 2.20 2.50

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "About Mex – Maju Expressway Sdn Bhd". www.mex.com.my.
  2. "LCCT at Sepang was constructed on a fast-track basis at the beginning of June 2005 and it's fully operational on 23 March 2006". lcct.com.my. Retrieved 4 October 2025.
  3. "Maju Expressway Sdn Bhd – MEX". www.mex.com.my.
  4. "Toll Rates – Maju Expressway Sdn Bhd". www.mex.com.my.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஜு_விரைவுச்சாலை&oldid=4389250" இலிருந்து மீள்விக்கப்பட்டது