உள்ளடக்கத்துக்குச் செல்

மாசு நீக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விமானந் தாங்கிக் கப்பலில் உள்ள விமான தளத்தை மாலுமிகள் சுத்தம் செய்கிறார்கள்.

மாசு நீக்கல் (Decontamination) என்பது ஒரு பொருள் அல்லது பகுதியில் உள்ள இரசாயனங்கள், நுண்ணுயிரிகள் மற்றும் கதிரியக்கப் பொருட்கள் உள்ளிட்ட மாசுபாடுகளை அகற்றும் செயல்முறையாகும். கிருமி அகற்றம், அழுக்கு நீக்கம், தூய்மையாக்கல் என்று பலபெயர்களால் இச்செயல்முறை அழைக்கப்படுகிறது. பொதுவாக மனிதர், சூழல் அல்லது பொருட்களுக்கு தீங்கு விளையாமல் இருக்க இச்செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. சுத்தம் செய்வதற்கு மாறாக, அத்தகைய மாசுபாடுகளால் ஏற்படும் ஆபத்தை குறைக்க எடுக்கப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கையும் மாசு நீக்கும் நடவடிக்கையாகவே குறிக்கப்படுகிறது.

பல் மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் கால்நடை அறிவியல் உள்ளிட்ட மருத்துவ சூழல்களில், உணவு தயாரிக்கும் செயல்பாட்டில், சுற்றுச்சூழல் அறிவியலில்[1] மற்றும் தடயவியல் அறிவியலில் மாசு நீக்கும் செயல்முறை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

மாசு நீக்கும் முறைகள்

[தொகு]

மாசுக்களை பாதுகாப்பாக நீக்கி, அந்த இடத்தை மீண்டும் பாதுகாப்பாகப் பயன்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டு வருவதற்கு பல முறைகள் பயன்படுகின்றன.[3]

தண்ணீரால் கழுவுதல், சோப்பால் சுத்தம் செய்தல், சூடாக்கி வடிகட்டி சுத்தம் செய்தல் போன்றவை இயற்பியல் செயல்முறைகளாகும். கிருமிநாசினி, ஆல்ககால், போன்ற இரசாயனங்களை பயன்படுத்தி சுத்தம் செய்தல் வேதியியல் செயல்முறைகளாகும். பாக்டீரியா, வைரசு, பூஞ்சை போன்ற உயிரியல் மாசுக்களை அகற்றும் செயல்முறைகள் உயிரியல் செயல்முறைகளாகும். கதிர்வீச்சு துகள்கள் படிந்திருந்தால் அவற்றை கழுவி, சுரண்டி அல்லது சிறப்பு முறைகளால் அகற்றுதல் கதியக்க மாசு நீக்கல் எனப்படுகிறது.

  • நோய்க்கிருமி எதிர்ப்பு
  • தொற்றுநீக்கி, நச்சுக் கொல்லி
  • உடல் சுத்தம்
  • கிருமியழித்தல்
  • மீயொலிசார் தூய்மையாக்கம்
  • நீர்த்தூய்மையாக்கம்

பெரும்பாலும் இச்செயல்முறைகள் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், இரசாயன தொழிற்சாலைகள், விபத்துப் பகுதிகள், தொற்று நோய் பரவல் தடுப்பு தேவைப்படும் இதர பகுதிகள், இராணுவம் போன்ற இடங்களில் இச்செயல்முறைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ""Water Decontamination", in McGraw Hill Yearbook of Science and Technology 2004, p 372" (PDF). Archived from the original (PDF) on 2020-01-09. Retrieved 2013-08-16.
  2. Jehaes, Els; Gilissen, Anja; Cassiman, Jean-Jacques; Decorte, Ronny (1998). "Evaluation of a decontamination protocol for hair shafts before mtDNA sequencing". Forensic Science International 94 (1–2): 65–71. doi:10.1016/S0379-0738(98)00052-8. பப்மெட்:9670485. 
  3. Health & Safety Executive: Methods of decontamination. Accessed 16 August 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசு_நீக்கல்&oldid=4417429" இலிருந்து மீள்விக்கப்பட்டது